Scale down diplomatic ties with Pakistan: BJP | அண்டை நாடான பாகிஸ்தானுடன் உறவே வேண்டாம்: முழுமையாக துண்டிக்க பா.ஜ., வலியுறுத்தல் | Dinamalar
Advertisement
அண்டை நாடான பாகிஸ்தானுடன் உறவே வேண்டாம்: முழுமையாக துண்டிக்க பா.ஜ., வலியுறுத்தல்
Advertisement
 
 
Advertisement
 
 
 
எழுத்தின் அளவு:
Advertisement

"சுற்றியுள்ள அண்டை நாடுகள் எல்லாமே, நம்நாட்டை முடிந்த அளவுக்கு பந்தாடுகின்றன. அப்சல் குருவுக்கு வக்காலத்து வாங்கும் பாகிஸ்தான் உடனான, அனைத்து உறவுகளையும் முறித்துக் கொள்ள வேண்டும்' என, ராஜ்யசபாவில், பா.ஜ., வலியுறுத்தியது.
ராஜ்யசபா நேற்று காலை துவங்கியதும், தி.மு.க.,வைச் சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சரான, திண்டிவனம் வெங்கட்ராமனின் மறைவுக்கு, இரங்கல் செய்தி வாசிக்கப்பட்டது.
கேள்வி நேரம்: இதன்பின், கேள்வி நேரம் ஆரம்பமானது. அப்போது, பா.ஜ., - எம்.பி.,க்கள் எழுந்து, பார்லிமென்ட் தாக்குதல் பயங்கரவாதி அப்சல் குரு தூக்கிலிடப்பட்டதற்கு, எதிர்ப்பு தெரிவித்து, பாக்., பார்லிமென்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதை கண்டித்து, கோஷங்கள் எழுப்பினர். இதனால், கேள்வி நேரம் துவங்கும் முன், எதிர்க்கட்சி தலைவர் அருண்ஜெட்லி பேச அனுமதிக்கப்பட்டார்; அவர் பேசியதாவது: பாகிஸ்தானுடன் நட்புறவு கொள்வது, பேச்சுவார்த்தை நடத்துவது போன்றவற்றை, மறு பரிசீலனை செய்யும் நாள் வந்து விட்டது. அந்நாட்டுடன் கொண்டிருக்கும் உறவுகளையும், அது எந்த துறையாக இருந்தாலும் சரி, அனைத்தையும் நிறுத்த வேண்டும். பார்லிமென்ட் தாக்குதல் சம்பவத்தில், பாகிஸ்தானுக்கு தொடர்பு இருக்குமோ என்ற சந்தேகம், இருந்தது. அது, இப்போது உண்மையாகி விட்டது. பாக்., பார்லிமென்டில் இயற்றியுள்ள தீர்மானம், செயல்பாட்டில் இருக்கும் வரை, அந்நாட்டுடன், எந்தவிதமான உறவையும், மேற்கொள்ள கூடாது. மீறி உறவு பாராட்டினால், அதில் அர்த்தமில்லாத ஒன்றாகவே இருக்கும். பாகிஸ்தான் அரசை இயக்கும் அதிகார மையங்கள் என, நிறைய உள்ளன. ஒவ்வொன்றும் ஒவ்வொரு திசையில் இருக்கும். அவை எல்லாமே, அப்சல் குரு தூக்கு விவகாரத்தில் மட்டும், தங்களின் வேறுபாடுகளை மறந்து கண்டித்துள்ளன. நம் நாட்டின் மீது தொடுக்கப்பட்ட, அப்பட்டமான பயங்கரவாத தாக்குதல் சம்பவத்திற்கு, பாக்., தற்போது அதிகாரப்பூர்வ ஒப்புதல் முத்திரை அளித்துள்ளது; இது வரம்பு மீறிய செயல். பாக்., எல்லை மீறி செயல்படுகிறது. நம் பிரதமர் உறுதியாக செயல்படப்போவது எப்போது?
பலவீனம்: வெளியுறவு கொள்கை என்பது, மிகவும் மோசமாக உள்ளது. சுற்றியுள்ள அண்டை நாடுகள் எல்லாமே, நம்நாட்டை பலவீனமாக கருத துவங்கி விட்டன; முடிந்த அளவுக்கு, நம்நாட்டை பந்தாடுகின்றன. எனவே, நமது வெளியுறவுக் கொள்கை குறித்து, தீர்க்கமான ஆலோசனை மேற்கொள்ளப்பட வேண்டும். புதிய வெளியுறவு கொள்கையை, உருவாக்க வேண்டிய நேரம் வந்து விட்டது. இதுகுறித்து, விவாதிக்க நாள் குறியுங்கள். உடனடியாக, இந்த பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும். இவ்வாறு அருண்ஜெட்லி பேசினார்.
அருண் ஜெட்லி, கரண் சிங்கிற்கு விருது: ராஜ்யசபா எதிர்க்கட்சி தலைவரும், பா.ஜ., மூத்த தலைவருமான அருண் ஜெட்லி, 2010ம் ஆண்டுக்கும், காங்கிரஸ் கட்சியை சேர்ந்த கரண்சிங், 2011ம் ஆண்டுக்கும், ஐக்கிய ஜனதா தள கட்சி தலைவர் சரத்யாதவ், 2012ம் ஆண்டுக்கும், சிறந்த பார்லிமென்ட் உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டனர் சிறந்த பார்லிமென்ட் உறுப்பினர்களாக தேர்ந்தெடுக்கப்பட்ட அருண்ஜெட்லி, கரண் சிங்கிற்கு ராஜ்யசபாவில் நேற்று பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
- நமது டில்லி நிருபர் -

