புதுடில்லி:ஜனாதிபதி, பிரதமர், துணை ஜனாதிபதி போன்ற அரசியல் சட்ட ரீதியான பதவி வகிப்பவர்களைத் தவிர, மற்ற வி.ஐ.பி.,க்கள் மற்றும் வி.வி.ஐ.பி.,க்கள் யார் யார்? அவர்களுக்கு அளிக்கப்படும் பாதுகாப்பு என்ன என்பது குறித்து, மத்திய அரசு தெளிவுபடுத்த வேண்டும் என, சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டு உள்ளது.வி.ஐ.பி.,க்கள் அல்லது வி.வி.ஐ.,பிக்கள் என்ற பெயரில், சில தனி நபர்கள், சட்ட விரோதமாக தங்கள் கார்களில், சிவப்பு நிற குழல் விளக்குகளை எரியவிட்டபடி செல்கின்றனர். எனவே, இதன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என, உத்தர பிரதேசம் மாநிலத்தைச் சேர்ந்த ஒருவர் சுப்ரீம் கோர்ட்டில், பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்தார்.
இந்த மனு, சுப்ரீம் கோர்ட்டில், நீதிபதிகள் சிங்வி, ரஞ்சனா தேசாய் மற்றும் குரியன் ஜோசப் ஆகியோர் அடங்கிய, "பெஞ்ச்' முன், நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதிகள் கூறியதாவது:வி.ஐ.பி.,க்கள் மற்றும் வி.வி.ஐ.பி.,க்கள் என்ற பெயரில் கார்களில் செல்லும் தனி நபர்கள், போலீஸ் பாதுகாப்புடன் செல்வதுடன், சிவப்பு நிற குழல் விளக்குகளையும் எரியவிட்டபடி செல்கின்றனர். சிவப்பு நிற குழல் விளக்குகளை யார் யார் பயன்படுத்த வேண்டும் என்பது பற்றி, விரிவான விவாதம் நடத்தப்பட வேண்டும்.
எனவே, வி.ஐ.பி.,க்கள் மற்றும் வி.வி.ஐ.,பிக்கள் யார்? அவர்களுக்கு அளிக்கப்படும் பாதுகாப்புகள் என்ன, என்பது பற்றி, மத்திய அரசு தெளிவுபடுத்த வேண்டும்.
சில வி.ஐ.பி.,க்கள், கருத்தரங்கம் மற்றும் மாநாடுகளில் பங்கேற்கும்போது கூட, அவர்களுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு வழங்கப்படுவது கவலை தருவதாக உள்ளது.
இவ்வாறு கூறிய நீதிபதிகள், விசாரணையை ஏப்., 3ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.
முன்னதாக, வி.ஐ.பி.,க்களின் பாதுகாப்பிற்காக செலவிடப்படும் தொகை எவ்வளவு என்பது பற்றி மத்திய அரசு, மாநிலம் மற்றும் யூனியன் பிரதேசங்களின் அரசு, அறிக்கை தாக்கல் செய்யவேண்டும் என, சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.