Sri Lanka hopeful of Indian backing at UNHRC | மனித உரிமை ஆணையத்தில் தீர்மானம்: இந்தியா மீது இலங்கை நம்பிக்கை| Dinamalar

மனித உரிமை ஆணையத்தில் தீர்மானம்: இந்தியா மீது இலங்கை நம்பிக்கை

Added : மார் 13, 2013 | கருத்துகள் (9)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
மனித உரிமை ஆணையத்தில் தீர்மானம்: இந்தியா மீது இலங்கை நம்பிக்கை»Sri Lanka hopeful of Indian backing at UNHRC

கொழும்பு : "சர்வதேச மனித உரிமை ஆணையத்தில், அமெரிக்கா தாக்கல் செய்துள்ள தீர்மானம் தொடர்பாக, இந்தியா எங்களுக்கு சாதகமாக ஓட்டளிக்கும் என நம்புகிறோம்' என, இலங்கை தெரிவித்துள்ளது.

இலங்கையில், 2009ல், விடுதலை புலிகளுடன் நடந்த இறுதிக்கட்ட போரில், அப்பாவிகள் பலர் கொல்லப்பட்டனர். இந்த சண்டையின் போது, போர் குற்றம் நடந்ததாகவும், அது குறித்து சர்வதேச அளவில், நம்பிக்கைக்குரிய விசாரணை நடத்தப்பட வேண்டும்' என, அமெரிக்கா, ஜெனிவாவில் உள்ள சர்வதேச மனித உரிமை ஆணையத்தில் தீர்மானம் ஒன்றை தாக்கல் செய்துள்ளது.இந்த தீர்மானத்தின் மீதான விவாதம், நாளை துவங்குகிறது. இது தொடர்பான ஓட்டெடுப்பு, வரும் 21ம்தேதி, நடக்கிறது.

