புதுடில்லி:இந்தியாவின் பாதுகாப்பு மற்றும் ராணுவ ரகசியங்களை திருடியதன் மூலம், இந்தியா மீது, "சைபர்' தாக்குதலை, சீன அரசு நடத்தியுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இணையதளம் வழியாக தகவல்களைத் திருடும், "ஹேக்கர்ஸ்' என்று அழைக்கப்படும் திருட்டுக் கும்பல் மூலம், இந்திய ராணுவ ரகசியங்களை சீனா திருடியது தெரிய வந்துள்ளது.
டி.ஆர்.டி.ஓ., எனப்படும், இந்தியாவின், தேசிய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி நிறுவன கம்ப்யூட்டர்களில் இருந்து, பாதுகாப்பு மற்றும் ஏவுகணைத் திட்டங்கள் குறித்த முக்கிய தகவல்களை, இந்த கும்பல் திருடியுள்ளது. பாதுகாப்புத் துறையின் பல முக்கிய பைல்கள் இவர்கள் வசம் இருப்பதாக, பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. கடந்த ஒரு ஆண்டாக நடந்த சீனாவின் இந்தச் செயல் குறித்து, இம்மாதம் முதல் வாரத்தில் தான் கண்டுபிடிக்கப்பட்டதாக, செய்திகள் வெளியானது.தொழில்நுட்ப நிபுணர் குழு மற்றும் தேசிய தொழில்நுட்ப ஆராய்ச்சி நிறுவனம், தனியார் பாதுகாப்பு வல்லுனர்களுடன் சேர்ந்து, இந்த திருட்டை சீனா நடத்தி இருப்பது தெரிய வந்துள்ளது. "ஆர்மி சைபர் பாலிசி' என்ற இணைப்புடன், டி.ஆர்.டி.ஓ., அதிகாரிக்கு வந்த, "இ - மெயிலை' திறந்தவுடன், அதன் மூலமாக அனைத்து தகவல்களும் திருடப்பட்டு விடுகின்றன.
குவாண்டாங்: இது குறித்த தகவல் தெரிந்தவுடன், இந்திய பாதுகாப்பு நிபுணர்கள் ஆராய்ந்ததில், "ஹேக்' செய்யப்படும் அனைத்துத் தகவல்களும், சீனாவில் உள்ள, "குவாண்டாங்' என்ற இடத்தில் உள்ள, "சர்வர்' மூலம் பதிவேற்றம் செய்யப்படுவது கண்டுபிடிக்கப்பட்டது.தேசிய பாதுகாப்பு அமைப்பு, இதற்கு முன் நடந்த திருட்டை இவ்வளவு துல்லியமாக கண்டுபிடித்ததில்லை. இம்முறை மிகத் துல்லியமாக கண்டறிந்துள்ளது.ஐதராபாத்தில் உள்ள, டி.ஆர்.டி.ஓ., அலுவலகத்தில், மிக ரகசியமாக வைக்கப்பட்டுள்ள இந்திய பாதுகாப்பு குறித்த ஆவணங்கள், ரேடார் மற்றும் ஏவுகணை மேம்பாட்டுத் திட்டங்கள் போன்ற ஆயிரக்கணக்கான பைல்கள், இம்முறையில் திருடப்பட்டுள்ளன.
