சென்னை: "தமிழக மீனவர்கள் மீது, அக்கறையில்லாமல் இருப்பது போன்ற மத்திய அரசின் மவுனமே, இலங்கை கடற்படையின் தொடர் தாக்குதலுக்கு காரணம்' என, முதல்வர் ஜெயலலிதா குற்றம் சாட்டியுள்ளார்.
கடந்த இரண்டு வாரத்தில், மூன்றாவது சம்பவமாக, ராமேஸ்வரம் மீனவர்களை, இலங்கை கடற்படையினர், கடந்த புதன்கிழமை பிடித்துச் சென்று, கோர்ட் காவலில் வைத்துள்ளனர். இதற்கு, கடும் கண்டனம் தெரிவித்துள்ள முதல்வர் ஜெயலலிதா, பிரதமருக்கு எழுதியுள்ள கடிதம்: ராமேஸ்வரம் மீனவர்கள், 53 பேர், ஒன்பது மோட்டார் படகுகளில், கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். இவர்களை, பிடித்துச் சென்றுள்ள இலங்கை கடற்படை, கோர்ட் காவலில் வைத்துள்ளது. பாக் ஜலசந்தியில், தமிழக மீனவர்கள் மீன் பிடிப்பதை பொறுத்துக்கொள்ள முடியாத, இலங்கை கடற்படை, அப்பாவி மீனவர்களை, பிடித்துச் சென்றுள்ளது. தமிழக அரசையோ, மீனவர்களையோ ஆலோசிக்காமல், சர்வதேச கடல் எல்லையை, மத்திய அரசு சுருக்கிக் கொண்டதே, இப்பிரச்னைகளுக்குக் காரணமாக உள்ளது. இரு நாடுகளுக்கு இடையே உள்ள, மீன் பிடிப்பது தொடர்பான தகராறை, படைகள் மூலமோ, மீனவர்களை குற்றவாளிகள் போல் நடத்துவதன் மூலமோ தீர்க்க முடியாது. ஆனால், தமிழக மீனவர்கள் மீது, இலங்கை நடத்தி வரும் தொடர் தாக்குதல்கள், கவலை அளிப்பதாக உள்ளது. இதற்கிடையே, கச்சத் தீவை மீட்க, சுப்ரீம் கோர்ட்டில், தமிழக அரசு வழக்கு தொடர்ந்துள்ளது. இலங்கையின் போக்கை தொடர்ந்து கண்டித்தும் வருகிறோம். தமிழக மீனவர்களை பாதுகாக்க, மத்திய அரசிடம் எதிர்பார்ப்பது எல்லாம், மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தப்படும்போது, அøத் தடுக்க, உடனடியாக செயல்படுவதைத் தான். மத்திய அரசோ, தமிழக மீனவர்கள் மீது அக்கறையில்லாமல் இருப்பது போன்ற மவுனம், தொடர் தாக்குதல்கள் நடக்க காரணமாக உள்ளது. இந்தியாவில் உள்ள இலங்கை தூதரை அழைத்து, தமிழக மீனவர் மீதான தாக்குதலுக்கு, மத்திய அரசு கண்டனத்தைத் தெரிவிக்க வேண்டும். பிடித்துச் சென்ற ராமேஸ்வரம் மீனவர்களை, வழக்குகள் பதியாமல், துன்புறுத்தாமல், உடனடியாக விடுதலை செய்யவேண்டும் என, அறிவுறுத்த வேண்டும், என்றார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
மத்திய அரசு பயன் இல்லாத வெறும் அரசு ...இங்கு சுய சிந்தனை ..அடுத்தவர் யோசனை எதற்குமே பலன் இல்லை .".எழுதி படிச்சு அறியாதவன் தான் உழுது ஒழச்சு சோறு போடுறான் ..எல்லாம் படிச்சவன்.. ஏதேதோ பேசி ..நல்லா நாட்டை கூறு போடுறான் ...இவன் சோறு போடறான் ..அவன் கூறு போடுறான் ...நினைவு என்னவோ பாட்டுக்கோட்டையிடமே போகிறது
தினந்தோறும் ஒரு லெட்டர் ..மன்மோகனும் ஆவலோடு பிரித்துப்பார்ப்பார் நம்மையும் யாரோ நலம் விசாரித்து லெட்டர் போடுகிறார்களே என்று பூரித்துபோவார்...முடிஞ்சா ஒரு லெட்டரை வைகோவுக்கு போடுங்க அவர்தான் யாருமே சீந்தவில்லையே என்று ரொம்ப வருத்தத்திலே இருக்கார்...அப்புறமா இந்த லெட்டர வச்சே ரெண்டு வருசத்துக்கு மனுஷன் ரவுண்டு கட்டி அடிச்சுடுவாறு
நமது பாதுகாப்புக்கு மத்திய அரசை நம்பி பயன் இல்லை போல் உள்ள நிலையில் நம்மை நாமே காத்துக்கொள்ள என்ன வழி உள்ளது என்று மற்ற நாட்டுப்பற்றுள்ள கட்சிகளிடம் சேர்ந்து வழிவகை தேட வேண்டும் .சட்டசபையில் மத்திய ஆரசு மீது கண்டன தீர்மானம் போட வேண்டும் . மற்ற வழி வகைகளை ஆராய வேண்டும் .தேவைபட்டால் தமிழர் உதவிக்கு ஐ நா உதவியை நாடலாம் .நமக்கு ஒதுக்கும் நிதி எவ்வளவு செலவு எவ்வளவு மொத்த தமிழக வரி வசூல் எவ்வளவு என்பதினை ஆராய்ந்து மத்தியஅரசு செய்யும் வஞ்சனையை வெளிப்படுத்தவும் .மீனவர் பாதுகாப்புக்கு ஆயுதம் மற்றும் கடல் பாதுகாப்புக்கு வேண்டிய எல்லாவற்றையும் தமிழகமே ஏற்பாடு செய்ய வழி என்ன என்பது பற்றி யோசிக்கலாம் .
அது தான் கடலிலே எல்லை என்று ஒன்று உண்டு.. அதை தாண்ட கூடாது என்று சட்டம் உள்ளதே. அப்படியே எல்லை தாண்டினாலும் அந்த கடற்படையினர் வருவதற்குள் மீனவர்கள் மறுபடியும் நம் எல்லைக்குள் படகை திருப்பி வந்து விடலாமே. கடற்படையினர் என்ன உடனே இவர்கள் முன் வந்திறங்கி அப்படியே கைது செய்து கொண்டா போகிறார்கள். அவர்கள் வருவது இவர்களுக்கு தூரத்திலிருந்தே தெரியாதா? அல்லது அந்த கடற்படையினர் இருக்கும் இடத்திற்கு இவர்கள் எதற்கு செல்ல வேண்டும்? இது ஒரு விளங்காத விஷயமாகவே இருக்கிறது. யார் மீது தவறு? இதை வைத்து கொண்டு இங்கே கட்சி நடத்துபவர்கள் அரசியலாக்குகிறார்கள் அடித்து கொள்கிறார்கள் போராட்டம் எல்லாம் நடத்துகிறார்கள். இதனால் யாருக்கு லாபம். அரசியல்வாதிகளுக்கு தான் லாபம். மீனவர்கள் கொஞ்சம் சுதாரிப்பாக இருக்கலாமே.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.