சென்னை :"காவிரி நதி நீர் பங்கீட்டு ஆணையத்தை, கோடை காலம் துவங்குவதற்கு முன், நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, பிரதமர் மன்மோகன்சிங்கை, முதல்வர் ஜெயலலிதா கேட்டுக் கொண்டுள்ளார்.
இதுகுறித்து,பிரதமருக்கு,ஜெயலலிதா எழுதியுள்ள கடிதம்:காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பை, மத்திய அரசிதழில் வெளியிட்டதைத் தொடர்ந்து, இறுதித் தீர்ப்பை நிறைவேற்ற, காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் காவிரி நீர் ஒழுங்குமுறை குழு அமைக்க வேண்டும் என, பிப்.,22ம் தேதி எழுதிய கடிதத்தில் வலியுறுத்தி இருந்தேன்.கோடை காலத்தில், கிருஷ்ணராஜ சாகர், கபினி, ஹேமாவதி, ஹாரங்கி அணைகளில் தேங்கும் நீரை, முழுமையாக பயன்படுத்திக் கொள்ளும் பழக்கத்தை கர்நாடக அரசு கொண்டுள்ளது. கோடை மழை, ஏப்ரல் மூன்றாவது வாரத்தில் துவங்கும். இந்நீரை, கர்நாடகம் கோடை கால பயிர்களுக்கு பயன்படுத்திக் கொண்டு, தமிழகத்தின் பங்கை அளிப்பதில்லை.
கோடை காலத்துக்கு பயன்படுத்துவதற்காக, கர்நாடக அணைகளில் நீரை தேங்க விடாமல், கர்நாடகமே பயன்படுத்திக் கொள்கிறது. எனவே, நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பின் படி, காவிரி மேலாண்மை வாரியம், காவிரி நீர் ஒழுங்குமுறை குழு ஆகியவற்றை அமைத்து, வரும் மே முதல் வாரத்திலிருந்து, நீர் பங்கீட்டை கண்காணித்து, அமல் செய்யவேண்டும்.இதன் மூலம் தான், தமிழகத்தின், 2013-14ம் ஆண்டின் சாகுபடியை உறுதி செய்ய முடியும். எனவே, நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பின் படி, காவிரி நதி நீர் பங்கீட்டு ஆணையத்தை அமைக்க, மத்திய நீர்வள துறைக்கு உத்தரவிட வேண்டும் என, மீண்டும் ஒரு முறை வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறேன்.இவ்வாறு ஜெயலலிதா கூறியுள்ளார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
திமுக இலங்கை போர் நிறுத்தம் கோரி மத்திய அரசு உடனே நிறைவேற்றியது இப்போ முந்தி கொண்டு காவேரி மேலாண்மை வாரியம் அமைக்க பாராளுமன்றத்தில் பேசி அதையும் நிறைவேற்றிவிடுவர்கள் என்று நம்பும் யாரும் பகல் கனவு காண்பவர்கள். இன்றைய நிலைமையில் திமுக - வால் மத்திய அரசை நிர்பந்திக்க முடியாது என்பது நிதர்சனம்.எனவே எதார்த்த நிலையை உணர்ந்தவர்கள் முதல்வர் எடுக்கும் முயற்சியை விமர்சிக்க மாட்டார்கள்.
ka
முதல்வர் இன்னும் இரண்டு கடிதம் போட்டு விட்டு அதற்க்கு பின்பு மீண்டும் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தான் தொடரவேண்டும் அப்போ தான் அந்த மேலாண்மை ஆணையம் கிடைக்கும் ஆனால் அதற்க்கு இன்னும் இரண்டு ஆண்டு ஆகும். இந்த நாட்டில் எல்லாமே கோர்ட் தான் நடத்துகின்றது இந்த ஜனநாயகத்தை எல்லாம் இந்த காங் கட்சி வெங்காயத்தை விட கேவலமா மதிகின்றது.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.