மீட்பு: திருடப்பட்ட பைல்கள் வெற்றிகரமாக மீட்கப்பட்டுள்ளன என தெரிவிக்கப்பட்டுள்ளது. அவற்றில், டி.ஆர்.டி.ஓ., மற்றும் புலனாய்வுத் துறை அதிகாரிகளுக்கு இடையேயான ஒப்பந்தம், பிரான்ஸ் ஏவுகணை நிறுவனத்துடனான பணப் பட்டுவாடா உள்ளிட்ட பைல்கள் மீட்கப்பட்டுள்ளன. இந்தத் திருட்டை தனியார், "ஹேக்கர்'கள் செய்ய முடியாது. இவர்களுடன் சீன அரசு சம்பந்தப்பட்டுள்ளது. "ஹேக்' செய்து பதிவேற்றம் செய்யப்பட்ட, "சர்வர்' சீனாவில் உள்ளது. இதற்காக, 150 கோடி ரூபாய் மதிப்புள்ள, "சர்வர்' பயன்படுத்தப்பட்டு உள்ளது. ஆரம்பத்தில் இருந்தே சீனா, பிற நாடுகளின் ரகசியங்களைத் திருடிவந்துள்ளது. அமெரிக்காவின் ரகசியங்களையும், சீனா, "ஹேக்' செய்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அந்தோணி பதில்:இந்திய ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் கம்ப்யூட்டர்களில் இருந்து தகவல்கள் திருடப்பட்டது குறித்து, ராணுவ அமைச்சர், அந்தோணியிடம் கேட்டபோது, ""இது குறித்து, உளவு அமைப்புகள் விசாரணை நடத்தி வருகின்றன. எனவே, இது தொடர்பாக நான் எதையும் கூற மாட்டேன்,'' என்றார்.
யு.பி.எஸ்.சி., தேர்வு மாற்றங்கள் தமிழர்களுக்கு இழைக்கும் அநீதி : ஜெ., காட்டம்
சென்னை:"ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., தேர்வுகளை தமிழில் எழுத, தமிழ் வழியில் பட்டம் பெற்றவர்கள் தான் தகுதியானவர்கள் என, யு.பி.எஸ்.சி., கொண்டு வந்துள்ள புதிய கட்டுப்பாட்டை, உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும்' என, முதல்வர் ஜெயலலிதா கூறினார்.
இதுகுறித்து, பிரதமருக்கு ஜெயலலிதா எழுதியுள்ள கடிதம்:மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (யு.பி.எஸ்.சி.,), ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., தேர்வுகளை, மாநில மொழிகளில் எழுத முடியாதவாறு, புதிய கட்டுப்பாடுகளை கொண்டு வந்துள்ளது. வரும் கல்வியாண்டில் முதல், இது நடைமுறைக்கு வருகிறது.யு.பி.எஸ்.சி., நான்கு மாற்றங்களை கொண்டு வந்துள்ளது. முதல் மாற்றத்தில், உயர்நிலைக் கல்வி, பட்டப்படிப்பு ஆகியவற்றை தமிழ் வழியில் பயின்றிருக்க வேண்டும். அப்போது தான், ஐ.ஏ.எஸ்., தேர்வை தமிழில் எழுத முடியும் என, கூறியுள்ளது. இவ்விதி, இந்தி மொழிக்கு விதிக்கப்படவில்லை.இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தின், 8ம் அட்டவணையில், இந்தி, தமிழ் ஆகிய மொழிகள் சேர்க்கப்பட்டு உள்ளன. இந்நிலையில், இந்த புதுவிதி தமிழ் பேசும் மாணவர்களுக்கும் மட்டும் எனக் கூறுவது, தமிழ் பேசுவதாலேயே, தண்டனை விதிப்பது போல் உள்ளது.கிராமப்புற மாணவர்கள், குறிப்பாக, தாழ்த்தப்பட்ட, பழங்குடியின, பிற்பட்ட, மிகவும் பிற்பட்ட மற்றும் சிறுபான்மையின மாணவர்கள், இதனால் கடுமையாக பாதிக்கப்படுவர். அசியல் அமைப்புச் சட்டம், 14 மற்றும் 16வது பிரிவில் அளிக்கப்படும், அனைவரும் சமம் என்ற உரிமையைப் பறிப்பதாக உள்ளது.