Advertisement
Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (43)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தமிழ் குடிமகன் - போயஸ்கார்டன் ,இத்தாலி
16-மார்-201316:55:45 IST Report Abuse
தமிழ் குடிமகன் இந்தியா இதுபோன்றதொரு நிலையை இதுவரை சந்தித்தது இல்லை. நாட்டை இந்த நிலைக்கு கொண்டுவந்த பெருமை சோனியாவையும் மன்மோகனையுமே சேரும் .
Rate this:
1 members
1 members
6 members
Share this comment
Cancel
Mustafa - Dammam,சவுதி அரேபியா
16-மார்-201316:54:24 IST Report Abuse
Mustafa தீவிரவாதம் மற்றும் பாதுகாப்புக்காக இரு நாடுகளும் செய்த செலவை உள்நாட்டு முன்னேற்றத்திற்கு செலவிட்டிருந்தால் இதற்குள் இரண்டு நாடுமே தன்னிறைவு பெற்றிருக்கும். இரு நாட்டு சாதாரண பிரஜைகளுக்கும் பொதுவாக எந்த ஒரு காழ்ப்பு உணர்ச்சியும் கிடையாது. கேடு கெட்ட அரசியல் படுத்தும் பாடு பெரும்பாடு. வெள்ளைக்காரன் பற்ற வைத்த தீ அணையாமல் எரிந்து கொண்டிருக்கிறது
Rate this:
4 members
0 members
6 members
Share this comment
Cancel
தமிழ் குடிமகன் - போயஸ்கார்டன் ,இத்தாலி
16-மார்-201316:52:20 IST Report Abuse
தமிழ் குடிமகன் good
Rate this:
0 members
0 members
4 members
Share this comment
Cancel
Prabu.KTK - Coimbatore,இந்தியா
16-மார்-201315:13:29 IST Report Abuse
Prabu.KTK //ராஜ்யசபா எதிர்க்கட்சி தலைவரும், பா.ஜ., மூத்த தலைவருமான அருண் ஜெட்லி, 2010 ம் ஆண்டுக்கும், சிறந்த பார்லிமென்ட் உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.// மிக சரியான கருத்து. இவர் காங்கிரஸ் கவர்மெண்டே பாராட்டி பட்டம் கொடுத்து கௌரவிக்கப் பட்டவர். ஜெய் ஹிந்த்
Rate this:
2 members
0 members
1 members
Share this comment
Cancel
r.sundararaman - tiruchi,இந்தியா
16-மார்-201315:11:37 IST Report Abuse
r.sundararaman வெளியுறவுக்கொள்கை தோற்று விட்டது. காரணமானவர்கள் கவுரவமாக மாற்றப்பட வேண்டும். நாட்டின் பாதுகாப்பு சரிபார்க்க தருணம் வந்து விட்டது. 1962 திரும்புகிறது போல் நிலை உள்ளது .
Rate this:
0 members
0 members
2 members
Share this comment
Cancel
ANBE VAA J.P. - madurai,இந்தியா
16-மார்-201313:52:53 IST Report Abuse
ANBE VAA J.P. அருமையான, ஒவ்வொரு இந்தியனும் வரவேற்க வேண்டிய முடிவு. இது இந்த காங்கிரஸ் அரசு செய்யவில்லை என்றால் 2014 இல் நீங்கள் ஆட்சியில் அமர்ந்தால் முதல் பார்லிமென்ட் கூட்டத்தில் எடுக்க வேண்டும். அந்த துணிவு உங்கள் கட்சிக்கு இருக்கின்றதா என்று அப்போது நாங்கள் பார்க்க தானே போகின்றோம்
Rate this:
2 members
0 members
4 members
Share this comment
Cancel
K.Sugavanam - Sengkang,சிங்கப்பூர்
16-மார்-201313:23:38 IST Report Abuse
