புதுடில்லி: இந்தியாவைச் சேர்ந்த, மூன்று முன்னணி வங்கிகள், கறுப்பு பணத்தை வெள்ளையாக மாற்றும் நடவடிக்கைகளில் ஈடுபடுவதாகவும், கறுப்பு பணத்தை, தங்களின் வங்கி லாக்கர்களில் பதுக்கி வைக்க உதவுவதாகவும், "கோப்ரா போஸ்ட்' என்ற இணையதள பத்திரிகை, "பகீர்' தகவலை வெளியிட்டுள்ளது. இந்த தகவலை, சம்பந்தப்பட்ட வங்கிகள் மறுத்துள்ளன.
"கோப்ரா போஸ்ட்' என்ற இணையதள பத்திரிகை வெளியிட்டுள்ள அறிக்கை: எச்.டி.எப்.சி., - ஐ.சி.ஐ.சி.ஐ., மற்றும் ஆக்சிஸ் ஆகிய வங்கிகள், பெருமளவு கறுப்பு பணத்தை, தங்களின் வழக்கமான வங்கி நடைமுறைகளின் மூலம், வெள்ளையாக மற்றும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளன. சம்பந்தப்பட்ட வங்கிகளில், வாடிக்கையாளர்கள் போல் சென்று, நாங்கள் நடத்திய ரகசிய படப் பிடிப்பு மற்றும் விசாரணை மூலம், இந்த முறைகேட்டை வெளிச்சத்துக்கு கொண்டு வந்துள்ளோம். இந்த முறைகேடுகளுக்கான, வீடியோ ஆதாரங்கள் எங்களிடம் உள்ளன. நாங்கள் நடத்திய ரகசிய விசாரணையின் மூலம், இந்த மூன்று வங்கிகளும், வருமான வரி சட்டம், அன்னியச் செலாவணி மேலாண்மை சட்டம், ரிசர்வ் வங்கி விதிமுறைகள், வங்கிச் சட்டம் ஆகியவற்றை, அப்பட்டமாக மீறியுள்ளது, தெரிய வந்துள்ளது. தங்களின் லாபத்தை அதிகரிப்பதற்காக, இந்த வங்கிகள் இது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளன. வாடிக்கையாளர்களிடமிருந்து பெருமளவு கறுப்பு பணத்தை பெற்று, அவற்றை, காப்பீட்டு திட்டங்களிலும், மற்ற மாற்று திட்டங்களிலும், முதலீடு செய்கின்றன. வாடிக்கையாளர்களின் கணக்கில் காட்டப்படாத கறுப்பு பணத்தை, தங்களின் வங்கி லாக்கர்களில் பதுக்கி வைப்பதற்கும், இந்த வங்கிகள் உதவுகின்றன. மேலும், ரிசர்வ் வங்கிகளின் விதிமுறைகளை மீறி, வாடிக்கையாளர்கள், தங்களின் வங்கிகளில் கணக்கு துவங்கவும், உதவுகின்றன. கறுப்பு பணத்தை வெள்ளையாக்குவதற்கு, பினாமி வங்கி கணக்குகளையும், இந்த வங்கிகள் பயன்படுத்துகின்றன. இவ்வாறு கறுப்பு பணத்தை வெள்ளையாக மாற்றும் வாடிக்கையாளர்கள், கறுப்பு பணத்தை பதுக்கும் வாடிக்கையாளரை பற்றிய, பெயர் மற்றும் விவரங்களை, ரகசியமாக வைக்கும் நடவடிக்கைகளிலும், இந்த வங்கிகள் ஈடுபட்டுள்ளன. இவ்வாறு, அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மறுப்பு: இணையதள பத்திரிகையின் இந்த தகவலை, மூன்று வங்கிகளுமே, தங்களின் அறிக்கை மூலம், கடுமையாக மறுத்துள்ளன. "இதுபோன்ற புகார்களை, எங்களின் கவனத்துக்கு கொண்டு வந்தால், இது தொடர்பான எந்த வகையான விசாரணைக்கும், நாங்கள் தயார்' என, அந்த வங்கிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரிசர்வ் வங்கியும், மத்திய நிதி அமைச்சகமும், இது தொடர்பாக, சம்பந்தப்பட்ட வங்கிகளிடம், விவரங்களை கேட்டுள்ளன.
"நடவடிக்கை நிச்சயம்': மத்திய நிதி அமைச்சகத்தின் சேவைத் துறை செயலர், ராஜிவ் தக்ரு கூறியதாவது: இந்த விஷயம் குறித்து, நிதி அமைச்சகமும், ரிசர்வ் வங்கியும், தீவிரமாக ஆய்வு செய்து வருகின்றன. இது தொடர்பான விவரங்களை சேகரித்து வருகிறோம். இந்த விஷயத்தில் உண்மை என்ன என்பது தெரிந்தபின், அடுத்த கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இருந்தாலும், முதல் கட்ட விசாரணையின் அடிப்படையில், இது மிகவும் கவலை அளிக்கும் விஷயம் எனது, தெரியவந்துள்ளது. சம்பந்தபட்ட வங்கிகள், தவறு செய்துள்ளனவா என்பதை, தற்போது தெரிவிப்பது, சரியாக இருக்காது. இவ்வாறு , ராஜிவ் தக்ரு கூறினார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
அரசு வங்கிகளில் பல கட்ட தணிக்கை முறைகள் இருக்கு, ஆனால் தனியார்துறை வங்கிகளில் எந்த வித தணிக்கை முறைகளும் மேற்கொள்ள படுவதாக இல்லை. ஒருவேளை தணிக்கை இருந்தால் அதை கொண்டு வருவாயை அதிகரித்து கொள்ளத்தான் பயன் படுத்துகிறார். RBI, MRDBC அதிகாரிகள் சமோசா சாப்பிட்டு விட்டு கிரிக்கெட் மாட்சை டி.வி யில் பார்த்து விட்டு எப்போ அடுத்த அகவிலை படி கிடைக்கும் என்று ஏங்க தான் நேரம் இருக்கு ?