இரண்டாவதாக, பட்டப் படிப்பில் விருப்பப் பாடமாக, தமிழ் இலக்கியத்தை பயின்றவர் மட்டுமே, ஐ.ஏ.எஸ்., தேர்வை தமிழில் எழுத முடியும் என, கூறப்பட்டுள்ளது. கணிதம், வரலாறு உள்ளிட்ட பிற முக்கிய பாடங்களுக்கு, தமிழ் இலக்கியம் விருப்பப் பாடமாக இருக்காது. அப்படியென்றால், கணிதம், வரலாறு பிரிவுகளில் பட்டம் பெற்றவர்கள், தமிழில், ஐ.ஏ.எஸ்., தேர்வு எழுத முடியாத நிலை உருவாக்கப்பட்டு உள்ளது.மூன்றாவதாக, மாநில மொழிகளில் தேர்வெழுத, குறைந்தபட்சம், 25 மாணவர்கள் அந்த மொழியில் தகுதி பெற்றிருக்க வேண்டும் என, குறிப்பிட்டுள்ளது. இவ்விதி ஆங்கிலம் மற்றும் இந்தி மொழிக்குப் பொருந்தாது என, குறிப்பிடப்பட்டுள்ளது.நான்காவதாக, ஆங்கில மொழியிலும் தேர்ச்சி பெறுவது. இம்மாற்றம், முழுக்க முழுக்க நகர்ப்புறங்களில், ஆங்கில வழியில் பயன்ற மாணவர்களுக்கு மட்டுமே சாதகமாக இருக்கும்.
யு.பி.எஸ்.சி., செய்துள்ள மாற்றங்கள், இந்திய கூட்டாட்சிக்கும், பிராந்திய மொழிகளுக்கு அரசியல் அமைப்புச் சட்டம் அளித்துள்ள சமத்துவத்துக்கும், பங்கம் விளைவிப்பதாக உள்ளது. எனவே, தாய் மொழியில் ஐ.ஏ.எஸ்., தேர்வு எழுத அனுமதிக்க வேண்டும். மாநில அரசுகளுடன் கலந்தாலோசிக்காமல், தன்னிச்சையாக, ஜனநாயகமற்ற முறையில், யு.பி.எஸ்.சி., கொண்டு வந்துள்ள மாற்றங்களை திரும்பப் பெற, நீங்கள் உடனடியாகத் தலையிட வேண்டும்.இவ்வாறு கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
ஐதராபாத்தில் உள்ள, டி.ஆர்.டி.ஓ., அலுவலகத்தில், மிக ரகசியமாக வைக்கப்பட்டுள்ள இந்திய பாதுகாப்பு குறித்த ஆவணங்கள், ரேடார் மற்றும் ஏவுகணை மேம்பாட்டுத் திட்டங்கள் போன்ற ஆயிரக்கணக்கான பைல்கள், இம்முறையில் திருடப்பட்டுள்ளன. எந்த லட்சணத்தில் உள்ளது உங்கள் பாதுகாப்பு அமைப்பு, ஒரு பக்கம் சீனா, ஒரு பக்கம் பாகிஸ்தான் , இந்த பக்கம் இலங்கை, ..இவ்வளவு தூரம் பொறுப்பின்மையாய் இருப்பது நாட்டிற்கே அவமானம்.பொறுப்பில்லா போக்கு..ஊழல்..அலட்சியம் இவைதான் அத்துணைக்கும் காரணம்..போகிற போக்கை பார்த்தால் நாட்டை மூன்றாக பங்கு போட்டு அவர்களுக்கு விற்றுவிட்டு போய்விடுவார்கள். மானம் கேட்டவர்கள்.
