புதுடில்லி: இத்தாலி தூதர், டேனியல் மன்சினி, இந்தியாவை விட்டு வெளியேறாமல் இருப்பதற்காக, நாட்டில் உள்ள அனைத்து விமான நிலையங்களுக்கும் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
கேரள கடல் பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்த, இரண்டு மீனவர்களை, இத்தாலி கடற்படை வீரர்கள், கடந்தாண்டு, சுட்டுக் கொன்றனர். இது தொடர்பாக, இத்தாலி வீரர்கள் இருவர் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனர். இத்தாலியில் நடக்கும் தேர்தலில் ஓட்டளிப்பதற்காக, இவர்கள் பரோலில் செல்வதற்கு, சுப்ரீம் கோர்ட் அனுமதித்தது. "ஓட்டளித்து விட்டு, அவர்கள் திரும்ப வந்து விடுவர்' என, இத்தாலி தூதர், டேனியல் மன்சினி அளித்த, உத்தரவாதத்தை அடுத்து, சுப்ரீம் கோர்ட், அவர்களை இத்தாலி செல்ல அனுமதித்தது. இந்நிலையில், "பரோலில் சென்ற இத்தாலி வீரர்களை மீண்டும் இந்தியாவுக்கு அனுப்ப மாட்டோம். இந்தியாவில் நடக்கும் விசாரணையிலும், அவர்கள் பங்கேற்க மாட்டார்கள்' என, இத்தாலி அரசு, சமீபத்தில் அதிரடியாக அறவித்தது. இந்த விவகாரம், இந்திய அரசியலில், பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. பார்லிமென்டிலும், பெரும் புயலை கிளப்பியது. இதற்கிடையே, சுப்ரீம் கோர்ட்டில், இது தொடர்பான வழக்கு, நேற்று முன்தினம் விசாரணைக்கு வந்தது. அப்போது, சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டதாவது: இத்தாலி வீரர்கள், ஓட்டுப் போட்டு திரும்ப வந்து விடுவர் என, இத்தாலி தூதர் உறுதி மொழி அளித்தார். இதை நம்பித் தான், அவர்களை பரோலில் செல்ல அனுமதித்தோம். தற்போது, அவர்ளை இந்தியாவுக்கு அனுப்பப் போவது இல்லை என, இத்தாலி அரசு அறிவித்துள்ளது. எனவே, சுப்ரீம் கோர்ட்டுக்கு அளித்த, உறுதிமொழியை மீறிய, இத்தாலி தூதர், டேனியன் மன்சினி, இந்தியாவிலிருந்து வெளியேற, தடை விதிக்கப்படுகிறது. இவ்வாறு, சுப்ரீம் கோர்ட் உத்தரவு பிறப்பித்தது.
உஷார்: இதையடுத்து, இத்தாலி தூதர், இந்தியாவை விட்டு வெளியேறாமல் தடுக்கும் வகையில், நாட்டில் உள்ள, அனைத்து விமான நிலையங்களும், உஷார் படுத்தப்பட்டுள்ளன. அனைத்து விமான நிலையங்களுக்கும், இது தொடர்பாக, மத்திய உள்துறை அமைச்சகம், சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.இத்தாலி தூதரின் நடவடிக்கைகள் கண்காணிக்கப்பட்டு வருகின்றன. இதுகுறித்து, மத்திய வெளியுறவு அமைச்சர், சல்மான் குர்ஷித் கூறியதாவது: இத்தாலி விஷயத்தில், சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவை, அரசின் அனைத்து ஏஜன்சிகளும் பின்பற்றும். இந்த வழக்கு, சுப்ரீம் கோர்ட்டில், வரும், 18ம் தேதி, மீண்டும் விசாரணைக்கு வருகிறது. அப்போது, சுப்ரீம் கோர்ட் என்ன உத்தரவு பிறப்பிக்கிறதோ, அதற்கு ஏற்றால் போல், நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு, சல்மான் குர்ஷித் கூறினார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
இத்தாலிய குற்றவாளிகளை(குற்றம் சாட்டப்பட்டவர்களை) நாட்டைவிட்டு வெளியேற அனுமதுத்தது,இப்போது தூதரை வெளியேற அனுமதிக்க மாட்டோம் என்பது எல்லாம் மக்களை ஏமாற்றும் வேலை. ஒரு நாட்டு தூதரை கட்டுப்படுத்துவதோ அல்லது சிறைபிடிப்பதோ சர்வ தேச சட்டப்படி குற்றம். இன்னும் ஓரிரு நாளில் வேறு மாதிரி பேசுவார்கள் நமது அதிகாரிகள்.இந்தியனின் ஊயிர் இந்தியாவிலேயே மதிக்கப்படுவதில்லை இந்தியர்களால் எனும் போது இத்தாலிகாரனா மதிக்கபோகின்றான்.
இது சரி 1986ஆம் ஆண்டு நவம்பர் 1-ந் தேதி சென்னையில் தங்கியிருந்த டக்ளஸ் தேவானந்தா, திருநாவுக்கரசு என்ற இளைஞரை சுட்டுக் கொன்றார். இந்த வழக்கில் டக்ளஸ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். பின்னர் அவர் ஜாமீனில் வெளிவந்து இலங்கைக்குப் போனார். மீண்டும் வழக்குகளில் ஆஜராக வில்லை. நீதிமன்றம் இவரை கைது செய்ய சொல்லி பிடியாணை பிறப்பித்துள்ளது. இதுவரை கைது செய்யப்படவில்லை டெல்லி வந்து இதே பிரதமருடன் கைலாகு கொடுத்து விட்டும் சென்றுள்ளார். எல்லாம் சந்தர்ப்பவாதம் தான்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.