மேற்கு தொடர்ச்சி மலை பாதுகாப்பு ஆணையம்: ஜெ., எதிர்ப்பு
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
எழுத்தின் அளவு:
Advertisement

சென்னை: "மேற்கு தொடர்ச்சி மலை பாதுகாப்பு ஆணையத்தை மத்திய அரசு அமைப்பது, மாநில அரசின் அதிகாரத்தைப் பறிக்கும் செயல்' என, முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.
இதுகுறித்து, பிரதமர் மன்மோகன்சிங்கிற்கு, அவர் எழுதியுள்ள கடிதம்: மேற்கு தொடர்ச்சி மலை பாதுகாப்பு வல்லுனர் குழுவை அமைத்து, அக்குழு மேற்கு தொடர்ச்சி மலை பாதுகாப்பு ஆணையம் அமைப்பதற்கான பரிந்துரையை அளித்துள்ளது. இதுகுறித்து, மாநில அரசின் கருத்தை, மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத் துறை அமைச்சகம் கேட்கிறது. மேற்குதொடர்ச்சி மலை பாதுகாப்பு ஆணையத்தை அமைப்பது, சுற்றுச்சுழல் பாதுகாப்பு என்ற பெயரில், மாநில அரசின் அதிகாரத்தை பறிக்கும் செயலாகும். மாநிலங்களில் உள்ள வேளாண்மை, வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறைகளுக்கு, ஆணை பிறப்பிக்கும் அமைப்பாக, மேற்கு தொடர்ச்சி மலை பாதுகாப்பு ஆணையத்தை உருவாக்குகின்றனர். இந்திய அரசியல் அமைப்பு சட்டப்படி, நிலம் மாநில அரசின் பட்டியலில் வருகிறது. இந்நிலையில், நிலத்தில் செய்யும் பணிகளுக்கு, மத்திய அரசிடம் அனுமதி வாங்க வேண்டும் என, நிர்பந்திப்பது, மாநில அரசின் அதிகாரங்களில் ஆதிக்கம் செலுத்துவதாகும். தமிழகத்தில் உள்ள இயற்கை மற்றும் சுற்றுச்சூழலை பாதுகாக்க பல்வேறு திட்டங்கள் மற்றும் சட்டங்களை வகுத்து செயல்படுத்தி வருகிறோம்.
குறிப்பாக, மேற்கு தொடர்ச்சி மலை பாதுகாப்புக்கும், மலைப் பகுதிகள் மேம்பாட்டுக்கும், தனி விதிகளை வகுத்துள்ளோம். மேலும், மத்திய அரசின் பல்வேறு சட்டங்களை பின் பற்றியும் வருகிறோம். இந்நிலையில், மேற்கு தொடர்ச்சி மலை பாதுகாப்பு வல்லுனர் குழு, வனத்தை பாதுகாக்க சிறப்பான திட்டங்கள் எதையும் பரிந்துரைக்கவில்லை.தமிழக வனத்தை பாதுகாக்கும் வகையில், மூன்று புலிகள் காப்பகம், மூன்று தேசிய பூங்காக்கள் மற்றும் எட்டு வன உயிரின சரணாலயங்களைக் கொண்டு, உரிய சட்டங்களை பின்பற்றி வருகிறோம். இச்சூழலில், மேற்கு தொடர்ச்சி மலை பாதுகாப்பு ஆணையத்தை அமைப்பது, மேலும் ஒரு அதிகார மையத்தை உருவாக்கும் செயலே. வன பாதுகாப்பு என்ற பெயரில் தேவையற்ற அதிகார மையமாகவே இந்த ஆணையம் இருக்கும். மேற்கு தொடர்ச்சி மலை பாதுகாப்பு வல்லுனர் குழுவின் பரிந்துரைகள் மீதான கருத்துக்களை, தமிழக அரசு அமைத்துள்ள சுற்றுச்சூழல் வனத் துறையின் சிறப்புக் குழு அளிக்கும். இவ்வாறு ஜெயலலிதா கூறியுள்ளார்.


Advertisement
Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (16)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Rangarajan Pg - CHENNAI,இந்தியா
16-மார்-201312:11:17 IST Report Abuse
Rangarajan Pg எது எப்படி இருந்தாலும் மேற்கு தொடர்ச்சி மலை பகுதி ஒரு உலக அதிசயம். அதன் தன்மையை கெடுக்காமல் இருந்தாலே போதும். இதில் புதிய அதிகார மையம் அது இது என்று தேவை இல்லாத விஷயங்களை புகுத்தி அதற்கு ஒரு போராட்டம் என்று இறங்கி விட போகிறார்கள். வனங்களும் அதில் வாழும் மிருகங்களும் மனித வாழ்க்கைக்கு மிக முக்கியம். அதை காப்பாற்றுவதில் அக்கறை காட்டுங்கள்.