நாட்டின் பாதுகாப்பு கேள்விக்குறியாகிவிட்டது....நாட்டின்மேலும்,நாட்டு மக்களின்மேலும் அக்கறை இல்லாத நிர்வாகம்....எதிலும் ஒரு கட்டுப்பாடோ, அர்ப்பணிப்போ, கண்டிப்போ இல்லாத ஏனோதானோ செயல்கள்....எந்த ஒரு நாடும் தான் எதிரியாக பார்க்கின்ற நாடுகளின் ரகசியங்களை, அறிந்து கொள்ளத்தான் முயற்சிப்பார்கள்....ஆனால் நாம் தான் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்..... அதற்குரிய தொழில் நுட்பத்தை வைத்து எப்போதும் கண்காணித்துக்கொண்டே இருக்க வேண்டும்....இது போன்ற விஷயத்தில் அஜாக்கிரதையாக இருக்கும், அமைச்சர்களையும் அதிகாரிகளையும், வெளியில் வர முடியாதபடி வழக்கு பதிந்து அதற்குரிய தண்டனை வழங்க வேண்டும்.... அதன் கடுமையை பார்த்து, திறமையில்லாதவர்களும்,நேர்மையில்லாதவர்களும் அந்த பதவிக்குவர தயங்க வேண்டும்...அப்போதுதான் நல்லவர்களுக்கும், கடமையில் கண்ணும் கருத்துமாக இருப்பவர்களுக்கும் அந்த வாய்ப்பு கிடைக்கும்.... சின்ன சின்ன தவறுகளை மன்னிப்பதாலும், கண்டுகொள்ளாமல் விடுவதாலும் தான் இது போன்ற பெரிய பெரிய குற்றங்களும், ஊழல்களும் நம் நாட்டில் தலை விரித்து ஆடுகின்றன.... அதை வளர விட்டால் நம் நாடு குட்டிச்சுவராகி விடும்.......நம் நாட்டின் இப்போதைய முக்கிய தேவை, தேச பற்றுடனும்,கட்டுப்பாடுடனும், கண்டிப்புடனும், மத சார்பின்மையுடனும்,குற்றங்களை இரும்புக்கரம் கொண்டு அடக்கும் ஒரு ஆண்மையுள்ள அரசாங்கம்.... அந்த நம்பிக்"கை"யை காங்கிரஸ் இழந்து விட்டதாகவே கருதுகிறேன்.....
நாம் தூங்கறோம். அவன் (சீனா, இலங்கை , பாகிஸ்தான்) தூங்கவில்லை. நம் ஆட்சியாளர்கள் சரியில்லை என்பதை தோல் உரித்து காட்டுகிறது. எவன் இருந்தால் என்ன எவன் செத்தால் என்னால் என்ற எண்ணம் நம் ஆட்சியாளர்களுக்கு எது நடந்தாலும் கவலை இல்லை குறிப்பாக மன்மோகன், சுசில் குமார், சல்மான் குர்ஷித் , சிவசங்கர மேனன், போன்றோருக்கு கவலை இல்லை. இவர்கள் எப்போ விழிபர்களோ அந்த ஆண்டவனுக்கு தான் தெரியும். இவர்கள் இன்னும் 5 ஆண்டுகள் இருந்தால் நாடு வல்லரசு ஆகிவிடும் .
எதுக்கு இவ்வளவு கஷ்டம்? ......... என்னென ரகசியங்கள் வேணும்னு ஒரு வார்த்த ...... ஒரே ஒரு வார்த்த கோடு போட்டு காட்டியிருந்தா போதுமே ...... அப்புடியே எல்லாத்தையும் கலர் ஜெராக்ஸ் எடுத்து நேர்லயே கொண்டு போய் கொடுக்க நம்ம அரசியல்வியாதிங்க பல பேரு ரெடியா இருக்காங்க ........ இதுக்கு போய் சீனா இவ்வளவு மெனக்கிடனுமா? ........ "மிசைல்" ஒன்னு வெச்சிருக்கோம் ........ டில்லி மேல உடட்டுமா? ....... அப்புடீன்னு மன்னுமோகன ஒரு மெரட்டி மெரட்டினாலெ போதுமே ....... அண்ணன் "ஆவன" செஞ்சிருப்பாரே ........

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.