யு.பி.எஸ்.சி., தேர்வு மாற்றங்கள் தமிழர்களுக்கு இழைக்கும் அநீதி : ஜெ., காட்டம்
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
எழுத்தின் அளவு:
Advertisement

சென்னை:"ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., தேர்வுகளை தமிழில் எழுத, தமிழ் வழியில் பட்டம் பெற்றவர்கள் தான் தகுதியானவர்கள் என, யு.பி.எஸ்.சி., கொண்டு வந்துள்ள புதிய கட்டுப்பாட்டை, உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும்' என, முதல்வர் ஜெயலலிதா கூறினார்.

இதுகுறித்து, பிரதமருக்கு ஜெயலலிதா எழுதியுள்ள கடிதம்:மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (யு.பி.எஸ்.சி.,), ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., தேர்வுகளை, மாநில மொழிகளில் எழுத முடியாதவாறு, புதிய கட்டுப்பாடுகளை கொண்டு வந்துள்ளது. வரும் கல்வியாண்டில் முதல், இது நடைமுறைக்கு வருகிறது.யு.பி.எஸ்.சி., நான்கு மாற்றங்களை கொண்டு வந்துள்ளது. முதல் மாற்றத்தில், உயர்நிலைக் கல்வி, பட்டப்படிப்பு ஆகியவற்றை தமிழ் வழியில் பயின்றிருக்க வேண்டும். அப்போது தான், ஐ.ஏ.எஸ்., தேர்வை தமிழில் எழுத முடியும் என, கூறியுள்ளது. இவ்விதி, இந்தி மொழிக்கு விதிக்கப்படவில்லை.இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தின், 8ம் அட்டவணையில், இந்தி, தமிழ் ஆகிய மொழிகள் சேர்க்கப்பட்டு உள்ளன. இந்நிலையில், இந்த புதுவிதி தமிழ் பேசும் மாணவர்களுக்கும் மட்டும் எனக் கூறுவது, தமிழ் பேசுவதாலேயே, தண்டனை விதிப்பது போல் உள்ளது.கிராமப்புற மாணவர்கள், குறிப்பாக, தாழ்த்தப்பட்ட, பழங்குடியின, பிற்பட்ட, மிகவும் பிற்பட்ட மற்றும் சிறுபான்மையின மாணவர்கள், இதனால் கடுமையாக பாதிக்கப்படுவர். அசியல் அமைப்புச் சட்டம், 14 மற்றும் 16வது பிரிவில் அளிக்கப்படும், அனைவரும் சமம் என்ற உரிமையைப் பறிப்பதாக உள்ளது.

இரண்டாவதாக, பட்டப் படிப்பில் விருப்பப் பாடமாக, தமிழ் இலக்கியத்தை பயின்றவர் மட்டுமே, ஐ.ஏ.எஸ்., தேர்வை தமிழில் எழுத முடியும் என, கூறப்பட்டுள்ளது. கணிதம், வரலாறு உள்ளிட்ட பிற முக்கிய பாடங்களுக்கு, தமிழ் இலக்கியம் விருப்பப் பாடமாக இருக்காது. அப்படியென்றால், கணிதம், வரலாறு பிரிவுகளில் பட்டம் பெற்றவர்கள், தமிழில், ஐ.ஏ.எஸ்., தேர்வு எழுத முடியாத நிலை உருவாக்கப்பட்டு உள்ளது.மூன்றாவதாக, மாநில மொழிகளில் தேர்வெழுத, குறைந்தபட்சம், 25 மாணவர்கள் அந்த மொழியில் தகுதி பெற்றிருக்க வேண்டும் என, குறிப்பிட்டுள்ளது. இவ்விதி ஆங்கிலம் மற்றும் இந்தி மொழிக்குப் பொருந்தாது என, குறிப்பிடப்பட்டுள்ளது.நான்காவதாக, ஆங்கில மொழியிலும் தேர்ச்சி பெறுவது. இம்மாற்றம், முழுக்க முழுக்க நகர்ப்புறங்களில், ஆங்கில வழியில் பயன்ற மாணவர்களுக்கு மட்டுமே சாதகமாக இருக்கும்.

யு.பி.எஸ்.சி., செய்துள்ள மாற்றங்கள், இந்திய கூட்டாட்சிக்கும், பிராந்திய மொழிகளுக்கு அரசியல் அமைப்புச் சட்டம் அளித்துள்ள சமத்துவத்துக்கும், பங்கம் விளைவிப்பதாக உள்ளது. எனவே, தாய் மொழியில் ஐ.ஏ.எஸ்., தேர்வு எழுத அனுமதிக்க வேண்டும். மாநில அரசுகளுடன் கலந்தாலோசிக்காமல், தன்னிச்சையாக, ஜனநாயகமற்ற முறையில், யு.பி.எஸ்.சி., கொண்டு வந்துள்ள மாற்றங்களை திரும்பப் பெற, நீங்கள் உடனடியாகத் தலையிட வேண்டும்.இவ்வாறு கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