Rate this:
Share this comment
Cancel
நாஞ்சில் சுலைமான் - THUCKALAY,இந்தியா
16-மார்-201311:24:12 IST Report Abuse
நாஞ்சில் சுலைமான் மேற்குத்தொடர்ச்சி மலையை பாதுகாப்பதற்கு என்று தனி ஆணையம் வகுப்பது ஏராளமான தேயிலை மற்றும் நறுமண பொருட்களை விளைவிக்கும் தோட்டங்களில் பணியாற்றும் ஆயிரக்கான தொழிலாளர்களின் வாழ்வில் மண்ணை அள்ளிப்போடுவதற்கு வழிவகுக்கும்.
Rate this:
Share this comment
Cancel
மதுரை விருமாண்டி - சான் ஹோஸே, கலிபோர்னியா ,யூ.எஸ்.ஏ
16-மார்-201310:06:48 IST Report Abuse
மதுரை விருமாண்டி கொடநாடு பாதுகாப்பு ஆணையத் தலைவி..
Rate this:
Share this comment
Cancel
m.s.kumar - chennai,இந்தியா
16-மார்-201309:36:28 IST Report Abuse
m.s.kumar மேற்கு தொடர்ச்சி மலை உலக முக்கியத்துவம் வாய்ந்த ஒன்று. இந்த மலையை பாதுகாப்பது அரசின் கடமை. மதிய அரசு மாநில அரசுடன் சேர்ந்து பணி ஆற்றிட வேண்டும் .அபோதுதான் முழுமையான பாதுகாப்பு கிடைக்கும்
Rate this:
Share this comment
Cancel
saravanan tamil - chennai,இந்தியா
16-மார்-201308:54:03 IST Report Abuse
saravanan tamil மம்மி.... மம்மி ....உங்களோட கோடா நாடு எஸ்டேட் அங்க தான் இருக்கா?
Rate this:
Share this comment
Cancel
villupuram jeevithan - villupuram,இந்தியா
16-மார்-201307:58:09 IST Report Abuse
villupuram jeevithan மத்திய அரசுக்கு பன்னாட்டு நிறுவனகளுக்கு ஒதுக்குவதற்கு நிலம் வேண்டாமோ?
Rate this:
Share this comment
Cancel
Ambaiyaar@raja - Nellai to chennai ,இந்தியா
16-மார்-201307:49:37 IST Report Abuse
Ambaiyaar@raja ஆமாம் ஜெயா சொல்வது சரிதான் ஏற்கனவே மேற்கு தொடர்ச்சி மலையில் இருந்து வரும் ஆறுகளின் தண்ணீர் பிரசனைஇல் காங் கட்சி அரசு தமிழனுக்கு துரோகம் தான் செய்யுது. இதையும் செய்தால் இனிமேல் கொடைகானல், வால்பாறை, ஏற்காடு, ஊட்டி, குன்னூர், கூடலூர், கோத்தகிரி, போன்ற மலையில் உள்ள ஊர்களுக்கு தமிழன் செல்வதை கூட தடை செய்வார்கள் மத்திய அரசின் அதிகார வரம்புக்குள் உள்ளது என்று காரணம் வேறு சொல்லுவார்கள்.
Rate this:
Share this comment
Cancel
P. Kannan - Bodinayakkanur,இந்தியா
16-மார்-201304:48:36 IST Report Abuse
P. Kannan மத்திய அரசின் செயல் உள்நோக்கம் கொண்டது. இதனால் விவசாயத்தையே தொழிலாக கொண்டுள்ள பெரும்பாலான தமிழக மக்களுக்கு துன்பமே விளையுமே அன்றி நன்மைகள் ஏற்படாது.
Rate this:
Share this comment
Cancel
aymaa midas=vison2023 - kodanaatu, koththadimai kuppam, vilaiyilaa kaiyuttu ,நிய்யூ
16-மார்-201304:46:10 IST Report Abuse
aymaa midas=vison2023 ஆத்தா உங்களை தவிர எல்லாருமே டம்மீ பீஸ் என்பது உங்கள் அகம்பாவ கருத்து
Rate this:
Share this comment
Cancel
s.maria alphonse pandian - CHENNAI-88,இந்தியா
16-மார்-201304:43:22 IST Report Abuse
s.maria alphonse pandian நேற்று முன்தினம் சென்னை அரசு பொது மருத்துவ மனைக்குள்ளே புகுந்து நோயாளியை வெட்டி கொன்ற சம்பவ செய்தியை வெளியிடாமல் இருட்டடிப்பு செய்ததேனோ?தமிழ் நாட்டின் சட்ட சீர்குலைவை வாசகர்கள் வறுத்தெடுத்து விடுவார்களென பயந்தா?
Rate this:
Share this comment
நாஞ்சில் சுலைமான் - THUCKALAY,இந்தியா
16-மார்-201309:44:32 IST Report Abuse
நாஞ்சில் சுலைமான் கத்தரி வெயில் ஏற்கனவே வறுத்து எடுத்துக்கொண்டிருக்கும் போது அந்த நியூசை வேறு வறுத்து எடுக்க வேண்டுமா என்ற நல்ல (?) எண்ணம்தான் காரணம்....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.
மேலும் செய்திகள்