K.Sugavanam உணர்ச்சி வசப்பட்டு சொன்ன கருத்து.
Rate this:
2 members
0 members
2 members
Share this comment
Cancel
Eswaran Eswaran - Palani,இந்தியா
16-மார்-201313:22:15 IST Report Abuse
Eswaran Eswaran பாகிஸ்தானுடன் நம் நாடு ஏன் உறவைத் துண்டிக்க வேண்டும். அது ஒரு அப்பாவி நாடு. இந்தியாவிலுள்ள இந்து தீவிரவாதிகள் தான் பார்லிமென்ட் தாக்குதல், பம்பாய் குண்டுவெடிப்பு அக்ஷர்தான் கோயில் துப்பாக்கிச் சூடு ,மற்றும் எல்லையில் ஊடுருவி தாக்குவது இப்படியெல்லாம் செய்து கொண்டும் காஷ்மீரில் பயங்கரவாதிகளாகச் செயல் பட்டுக் கொண்டுமுள்ளனர்.அப்படி இருக்க அப்பாவி பாகிஸ்தானைப் போய் இப்படி அபாண்டமாய் சொல்கிறாரே பி ஜே பி காரர்.இதிலிருந்தே இவர்களது சுய ரூபம் தெரியவில்லையா?. தேசபக்த காங்கிரஸ் ஆட்சியாளர்களே இந்த பி ஜே பி காரர்களின் பேச்சையெல்லாம் கேட்காதீர்கள் . நமது தேசப் பாதுகாப்பை முடிந்தால் பாக்கிஸ்தான் ராணுவத்திடம் கொடுத்து விடுங்கள் .
Rate this:
4 members
0 members
5 members
Share this comment
Cancel
Nallavan Nallavan - Kolkata,இந்தியா
16-மார்-201313:12:09 IST Report Abuse
Nallavan Nallavan பால்தாக்கரேயின் குடும்பம் பாகிஸ்தானில் இருந்து சர்க்கரை இறக்குமதி செய்யும் பிசினசில் ஈடுபட்டு வருகிறதே ..... அது என்னவாகும் ...????
Rate this:
15 members
0 members
10 members
Share this comment
Ahamed sha - Riyadh,சவுதி அரேபியா
16-மார்-201315:39:02 IST Report Abuse
Ahamed shaஎல்லாமே வியாபாரம் தான். பாகிஸ்தானும் இந்தியாவும் இந்த மாதிரி இல்லாமல் ஒற்றுமையாக இருந்தால் அமெரிக்காவிற்கு ஐரோப்பாவிற்கு ஆயுத வியாபாரம் நடக்காது. இரண்டு நாட்டு மந்திரி மற்றும் ராணுவ அதிகாரிகளுக்கு கமிசன் கிடைக்காது. ஆகவே இந்த இந்திய பாகிஸ்தான் பிரச்சனையை இவர்கள் தீர்க்க விட மாட்டார்கள்....
Rate this:
1 members
0 members
5 members
Share this comment
Cancel
s.maria alphonse pandian - CHENNAI-88,இந்தியா
16-மார்-201312:13:27 IST Report Abuse
s.maria alphonse pandian நீங்கள் ஆட்சியில் இருந்த போதே உறவை முறித்திருக்க வேண்டியதுதானே? அப்போது நீங்கள் முஷ்ரபை டில்லிக்கு அழைத்து தாஜ்மகாலை அல்லவா அவருக்கு சுற்றி காண்பித்தீர்கள்?
Rate this:
30 members
0 members
14 members
Share this comment
சகுனி - ஸ்ரீபெரும்புதூர்,இந்தியா
16-மார்-201313:26:13 IST Report Abuse
சகுனிநீங்க தான் இப்போ ஆளுங்கட்சி கூட்டணியில இருக்கிறீங்களே ....... பாஜகவுக்கு முன்னாடி நீங்க "பாகிஸ்தானுடனான உறவை முறிக்க சொல்லி" மத்திய அரசை வற்புறுத்துவதுதானே?...
Rate this:
1 members
0 members
4 members
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.
மேலும் செய்திகள்