இந்த தீர்மானத்தின் போது நடக்கும் விவாதத்தில், தங்கள் நாட்டு தரப்பு நியாயத்தை எடுத்துரைப்பதற்காக, இலங்கை அமைச்சர் மகிந்தா சமரசிங்கா, ஜெனிவாவுக்கு சென்றுள்ளார். இதற்கிடையே, இலங்கை வெளியுறவு செயலர் கருணதிலகா அமுனுகாமா குறிப்பிடுகையில், ""அமெரிக்கா தாக்கல் செய்துள்ள தீர்மானம் தொடர்பாக, கடைசி நேரத்தில், இந்தியா, எங்களுக்கு சாதகமாக ஓட்டளிக்கும் என நம்புகிறோம்,'' என்றார்.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Yoga Kannan - Al Buraidh,சவுதி அரேபியா
14-மார்-201304:16:50 IST Report Abuse
Yoga Kannan மொவனே ஒட்டு மட்டும் அவனுக்கு சப்போட்டா போட்டே ....இந்தியாவை காலி பண்ணிட்டு லங்காவுக்கு குடி பெயர வேண்டியதுதான்.....ஒங்க கூட்டம் மொத்தமா...?
Rate this:
Share this comment
Cancel
villupuram jeevithan - villupuram,இந்தியா
14-மார்-201304:15:31 IST Report Abuse
villupuram jeevithan மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டால் முன்னாள் பாகிஸ்தான் அதிபர் கதி தான் உங்களுக்கும், இலங்கைக்குள்ளும் நுழைய முடியாது.
Rate this:
Share this comment
Cancel
villupuram jeevithan - villupuram,இந்தியா
14-மார்-201304:13:55 IST Report Abuse
villupuram jeevithan சோனியாவும், கருணாவும் மத்தியில் இருக்கும் வரை உங்களுக்கு கவலை இல்லை, நீங்கள் காப்பாற்றப்படுவீர். ஆட்சி மாற்றத்திற்கு பிறகு தெரியும் உங்கள் கதி.
Rate this:
Share this comment
Cancel
Sekar Sekaran - Jurong-West,சிங்கப்பூர்
14-மார்-201303:29:47 IST Report Abuse
Sekar Sekaran இலங்கையின் எதிர்பார்ப்பு "நிச்சயம்" அரங்கத்தில் நடக்கும்..இல்லை என்றால்..இந்த போர் நடக்க காரணமானவர்கள் என்று உலகிற்கு காட்டிகொடுக்க இலங்கை தயங்காது. பயம் வருமா..வராதா..? ஏதாவது காரணம் கொண்டு நடுநிலை வகிக்கும்..அல்லது வயிறு உபாதை என்று சொல்லி ஓட்டெடுப்பின் போது ஒதுங்கி செல்லும். இத்தாலியரின் நிலை பரிதாபத்திற்கு உரியது..அவருக்கு அடிமைப்பட்டு ஓர் இனத்தை அழித்த படுபாதக செயலுக்கு துணை போன திமுக நிலையும் "அச்சத்தில்" இருக்கும். போர் குற்றவாளி ராஜபக்ஷே மட்டுமல்ல..இதோ இங்கே உள்ள இருவரும்தான் என்று "போட்டுடைக்கும்" இலங்கையின் ராஜதந்திரத்தில் எலிப்பொறியில் சிக்கிய இந்தியா..மற்றும் தமிழக இனமான தலைவர்..பொறுத்திருந்து பாருங்கள்..
Rate this:
Share this comment
Cancel
ரகு - chennai ,இந்தியா
14-மார்-201303:15:41 IST Report Abuse
ரகு சர்வதேச அளவில், நம்பிக்கைக்குரிய விசாரணை நடத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கையை இந்தியா நீர்த்து போக செய்யும் என்பதில் சந்தேகம் இல்லை .
Rate this:
Share this comment
Cancel
Vettri - Coimbatore,இந்தியா
14-மார்-201302:09:34 IST Report Abuse
Vettri நாம் அனைவரும் இந்தியா இலங்கையை மிரட்ட வேண்டும் என்று கூறி கொண்டு இருக்கிறோம். ஆனால் இந்த செய்திகளை படிக்கும் போது இலங்கை தான் இந்தியாவை மிரட்டி கொண்டு இருக்கிறது. காரணம் இந்த போரை நடத்தியது யார் அதற்கு துணை போனவர்கள் யார் என்று தமிழர்கள் நாம் அனைவரும் அறிந்ததே.
Rate this:
Share this comment
Cancel
ஹரிபாஸ்கர் - திருச்சி,இந்தியா
14-மார்-201301:47:07 IST Report Abuse
ஹரிபாஸ்கர் எங்களுக்கு காசு கொடுத்து ஓட்டு வாங்கித்தான் பழக்கம்,,,,,,,,அதே மாதிரி நீங்களும் எங்க கிங்-காங்-கிராஸ்க்கு காசு கொடுத்து ஓட்டு போட சொன்னால்,, சல்மான் குர்சித் உங்களுக்கு சலாம் போட்டு எங்களுக்கு குல்லா போடுவார்.
Rate this:
Share this comment
Cancel
விருமாண்டி - மதுரை,இந்தியா
14-மார்-201301:39:16 IST Report Abuse
விருமாண்டி பாக் பன்றிகளுக்கும் சீன நரிகளுக்கும் இந்தியாவின் பலம் தெரியவில்லை ... அதே நேரத்தில் நாம் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டு இருக்காமல் கொஞ்சம் அதிரடி காட்டினால் தான் இவர்களின் வாலாட்டம் அடங்கும் ...
Rate this:
Share this comment
Cancel
விருமாண்டி - மதுரை,இந்தியா
14-மார்-201301:36:50 IST Report Abuse
விருமாண்டி பிரபாகரனால் தமிழர்கள் பட்ட துன்பம் இலங்கை ராணுவத்தின் துன்புறுத்தலை விட கொடுமையானது ..இதே உணர வேண்டும்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை