சென்னை:"ஐ.ஏ.எஸ்., புதிய தேர்வு முறையை உடனடியாக வாபஸ் பெற வேண்டும்' என, பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு தி.மு.க., தலைவர் கருணாநிதி கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து பிரதமருக்கு, கருணாநிதி எழுதிய கடித விவரம்:மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம், ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., - ஐ.எப்.எஸ்., உள்ளிட்ட சிவில் சர்வீசஸ் மெயின் தேர்வில், சில மாற்றங்களை அறிவித்துள்ளது. பிராந்திய மொழி இலக்கியத்தில் பட்டம் பெற்றவர்கள் மட்டுமே, அந்த மொழியில் தேர்வு எழுதலாம் என்ற இந்த மாற்றம், கிராமப்புற மாணவர்களுக்கு கடும் பாதிப்பை ஏற்படுத்தும்.இதனால், தேர்ச்சி பெற்ற, 25 மாணவர்கள் மட்டுமே அந்த பிராந்திய மொழிகளில் விடை எழுத முடியும். இதன் மூலம் தேர்வு எழுதுபவர்கள் கட்டுப்படுத்தப் படுகின்றனர். அதே நேரத்தில், இந்தி மற்றும் ஆங்கிலத்தில் தேர்வு எழுதுபவர்களுக்கு, இது போன்ற கட்டுப்பாடுகள் பொருந்தாது என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் இலக்கியத்தை விருப்ப பாடமாக தேர்ந்தெடுத்து இருந்தாலும், தமிழ் இலக்கிய பட்டதாரிகள் மட்டுமே, தமிழ் வழியில் தேர்வு எழுத முடியும்.இதுபோன்ற கட்டுப்பாடுகள், சிவில் சர்வீசஸ் தேர்வு எழுதும் கிராமப்புற மாணவர்களுக்கு. ஒரு தடையாக உள்ளது. அவர்கள் இந்தி அல்லது ஆங்கில வழியில் கல்வி பயில வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.மத்திய அரசு பணியாளர் தேர்வாணையத்தின் புதிய தேர்வு முறை மாற்றம், இந்தியை மறைமுகமாக திணிப்பது போல உள்ளது. நேருவின் வாக்குறுதியை மீறுவதாக உள்ளது.மேலும் இது, கிராமப்புற மற்றும் நகர்புற மாணவர்களிடையே ஆரோக்கியமற்ற, சமநிலையற்ற சூழலை உருவாக்குவதாக உள்ளது. எனவே, மத்திய அரசு பணியாளர் தேர்வாணையத்தின் புதிய தேர்வு முறையை, உடனடியாக வாபஸ் பெற வேண்டும்.
இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தில் அங்கீகரிக்கப்பட்ட, ஏதாவது ஒரு மொழியில் மத்திய அரசு பணியாளர் தேர்வு எழுத அனுமதிக்க வேண்டும். அகில இந்திய சர்வீசஸ் தேர்வுகளை, அனைத்து பிராந்திய மொழியிலும் நடத்த வேண்டும் என்பது, தி.மு.க., வின் நீண்ட நாள் கோரிக்கை.இவ்வாறு கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
கடிதம்.... கடிதம்....என்று ஏன் உயிரை வாங்கறீங்க ..... பல வருசமா இந்த மாதிரியே மக்களை ஏமாற்றுகிறீர்கள்..... எதாவது ஒரு விஷயம் பிரச்சனை ஆனால் "அன்றே நான் கடிதம் போட்டேன்" என்பது ...உதாரனமாக இந்த விசயத்தில் பார்போம் ...இன்று கடிதம் போட்டாச்சு ..... இதோடு இவர் பாடு முடிந்து விட்டது ... வரும் காலங்களில் தமிழகத்திற்கு ஒரு பிரச்னை என்று வரும் போது..... "நான் அன்றே கடிதம் போட்டேன் " என்று இன்றைய தேதியை சொல்லி அறிக்கை விடுவது .... இந்த மாதிரி அரசியல் தான் காவேரி ஆறு விசயத்தில் நடந்தது .... இந்த விசயங்களின் முடிவு தான் என்ன .... அய்யா தயவு செய்து திருந்துங்க ....
இந்த தமிழ் தாத்தாவின் கோரிக்கை தவறானது. இப்படி ஒரு சட்டம் வந்தா தான் தமிழ் நாட்டில் அங்கிலம் மற்றும் இந்தி கட்டாய கல்வி ஆகும். ஏனென்றால் பிற மாநில மாணவர்கள் அனைவருகும் குறைந்தது 3 மொழி தெரிகிறது. தமிழன் மட்டும் தான் தமிழ் தமிழ் என்கிறான். பிற மாநிலம் சென்று கஷ்ட படுகிறான் எனவே அங்கிலம் மற்றும் இந்தி முக்கியம். தமிழை போல அதையும் படிக்கச் வேண்டும். students are ready to study everythg எவ்ளவோ படிகுறோம் எத படிக்க மாட்டோமா...............

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.