Advertisement
Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (27)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Skv - Bangalore,இந்தியா
15-மார்-201307:56:21 IST Report Abuse
Skv தமிழனக்கெ சாபம் தான் எவன் ஆண்டாலும் நமக்கு வாய்க்கரிசிதான் போடராக . எங்கும் எதிலும் நாம்தான் வந்ஜ்ஜிக்கபடறோம் விதியநேநேச்சு வாழறோம்
Rate this:
Share this comment
Cancel
Kannan D - chennai,இந்தியா
14-மார்-201311:37:33 IST Report Abuse
Kannan D மு க முன்மொழிவதை விட டெல்லி சென்று சோனியா, பிரதமர் ஆகியோரை சந்தித்து திட்டத்தை நிறுத்தலாமே ஒ இது பொது பிரச்சினையா அப்பா கடிதம் தான்.
Rate this:
Share this comment
Cancel
ksv - chennai,இந்தியா
14-மார்-201311:09:16 IST Report Abuse
ksv முன் மொழிதல் பின் மொழிதல் இருக்கட்டும் சில விசயங்களில் திரு கருணா ஏன் தான் பங்கு பெற்றுள்ள மத்திய அரசை கண்டித்து டெல்லி சென்று போரடகூடாது முன்பு தனக்கு வேண்டிய மந்த்ரி இலகாகவிட்கு டெல்லி சென்றதை போல் செல்லலாமே.அதை விடுத்து சில கருப்பு ஆடுகள் தரும் தகவல்களை முன் கூடியெ அறிக்கையாக தருவதில் பலனில்லை.
Rate this:
Share this comment
Cancel
S. ரெகுநாதன் - Abu Dhabi,ஐக்கிய அரபு நாடுகள்
14-மார்-201311:09:08 IST Report Abuse
S. ரெகுநாதன் UPSC தேர்வின் முடிவு சரியென்று நான் சொல்லவில்லை..வரலாறு, கணிதம், அறிவியல் சார்ந்த படிப்பிற்கும் தாய்மொழியில் தேர்வு எழுத அனுமதிக்கவேண்டும்...ஆனால் தமிழ்நாட்டில் ஆங்கில அறிவு மற்றெந்த மாநிலத்தை காட்டிலும் அதிகம்..இந்த பாழாப்போன திராவிட கட்சிகளால் இந்தியை அறவே இழந்து நிற்கும் தமிழர் தமிழ்நாட்டை தாண்டினால் வெளிநாட்டு பாஷையான ஆங்கிலத்தில் பேசுவது நல்லதா..?? Globalaisation யுகத்தில் ஒவ்வொரு இந்திய குடிமகனும் தமிழ் தவிர வேறு பல மொழிகளை தெரிந்து கொள்வது காலத்தின் கட்டாயம்...நன்கு படித்த பழமொழிகள் உணர்ந்த ஜெயலலிதாவும் இது பற்றி பேசுவது நகைப்பிற்குரியது...
Rate this:
Share this comment
Cancel
Narayan Arunachalam - DELHI,இந்தியா
14-மார்-201310:52:56 IST Report Abuse
Narayan Arunachalam சில அல்லக்கைகள் உடனே.. மு க முதலில் கடிதம் எழுதி விட்டார்.. அதனால் மன்மோகன்ஜி மயங்கி விட்டார் என்று ஆரம்பித்து விடுவார்கள்... அது சரி... ஒரு முழு நேர குழு அமைத்திருகிறார்கள் போல இருக்கு அல்லக்கை கும்பல்... மு க விற்கு எதிரான எல்லா கருத்துக்களுக்கும் " thumbs down " போட... இரவு முழுவது கண்விழித்து இந்த வேலை செய்திருக்கிறார்கள்... இந்த வேலைக்கு................ செய்ய போகலாம்...
Rate this:
Share this comment
வைகை செல்வன் - சென்னை,இந்தியா
14-மார்-201311:56:14 IST Report Abuse
வைகை செல்வன்netru தான் கருத்து போட்டேன்.. இந்த தம்ஸ் டவுன் பார்டிகளை அறிவாலயத்திலிருந்து விரட்டியாச்சா? என்று.. மறுபடியும் அவர்களுக்கு வேலை கொடுத்து விட்டார்கள் போலும் .. நீங்கள் சொல்வது போல் இந்த வேலைக்கு பேசாமல் 'அந்த' வேலைக்கு போகலாம் இந்த அல்லக்கை அடிவருடிகள்......
Rate this:
Share this comment
Cancel
Pa. Saravanan - Kovai,இந்தியா
14-மார்-201310:15:03 IST Report Abuse
Pa. Saravanan தமிழும், தமிழனும் இன்னும் எத்தனை சோதனைகளைத்தான் சந்திக்க வேண்டுமோ? ஜனநாயகத்தின் மீதுள்ள நம்பிக்கையை இது போன்ற சம்பவங்கள் முற்றாக அழித்துவிடும். அனைவருக்கும் சம வாய்ப்பு என்பதுதானே மக்களாட்சியின், ஜனநாயகத்தின் ஆணிவேர்.
Rate this:
Share this comment
Cancel
m.s.kumar - chennai,இந்தியா
14-மார்-201310:08:42 IST Report Abuse
m.s.kumar அம்மா உடாதிங்க இது ஏதோ உள்குத்து இருபது போல உள்ளது . தமிழன் தலை ஏடுப்பது யாருக்கோ புடிகளை????
Rate this:
Share this comment
Cancel
yamuna - melbourne,ஆஸ்திரேலியா
14-மார்-201309:45:36 IST Report Abuse
yamuna பொது நலன் வழக்கு தொடருங்கள் .வெற்றி கிடைக்கும் .
Rate this:
Share this comment
Cancel
yamuna - melbourne,ஆஸ்திரேலியா
14-மார்-201309:43:57 IST Report Abuse
yamuna Put a case against them. We will win. Simple.
Rate this:
Share this comment
Cancel
yamuna - melbourne,ஆஸ்திரேலியா
14-மார்-201309:42:13 IST Report Abuse
yamuna I think someone can file the case. We can write in tamil by law. So DO NOT WORRY.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.
மேலும் செய்திகள்