No kick in TASMAC: youths go for 420 beedas | டாஸ்மாக் சரக்கில் "கிக்' இல்லை: "420' பீடாவுக்கு மாறும் இளைஞர்கள்| Dinamalar
Advertisement
டாஸ்மாக் சரக்கில் "கிக்' இல்லை: "420' பீடாவுக்கு மாறும் இளைஞர்கள்
Advertisement
 
 
Advertisement
 
 
 
எழுத்தின் அளவு:
Advertisement

சேலம்: டாஸ்மாக் கடைகளில், விற்பனை செய்யப்படும், பெரும்பாலான சரக்குகள், கலப்படம் செய்து விற்பனை செய்யப்படுவதால், போதுமான அளவு போதையில்லை என்று புலம்பி வந்த இளைஞர்கள், சமீபகாலமாக, குவாட்டர் மது குடித்த பிறகு, 420 உள்ளிட்ட, "கிக்' ஏற்றும் பீடா வகைகளை விரும்பி வாங்கி சாப்பிடுகின்றனர்.
தமிழகத்தில், 6,850 டாஸ்மாக் கடைகள் உள்ளது. ஆண்டுதோறும் டாஸ்மாக் கடைகள் மூலம், அரசுக்கு கோடிகளில் வருவாய் கிடைத்து வந்தாலும், முன்னணி சரக்குகள் கிடைக்காததால், குடிமகன்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர். சரக்குகளின் விலை அவ்வப்போது ஏற்றப்பட்டு, தினம் ஒரு புதிய ரகம் அறிமுகம் செய்யப்பட்டு வருகிறது. ஆனால், பார்களில் வேலை செய்பவர்கள், குவாட்டர் பாட்டில்களில், "கட்டிங்' விற்பனைக்காக, சரக்குகளில், தண்ணீர், சோடா ஆகியவற்றை கலந்து விற்பனை செய்வது அதிகரித்து வருகிறது. மேலும், பல புதிய நிறுவனங்கள், மிக, "மட்டமான' சரக்குகளை விற்பனை செய்வதால், குவாட்டர் குடிக்கும் குடிமகன்களுக்கு போதை ஏறுவதில்லை. பாட்டிலை திறந்தால், குமட்டல் நாற்றம் எடுத்தாலும், வேறு வழியில்லாமல், கையில் இருக்கும் காசுக்கு, சரக்கை குடித்து திரும்புகின்றனர். டாஸ்மாக் பார், சரக்குகளில், போதை ஏறாததால், சமீபகாலமாக இளைஞர்களின் பார்வை, "கிக்' ஏற்றும் பீடா வகைகளின் பக்கம் திரும்பியுள்ளது.
தமிழகத்தில், ராஜஸ்தான், பீகார், உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட வெளிமாநிலங்களை சேர்ந்தவர்கள், பல இடங்களில், பான்மசலா, பீடா, ஜரிதா ஆகியவற்றை விற்பனை செய்யும் கடைகளை நடத்தி வருகின்றனர். இவர்கள், "420' ரக பீடா, 20 ரூபாய்க்கும், "480' ரக பீடா, 25 ரூபாய்க்கும், "540' ரக பீடா, 30 ரூபாய்க்கும், டபுள் ஸ்டாரங், "420' ரக பீடா, 40 ரூபாய்க்கும் விற்பனை செய்கின்றனர். டாஸ்மாக், சரக்கில், போதை கிடைக்காத குடிமகன்கள், குறிப்பாக இளைஞர்கள் பலர், "420' மற்றும் டபுள் ஸ்டராங், "420' ரக பீடாக்களை, போடுவதில் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். ஜரிதா, பான்மசாலா, ஸ்வீட் உள்ளிட்ட பல்வேறு கலவைகளுடன் தயாரிக்கப்படும் இந்த பீடாக்களை, சாதாரணமாக போட்டாலே, தலை, "கிறு கிறு' வென்று இருக்கும். அதனால், போதை இளைஞர்கள், சரக்கு அடித்தவுடன், பீடா கடைகளை தேடி ஓடுகின்றனர். அங்கு, பீடாவை, "சுவைத்த' பிறகு, ஏற்படும், "கிக்கோடு' திரும்புகின்றனர். பீடா போடும் பட்சத்தில், அது சரக்கு வாடையையும் குறைத்து, பீடா நாற்றத்தையே மேலோங்கி காட்டுகிறிது. அதனால், வீட்டில் இருப்பவர்கள், தங்கள் பிள்ளைகள், வெற்றிலை, பாக்கை போடுவதாக நினைத்து கொள்கின்றனர். டாஸ்மாக் கடைகளில், ஏற்கனவே, 80 சதவீதம் இளைஞர்கள், குடிப்பழக்கத்தால், தங்கள் எதிர்காலத்தை தொலைத்து நிற்கும் சூழ்நிலையில், நேரடியாக, நரம்பு உள்ளிட்டவற்றுக்கு பாதிப்பை ஏற்றும், போதை பீடாக்களை போடுவதில், ஆர்வம் காட்டுவது, இளைஞர்களின் வளர்ச்சி பாதையை கேள்விக்குறியாக்கியுள்ளது. பீடா விற்பனை செய்யும் போர்வையில், பலர் சமூக விரோதமாக, அதிக போதை ஏற்றும் வஸ்துக்களை விற்பனை செய்வதாகவும், குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளது. ஜரிதா கடைகளில், தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா என்பது குறித்து சம்மந்தப்பட்ட அரசு நிர்வாகம் சோதனை மேற்கொண்டு, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.

Advertisement
Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (60)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Snake Babu - Salem,இந்தியா
18-மார்-201309:38:31 IST Report Abuse
Snake Babu கலப்படம்ல ஒன்னும் இல்ல. அதிகாரபூர்வம வரும் சரக்கு தரம் குறைந்து அனுப்ப படுகிறது. மத்த குடும்பம் அழிந்தாலும் பரவாஇல்லை, தனக்கு வருமானம் வந்தால் போதும் என்ற நிலைமை அரசாங்கம் ஏற்படுத்தி கொடுத்திருக்கும் போது, தரத்தை பற்றி யாரும் கவலைபடுவதில்லை. இவ்வளவு கூட்டு கொள்ளை நடக்கும் போது மூன்றாவதாக கலப்படத்தை அனுமதிக்க மாட்டார்கள். தயாரிப்பு முதல் குடித்து முடியும் வரை கண்காணிப்பு இருக்கும் போது கலப்படம் எப்படி நடக்கும். ஒருவேளை 420 வியாபாரத்தில் அரசாங்கத்திற்கு ஆர்வம் வந்துவிட்டதோ?
Rate this:
Share this comment
Cancel
Raj - Chennai,இந்தியா
18-மார்-201307:36:38 IST Report Abuse
Raj டாஸ்மாக்கில் பீடவையும் விற்கலாமே நல்ல வருமானம் கிடைக்கும் யார் எக்கேடு கெட்டா என்ன
Rate this:
Share this comment
Cancel
adithya - salem,இந்தியா
17-மார்-201317:50:20 IST Report Abuse
adithya kudi kudiyai kedukkum
Rate this:
Share this comment
Cancel
RAJA - chennai,இந்தியா
17-மார்-201317:17:08 IST Report Abuse
RAJA எரி சாராயம் குடித்து பலர் இறப்பது போல் டாஸ்மாக் சரக்கு குடித்து சில பேர் இறந்தால் தான் இவர்கள் மூடுவார்கள் போல
Rate this:
Share this comment
Cancel