அறிவிப்பு:
"சேமநல நிதி, 5.25 லட்ச ரூபாயாக உயர்த்தப்படும்; அதற்காக, ஆண்டு தோறும், 4 கோடி ரூபாய், அரசு வழங்கும்' என, சென்னை ஐகோர்ட், 150வது கொண்டாட்ட நிறைவு விழாவில், முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார். வழக்கறிஞர்களுக்கான சேமநல நிதியத்தில் உறுப்பினர்களாக சேருபவர்களுக்கு தான், இந்த நிதி கிடைக்கும். மனுவில் ஒட்டப்படும், "ஸ்டாம்ப்' விற்பனை மூலம் கிடைக்கும் வருமானம், ஏற்கனவே உள்ள டிபாசிட் தொகை மூலம் கிடைக்கும் வட்டி, இவற்றைக் கொண்டே, சேமநலகட்டணம்:
சேமநல நிதியத்தில் உறுப்பினராக சேர்வதற்கான விண்ணப்ப கட்டணத்தை, 200 ரூபாயில் இருந்து, 1,000 ரூபாயாக உயர்த்தவும், ஸ்டாம்ப் மதிப்பை, 10 ரூபாயில் இருந்து, 30 ரூபாயாக உயர்த்தவும், ஆயுள் சந்தாவை, 2,500 ரூபாயில் இருந்து, 10 ஆயிரம் ரூபாயாக உயர்த்த வேண்டும். பத்து ஆண்டுகளுக்கு குறைவான, "பிராக்டீஸ்' உள்ளவர்களுக்கு, ஆண்டு சந்தாவை, 100 ரூபாயில் இருந்து, 500 ஆகவும், 10 ஆண்டுகளுக்கு அதிகமாக உள்ளவர்களுக்கு, 200 ரூபாயில் இருந்து, 1,000 ரூபாயாகவும் உயர்த்திக் கொள்ள, அரசு அனுமதித்தது. இதற்கு, தமிழ்நாடு வழக்கறிஞர்கள் நல நிதிச் சட்டத்தில், திருத்தம் கொண்டு வர வேண்டும். கடந்த சட்டசபை கூட்டத் தொடரின் போது, இதற்கான சட்டத் திருத்தம்எதிர்பார்ப்பு:
அரசாணை வெளியிடப்பட்ட நாளில் இருந்து, சட்டத் திருத்தம் அமலுக்கு வந்தால், வழக்கறிஞர்களின் குடும்பங்கள் பயனடைவர் என்கிற எதிர்பார்ப்பும் உள்ளது. ஆனால், அந்த நிதியாண்டுக்கு உரிய, பாதி தொகையாவது அரசு வழங்கினால் தான், பார் கவுன்சிலுக்கு நிதி பிரச்னை இருக்காது எனவும் கூறப்படுகிறது. இதுகுறித்து, தமிழ்நாடு பார் கவுன்சில் தலைவர் செல்வம் கூறுகையில், ""வழக்கறிஞர்கள் சேமநல நிதியத்துக்கு, 4 கோடி ரூபாய் வழங்க, முதல்வர் ஒப்புதல் அளித்துள்ளார். இந்த மாதத்துடன், நிதியாண்டு முடிவதால், 4 கோடி ரூபாயை வழங்குமாறு, தமிழக அரசுக்கும், ஐகோர்ட்டுக்கும் கடிதம் அனுப்பியுள்ளோம்,'' என்றார்.வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.