இதில் ஒரு வங்கி பற்றி நேரடியாக சிதம்பரத்திற்கே தகுந்த ஆவணங்களுடன் கடிதம் அனுப்பினேன், அதை முதலில் இருந்து ஆரம்பியுங்கள் என்று National Housing bank மூலம் நான் அனுப்பிய கடிதத்தை எனக்கே திருப்பி அனுப்பி விட்டார். சிதம்பரம் நாட்டு நிதி மந்திரியா ? இல்லை காங்கிரஸ் கட்சிக்கு நிதி மந்திரியா என விளங்க வில்லை
யோவ் எதோ மூன்று பாங்க்ல தான் போல் பேசுறீங்க. எல்லா hi tech பாங்க்களும் நடத்துது. HSBC மேல இதை மாதிரி மோசமான கம்ப்லைண்டுங்க 2/3 வருஷமா வந்துகிட்டே இருக்கு. RBI கூட வார்னிங்கெல்லாம் விட்டாங்கொய். சங்கரன் சொன்னது போல வெளியில் வந்தால் ஊசி முனையளவு வராதது உலகளவு .
Corporation பேங்க், எஸ் பேங்க் ,IDBI , திரு.ப.சி. யால் சமீபத்தில் அவர் தொகுதியில் திறக்கப்பட்ட அனைத்து வங்கிகளையும் விசாரிக்க வேண்டும்.
சம்பந்தப்பட்ட வங்கிகளின் உயர் அதிகாரிகளுக்கு தெரியாமல் இது நடக்க வாய்ப்பில்லை.அவர்களும் தங்களுக்கு பாதுகாப்பு நிச்சயம் என்று தெரிந்தபின் தான் இவ்வாறு செய்யத் துணிவார்கள். ஆக, மிக உயர்ந்த இடத்தின் அனுமதியுடன் தான் இது நடக்கிறது, ஏனென்றால் கருப்பை வெள்ளையாக்க வேண்டிய அவசியம் அவர்களுக்கு தான் அதிகம். கடந்த வருடம் சுவிஸ் வங்கி கணக்குகள் பற்றி அழுத்தம் அதிகரிக்கவே, அங்கு கணக்கு வைத்திருப்பவர்கள் அதை இந்தியாவுக்கு அனுப்ப துவங்கினர். 2012 முழுதும் இந்தியாவுக்கு வந்த அந்நிய செலவாணியை முந்தைய வருடங்களுடன் ஒப்பிட்டால் இது தெரியும். இப்போது வெளி வந்திருப்பது ஊசி முனை தான்.மற்ற ஊழல்களுக்கெல்லாம் பெரிய ஊழல் இது. நாட்டுப பற்று பாக்கியிருக்கும் வங்கி ஊழியர்கள் முனைப்புடன் செயல் பட்டால் இதை முழுவதுமாக வெளிக்கொணரலாம். தற்காலிக வேலை நீக்கம் செய்யப் பட்டவர்களை சம்பந்தப்பட்ட வங்கிகள் வேலை நீக்கம் செய்து, அவர்களது மீதி செர்வீசுக்கும் சேர்த்து பணத்தைக் கொடுத்து அவர்கள் வாயை அடைப்பார்கள். இவைகள் வங்கிகள் அல்ல. நாட்டின் எதிரிகள்.
இதில் ஒரு வீட்டு கடன் மட்டுமே கொடுக்கும் நிறுவனம் ஆண்டுக்கு 4000 கோடிக்கு மேல் இலாபம் ஈட்டுகிறது. என் ஒரு emi 5083/- இல் 1800/- மோசடியாக வருவாய் என்று காண்பித்து 5083/- emi 5083+1800 = 6883/- என காட்டுவதால் தான் இந்த நிறுவனம் இவ்வளவு இலாபம் ஈட்டுகிறது என் ஒருவன் கணக்கில் இவ்வளவு என்றால் பிற கணக்குகள் மூலம் எவ்வளவு கொள்ளை அடிக்கிறார்கள் ?
நான் இங்கே குறிப்பிட ஒருதனியார் வங்கியில் 4.5 லட்சம் 2005 இல் வீட்டு கடன் வாங்கினேன் 8 வருடம் ஆகி விட்டது நான் செலுத்திய கடனுக்கு கணக்கு தர மறுக்கிறார்கள்.சரி கன்சூமர் கோர்ட்டில் வழக்கு போட்டு statement of Account என்னவென்றே தெரியாமல் கேசை டிஸ்மிஸ் செய்து விட்டார். சரி மேல்முறையீடு செய்யேன் அங்கு ஒருவருடத்திற்கு மேல் ஆகியும் இரண்டு இரண்டு மாதமாக வாயுதா வாரி கொடுத்து கொண்டு இருக்கிறார்கள்

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.