மாணவர் சேர்க்கை பேரணி| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மாணவர் சேர்க்கை பேரணி

Added : மார் 15, 2013
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement

உடையார்பாளையம்: மாணவர் சேர்க்கை பேரணியை, தா.பழூர் சேர்மன் துவக்கி வைத்தார். உடையார்பாளையம் அருகே ஸ்ரீபுரந்தான் துவக்கப்பள்ளியில் மாணவர் சேர்க்கை பேரணி நடந்தது. பள்ளி தலைமையாசிரியர் துரைராஜன் தலைமை வகித்தார். ஆசிரியர் ஜெயா வரவேற்றார். பேரணியை தா.பழூர் சேர்மன் ஜெயசுதா துவக்கி வைத்தார். பஞ்சாயத்து தலைவர் கலாவதி, கல்வி மேலாண்மை மையக்குழு தலைவர் கவுரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். வட்டார வளமைய மேற்பார்வையாளர் கனகசபாபதி ஆசிரியர் பயிற்றுனர்கள், மேகநாதன், பாலமுருகன், மன்ற உறுப்பினர்கள் செல்வி, கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் பங்கேற்றனர். பேரணி முக்கிய வீதிகள் வழியாக சென்று, மீண்டும் பள்ளியை வந்தடைந்தது. இதில் அரசு பள்ளியில் மாணவர்கள் சேர்வதன் மூலம் ஏற்படும் பயன்கள், திட்டங்கள், சலுகைகள் உட்பட, பல்வேறு நலன் குறித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன. பள்ளி ஆசிரியர்கள் சகுந்தலா, கிருத்திகா, ஜாஸ்மின், கார்த்திகேயன், மோகன்தாஸ் ஆகியோர் பேரணியில் பங்கேற்றனர். ஆசிரியர் முத்துலெட்சுமி நன்றி கூறினார்.

பெரம்பலூரில் நாளை "பவர்கட்'

பெரம்பலூர்: "பராமரிப்பு பணி காரணமாக, நாளை காலை, 9 மணி முதல், மாலை, 5.30 மணி வரை, மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது' என, தமிழ்நாடு மின் வாரிய இயக்கலும் காத்தலும் பிரிவு உதவி செயற்பொறியாளர் செல்வராஜ் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்ட அறிக்கை: நாளை, 230 கிலோ வோல்ட் தானியங்கி பெரம்பலூர் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெறவதால், பெரம்பலூர் நகர பகுதிகளான பழைய பஸ்ஸ்டாண்ட், காமராஜர் வளைவு, வடக்குமாதவி சாலை, எளம்பலூர் சாலை, ஆத்தூர் சாலை, துறையூர் சாலை, அரணாரை, சங்குப்பேட்டை, மதனகோபாலபுரம், கடைவீதி, பாலக்கரை, புது பஸ்ஸ்டாண்ட், நான்குரோடு, மின்நகர், துறைமங்கலம் மற்றும் கிராமிய பகுதிகளான சிறுகுடல், பீல்வாடி, அசூர், சித்தளி, எளம்பலூர், வடக்குமாதவி, இந்திரா நகர், போலீஸ் குடியிருப்பு, சமத்துவபுரம், கே.புதூர், செங்குணம், அருமடல், கீழப்புலியூர், எஸ்.குடிக்காடு ஆகிய பகுதிகளில், நாளை மின் விநியோகம் தடை செய்யப்படும்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை