"இலங்கை பிரச்னை தொடர்பாக, தமிழக மாணவர்கள் நடத்தி வரும் தொடர் போராட்டம், கடும் விளைவுகளை ஏற்படுத்தும் முன், உருப்படியான பதிலை மத்திய அரசு தர வேண்டும்' என, ராஜ்யசபாவில், தி.மு.க., மற்றும் அ.தி.மு.க., - எம்.பி.,க்கள் வலியுறுத்தினர்.
இலங்கைக்கு எதிராக போர்க்குற்ற விசாரணை நடத்த வேண்டும் என்றும், ஐ.நா., மனித உரிமை கமிஷனில், அந்நாட்டுக்கு எதிராக, தாக்கல் செய்யப்பட்டுள்ள தீர்மானத்தை, இந்தியா ஆதரிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி, தமிழகத்தில் கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த மாணவர்கள் போராட்ட பிரச்னையை, ராஜ்யசபாவில் நேற்று, அ.தி.மு.க., மற்றும் தி.மு.க., - எம்.பி.,க்கள் எழுப்பினர்.
தி.மு.க., - எம்.பி., சிவா பேசியதாவது: மாநிலம் முழுவதும், ஆங்காங்கே கல்லூரி மாணவர்களின், தொடர் போராட்டங்கள் நடந்து வருகின்றன. இதனால், தமிழகமே பற்றி எரிந்து கொண்டிருக்கிறது. ஏறத்தாழ எல்லா கல்லூரிகளுமே, களத்திற்கு வரும் சூழ்நிலை காணப்படுகிறது. மத்திய அரசு என்ன செய்யப்போகிறது. ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை கமிஷனில், தாக்கலாகியுள்ள தீர்மானத்தை, ஆதரிக்கும் முடிவை, மத்திய அரசு எடுக்க வேண்டும். இலங்கை மீது, நடுநிலையான விசாரணைக்கு வழி வகை செய்ய வேண்டும். இதன் மூலமே, மாணவர்களை அமைதிப்படுத்த முடியும். மத்திய அரசுக்கு, இதில், பொறுப்பும் கடமையும் உள்ளது. இந்த பிரச்னையில், தெளிவான உறுதியான பதிலை மத்திய அரசு தர வேண்டும். அவ்வாறு செய்யத் தவறினால், தமிழகம் எங்கும் கடும் விளைவுகள் ஏற்படுவது நிச்சயம். எதிர்காலத்தில் நடக்கப்போகும், விரும்பத்தகாத நிகழ்வுகளை, தடுத்து நிறுத்த வேண்டும் எனில், மத்திய அரசு இனியும் காலம் கடத்தாமல், உரிய முறையில் நடந்து கொள்ள வேண்டும். இவ்வாறு சிவா பேசினார்.
அ.தி.மு.க., - எம்.பி., மைத்ரேயன் பேசியதாவது: ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை கமிஷனில், அமெரிக்கா தாக்கல் செய்துள்ள தீர்மானம், திருப்திகரமானது அல்ல. அதிலுள்ள அம்சங்கள் எல்லாமே, பெரிய அளவில், அழுத்தத்தை தரக்கூடியவை அல்ல. அத்துடன், தீர்மானத்தில் கூறப்பட்டுள்ள கருத்துக்களைக் கூட, மேலும் வலு இல்லாதவைகளாக மாற்ற, பல சக்திகள் முயன்று வருகின்றன. பாரபட்சமற்ற வகையில், சுதந்திரமான நீதி விசாரணை நடத்தப்பட வேண்டும். இதற்கு குறைவாக எதையும் ஏற்க முடியாது. மேலும், அமெரிக்காவின் தீர்மானத்தை, இந்தியா ஆதரித்தால் மட்டும் போதாது. அந்த தீர்மானத்தை, வலுவான தீர்மானமாக மாற்ற வேண்டிய பொறுப்பும், மத்திய அரசுக்கு உள்ளது. கடந்த, 1960ம் ஆண்டுகளில், இந்தி மொழியை திணித்தபோது, தமிழகம் பற்றி எரிந்தது. மாணவர்களே, அப்போதும் களத்தில் நின்றனர். அந்த இந்தி எதிர்ப்பு போராட்டம்தான், தமிழகத்தில் காங்கிரசை இல்லாமல் செய்து விட்டது. இப்போதும், மாணவர்களே களத்திற்கு வந்துள்ளனர் என்பதை இங்குள்ளவர்கள் உணர்ந்தால் சரி. இவ்வாறு மைத்ரேயன் பேசினார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்.பி., ரங்கராஜன் பேசுகையில், ""தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் இந்த பிரச்னையில், மத்திய, மாநில அரசுகள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். மாணவர்கள் போராட்டத்திற்கு, மத்திய அரசு போதிய உறுதி மொழியை அளிக்க வேண்டும். எத்தகைய முடிவை, மத்திய அரசு எடுத்தாலும், அதற்கு முன், மாநில அரசையும் கலந்து ஆலோசிக்க வேண்டும்,'' என்றார். இறுதியாக பதிலளித்து பேசிய அமைச்சர் ராஜிவ் சுக்லா, ""எம்.பி.,க்களின் உணர்வுகளை, அரசு கவனத்தில் கொள்ளும். இந்த கருத்துக்கள் எல்லாம், வெளியுறவு அமைச்சரிடம் தெரிவிக்கப்படும். இதுகுறித்து, அறிக்கை அளிக்கவும் ஏற்பாடு செய்யப்படும்,'' என்றார். லோக்சபாவிலும், இதே பிரச்னைக்காக குரல் கொடுத்த தி.மு.க., - எம்.பி.,யான டி.ஆர்.பாலு, ""அமெரிக்காவின் தீர்மானத்தை, மேலும் கூர்மையானதாக, இந்தியா மாற்ற வேண்டும். இல்லையெனில், விபரீத விளைவுகள் ஏற்படும்,'' என்றார். அ.தி.மு.க.,வின் தம்பி துரை, ""அமெரிக்காவை விட, இந்தியாவே இந்த விவகாரத்தில், முன்னின்று செயல்பட வேண்டும். இந்தியா சார்பில், அமெரிக்காவுக்கு எதிராக தீர்மானம் கொண்டு வர, மத்திய அரசு முன்வர வேண்டும்,'' என்றார்.
விரைவில் இறுதி முடிவு: ""இலங்கை எதிரான அமெரிக்காவின் தீர்மானத்தின் மீது என்ன நடவடிக்கை எடுப்பது என்பதை, மத்திய அரசு பரிசீலித்து வருகிறது. அதுபற்றி தீவிரமாக ஆய்வு செய்கிறது. இது முடிவு எடுக்கப்பட்ட உடன் சபையில் தெரிவிக்கப்படும்,'' என, வெளியுறவு அமைச்சர் சல்மான் குர்ஷித், ராஜ்யசபாவில் தெரிவித்தார். தி.மு.க., மற்றும் அ.தி.மு.க., - எம்.பி.,க்களின் கோரிக்கைக்குப் பின், ராஜ்யசபாவில் அறிக்கை தாக்கல் செய்த, சல்மான் குர்ஷித் இவ்வாறு கூறினார். அவர் மேலும் கூறியதாவது: தீர்மானம் தொடர்பாக, என்ன நிலையை கடைப்பிடிக்கலாம் என்பது குறித்து, மற்ற நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படுகிறது. என்ன நடவடிக்கை எடுக்க வேண்டியது தேவையோ, அதை மத்திய அரசு எடுக்கும். போர்க் குற்றங்கள் தொடர்பாக, பாரபட்சமற்ற, சுதந்திரமான, ஒளிவுமறைவற்ற விசாரணை நடைபெற வேண்டும் என்பதில், மத்திய அரசு உறுதியாக உள்ளது. இவ்வாறு குர்ஷித் கூறினார்.
- நமது டில்லி நிருபர் -
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
அன்பு நண்பர்களே இந்தியாவ்கு சுதந்திரம் சும்மா வரல பல போராட்டத்தின் பிறகே வந்தது, இப்போ நடக்கிற போராட்டம் தமிழகத்தை இந்தியாவிலிருந்து பிரிகவோ அல்லது பிரபாகரன் நல்லவன் என்று சொள்ளவதாற்கு அல்ல ஆனால் இனியாவது லங்கா தமிழர்கள் அமைதியான நிம்தியான வாழ்கை வாழ வழி அமைக்க வேண்டும் என்றே எந்த போராட்டம் உதவங்கள் தமிழர்கள் நிம்மதியோடு வாழ .....பாபு சு பபூர்சொலுcக்ய்@ஜிமெயில்.கம நன்றி வாழ்க தமிழ் வளர்க தமிழகம்
இலங்கையில் மனித நேயமற்ற போற்குற்றவாளி பிரபாகரன் குழந்தைகளை, அப்பாவி பொது மக்களை கேடயமாக பயன் படுத்தி தான் தமிழ் ஈழத்தின் முடி சூடா மானான் ஆஹா வேண்டும் என்று நினைத்தான் சக போராளிகளை கொன்று தீர்த்தான்- அவர்கள் வளர்ந்தால் நமக்கு ஆபத்து என்று. அதன் விளைவு ஈழ தமிழர்களின் பலம் குறைந்தது தமிழர்கள் அழிந்தனர். இந்த உண்மையை நம் நாட்டு மக்கள் அறிந்துவிட்டால் இங்கிருக்கும் புறம்போக்கு அரசியல் வாதிகளின் பிழைப்பில் மண் விழுந்து விடும் என்ற பயத்தில் இவர்கள் என்னவெல்லாம் கூத்தடிக்கிறார்கள். இப்போதும் நம் மாணவர்கள் உணர்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுத்து அறிவை மழுங்கடித்து அழிவுப்பாதையில் செல்கின்றனர்.
100% உண்மை. இங்கே படித்த பல பேர் உணர்ச்சிவசப்பட்டு செயல்படுகின்றனர். ராஜீவ் காந்தி பிரேமதாசா அமைதி ஒப்பந்தந்தின் போது ஓடி போய் ஒளிந்து கொண்ட பிரபாகரன் எப்போதும் அமைதியை விரும்பியதே இல்லை. அந்த விஷ பாம்பால் எவ்வளவோ உயிர்கள் பிரிந்துள்ளன என்பதை ஏன் எல்லோரும் மறக்கிறார்கள்? கல்லுரி மாணவர்கள் ஆக்கபூர்வ வேலைகள் எவ்வளவோ நடத்துபவதை விட்டு வெட்டி அரசியல்வாதிகள் பக்கம் சாய்வது மிகவும் வருந்ததக்கது. என்னுடைய கல்லூரியில் பத்து வருடம் முன்பு அரசியல் செய்த சக மாணவர்கள் இன்னும் வேலை வெட்டி இல்லாமல், தன்னையே காபாத்தி கொள்ள முடியாமல் இன்னும் திணறி வருகின்றனர். nss கேம்ப், முதியோர் இல்லம், குழந்தைகள் காப்பகம் அல்லது அகதி முகாம் - இங்கு சென்று ஒரு 1-2 மணி நேரம் செலவிடுங்கள் - ஒவ்வொருவரும் எவ்வளவு உபயோகமாக செயல்பட முடியும் என்பது தெரியும். ...
அய்யா erodeiva and sundasa, உங்க கூற்றுப்படியே பிரபாகரன் நல்லவரில்லை என்றே வைத்துக் கொள்வோம்...அவரும் அவர் தம் இயக்கத்தயும்தான் அழித்து விட்டீர்களே,,,,இப்போது மாணவர்கள் போராடுவது அங்குள்ள தமிழ் மக்களுக்காகத்தானே தவிர விடுதலை புலிகளுக்கு ஆதரவாக அல்ல...தினந்தோறும் நம் மீனவர்களை அடிக்கிறான் ..கொலை செய்கிறான் சிங்களவன்...நம் இந்திய அரசு தட்டி கேட்க மறுக்கிறது.....நாளை சிங்களவன் ஈரோட்டிலோ சென்னையிலோ வந்து உங்கள் வீட்டில் அடித்தான் என்றால்தான் உங்களுக்கு அதன் வலி புரியும்....பக்கத்து வீட்டில் பிடிக்கும் தீயை அணைக்காமல் நமக்கென்ன என்று இருந்தால் உங்கள் வீடும் எரிந்து சாம்பலாகும் என்பதை புரிந்து கொள்ளும் காலம் வரும்.......
எத்தனையோ இன்னல்களுக்கு ஆளான தமிழன் அவனை காப்பாற்றிக் கொள்ள தன்னை பாதுகாக்க குரல் கொடுத்தும் போராட்டம் நடத்தியும் மத்திய அரசின் கவனத்தை ஈர்ப்பதற்கு எவ்வளவோ முயற்சி எடுத்தும் மத்திய அரசு எதற்கும் செவி சாய்க்கவில்லை. கண்டு கொள்ளவே இல்லை உண்ணாவிரதம் இருந்தும் மறியல் போராட்டம் நடத்தியும் நம்மை நாமே ஏன் வருத்திக்கொள்ள வேண்டும். அதற்கு மாறாக தமிழ்நாட்டிலிருந்து பிரச்னைக்கு தீர்வு காணும் வரை ஒரு பைசா கூட வரி செழுத்த மாட்டோம் என்று முடிவு செய்ய வேண்டும்.. அப்போது தான் மத்திய அரசு சற்றேனும் நம்மை திரும்பி பார்க்கும்.
இலங்கையில் நடந்தது விடுதலை புலிகளை கசாப்பு செய்கின்ற ஒரு போர், இலங்கை அதில் வெற்றியும் பெற்று விட்டது. எது மனித உரிமை மீறல்?. அப்பாவி மக்களை புலிகள் கேடையமாக பயன் படுத்தியது மனித உரிமை மீறல் இல்லையா?. பள்ளிக்கூடம் சென்ற குழைந்தைகளை வலி கட்டாயமாக புலி படையில் சேர்த்தது மனித உரிமை மீறல் இல்லையா?, பால சந்திரன் மட்டும் தான் சிறுவனா?, புலிப்படையில் வலுக்கட்டமையாக சேர்க்க பட்ட சிறார்களின் மார்பில் பட்டது குண்டு இல்லையா? அமைதி முயற்சி மட்டும் பேச்சு வார்த்தைகளின் மூலம் தீர்வுக்காக முயற்சி செய்த மட்ட தமிழ் தலைவர்களையெல்லாம் கொலை செய்தானே பிரபாகரன் என்கின்ற கோமாளி, அது மனித உரிமை மீறல் இல்லையா?. நடப்பது புளிகரர்களின் கடைசி கட்ட பண பிரிப்பு, அதற்கு மாணவர்கள் இலக்ககிரார்கள், அவ்வளவு தான்.
யோவ் ...அதுதான் புலிகளை அழித்து விட்டீர்களே....பின்பு எதற்கு சிங்கள ராணுவம் ஐந்து தமிழர்களுக்கு ஒரு வீரர் வீதம் நிலை கொண்டிருக்கிறது? உன் சகோதரியோ அல்லது உன்வீட்டை சேர்ந்த பெண்களோ பாலியல் துன்புறுத்தல் செய்யப் பட்டால் கூட உங்கள் கருத்து இப்படித்தான் இருக்குமா? தமிழக மீனவர்கள் 578 பேர் கொள்ளப் பட்டிருக்கிறார்கள்..அவர்களும் என்ன விடுதலைபுலிகளா?அரக்க ராணுவம் இன்னும் ஒரு இனத்தையே கொன்று குவித்து கொண்டிருக்கிறது...அதை கண்டிக்க துப்பில்லை...சும்மா புலி வருது எலி வருதுன்னு சப்பை காரணம் சொல்லி பினாத்திக்கிட்டு.......
எதையாவது கிறுக்கிவிட்டு கிறுக்கன்கள் மாதிரி போவது மனிதர்களின் செயலன்று... அதிலும் விதியால் மதியால் வெல்லும் தமிழன் ஒரு படி மேல் சென்று சிந்திக்க வேண்டும்,.. ஆனால் தமிழர்கள் டாஸ்மாக்கில் குடிகொண்டு மேன்மையடைந்து விட்டதால் தான் நடவடிக்கைகள் முறையற்றதாக ஆகி விட்டது... நமது கடல் எல்லையை தாண்டினால்தான் மீன்கள் கிடைக்கும் எனவே நமது கடலோரப்படைகள் வேலை செய்ய வேண்டும்.. இதையெல்லாம் எழுதப்படாத சட்டமாக நடத்த வேண்டும்.. நமது கடல் படை நின்றால் சிங்களன் ஒரு காலமும் வாலாட்ட மாட்டான்... ஆனால் நமது கடற்படைக்கு உத்தரவு பிறப்பிக்க வக்கில்லாத அரசு தற்போது இருக்கிறது.. அவ்வளவுதான்...

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.