சென்னை: ஈழ தமிழர்களுக்காக, மாணவர்களின் போராட்டம் வலுவடைந்து வரும் நிலையில், தமிழகம் முழுவதும் உள்ள கலை அறிவியல் கல்லூரிகளுக்கு, காலவரையற்ற விடுமுறையை, தமிழக அரசு அறிவித்துள்ளது.
தேர்வுகள்: திங்கள்கிழமை அன்று, கல்லூரி மாணவர்கள், நாடு தழுவிய பேராட்டம் நடத்த அறிவிப்பு வெளியாகியுள்ள நிலையில், அரசு இந்த அதிரடி நடவடிக்கையை எடுத்துள்ளது. இதையடுத்து, கல்லூரிகளில் நடந்து வரும் மாதிரி தேர்வுகளும், தேதி குறிப்பிடாமல் தள்ளி வைக்கப்பட்டு உள்ளன. ஈழ தமிழர்களுக்காக, தமிழகம் முழுவதும், மாணவர்களின் போராட்டம், ஐந்தாவது நாளாக நேற்றும் தொடர்ந்தது. சென்னையில் நடந்த மாணவர்கள் உண்ணாவிரதத்தில், பலரது உடல் நிலை மோசமடைந்தது. அவசர சிகிச்கைக்காக, 30க்கும் மேற்பட்ட மாணவர்கள் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உள்ளனர். சென்னையில், லயோலா கல்லூரி மாணவர்கள், எட்டு பேர் துவக்கி வைத்த, ஈழ தமிழர்களுக்கான போராட்டம், தமிழகத்தை ஸ்தம்பிக்க வைத்துள்ளது.
சென்னை, நந்தனம், மாநிலக் கல்லூரி, புது கல்லூரி, சட்டம் மற்றும் பொறியியல் கல்லூரி மாணவர்கள் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர், சாலை மறியல், உண்ணாவிரதப் போராட்டங்களில் ஈடுபட்ட வண்ணம் உள்ளனர். இதனால், சென்னை உள்ளிட்ட பல நகரங்களில் சாலை போக்குவரத்து, ரயில் போக்குவரத்து ஆகியவை, பாதிக்கப்பட்டு உள்ளன. வங்கி, தபால் நிலையம் போன்ற மத்திய அரசு அலுவலகங்களை மாணவர்கள் முற்றுகையிட்டு போராடுவதால், அந்த அலுவலகங்களின் பணிகள், முற்றிலும் பாதிக்கப்பட்டு வருகின்றன. மத்திய அரசு மற்றும் இலங்கை அரசின் செயல்பாடுகளைக் கண்டித்து, அரசியல் தலைவர்களின் உருவ பொம்மைகளை கொளுத்தி வருவதால், பெரும் பதற்றமும் நிலவுகிறது. ஆயிரக் கணக்கான மாணவர்கள், உண்ணாவிரதம், மறியல் போன்ற போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். மூன்று நாட்களுக்கு மேல் உண்ணாவிரதம் தொடரும் நிலையில், உடல்நிலை மோசமடைந்த, பல பகுதியில் உள்ள, நூற்றுக்கணக்கான மாணவர்கள், மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். போராட்டத்தில் ஈடுபடும் மாணவர்களுக்கு ஆதரவாக, மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து வருவதால், கல்லூரிகள் இயங்காமல், வெறிச்சோடி காணப்படுகின்றன.
விடுதிகள் மூடல்: இந்நிலையில், மாணவர்களின் மாநிலம் முழுவதும் நிலவும் பதற்றத்தை தணிக்க, அனைத்து கலை, அறிவியல் கல்லூரிகளுக்கும், காலவரையற்ற விடுமுறையை, அரசு, நேற்று மாலை அறிவித்தது. இதற்கிடையே, கல்லூரி விடுதிகளும் மூடப்படலாம் என்ற சூழல் நிலவுவதால், மாணவர்கள் விடுதியை விட்டு வெளியேறாமல் உள்ளனர். கல்லூரிகளில் தற்போது நடைபெற்று வரும் மாதிரி தேர்வுகளும், மறுதேர்வு அறிவிக்கப்படாமல் ஒத்தி வைக்கப்பட்டு உள்ளன. அனைத்து சட்ட கல்லூரிகளுக்கும், காலவரையற்ற விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.
போராட்டம் தொடரும்: கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்துள்ள நிலையில், போராட்டத்தை தொடர்வதாக, தமிழீழ விடுதலைக்காக மாணவர் போராட்ட குழு அறிவித்துள்ளது. இதுகுறித்து போராட்ட குழுவினர் கூறியதாவது: வரும், 18ம் தேதி, 31 மாவட்டங்களில் உள்ள, மருத்துவம், பொறியியல், சட்டம், கலை அறிவியல் கல்லூரி மாணவர்கள், வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக அறிவித்து உள்ளோம். இதுபோல, தமிழகம் முழுவதும் உள்ள, ஒரு கோடி மாணவர்களை ஒருங்கிணைந்து, மாபெரும் தொடர் முழக்க போராட்டத்தை நடத்த உள்ளோம். மாநகரங்கள், நகரங்கள், சிறு நகரங்கள் என அனைத்து இடங்களிலும், மாணவர்களின் தொடர் முழக்க போராட்டம் நடைபெறும். அனைத்து மாவட்ட போராட்ட குழுக்களுக்கும், தனி திட்டங்களை தயாரித்து, அந்தந்த மாவட்ட மாணவர்களுக்கு வழிகாட்டுவர். இவ்வாறு அவர்கள் கூறினார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
மாணவர் நலனில் அக்கறையுள்ள அனைவரும் அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற முயற்சி செய்யுங்கள்.. முதல்வர் அவர்கள் மாணவர்களின் கோரிக்கைகளை மேலிடத்தில் வலியுறுத்தி நிறைவேற்ற செய்து மாணவர்களின் படிப்புக்கு வழிகாட்டுங்கள்.. யாரவது ஒருவர் போராடதானே வேண்டும்.. காவல்துறையை உங்களின் முழு கண்ரோளில் வைத்து அவர்கள்(மாணவர்கள்) மீது எந்த ஒரு அடக்குமுறையையும் கையாண்டுவிடாதீர்கள்.. மாணவர்களே உங்களுடன் எந்த ஒரு அரசியல் நிழலும் படவிடாதீர்கள்.. "அம்மா உங்களால் முடியும்" என்ற பாதகைகளுடன் போராடும் வெளிநாடு வாழ் தமிழர்களுக்கு ஆதரவாக கண்டிப்பாக ஏதேனும் செய்யுங்கள்.. மத்திய உளவுத்துறை குறித்து கவலை கொள்ளாமல் தமிழர் நலம் காணுங்கள் என்றும் அனைவரும்(தமிழுனர்வுள்ள,நடுநிலையாளர்களும்) உங்கள் பக்கம்.. உங்களின் நடவடிக்கைகள் வெளிப்படையானவை என்று உலக தமிழர்கள் நன்கு அறிந்து உள்ளார்கள்.. தினமலரின் செய்திக்கு நன்றி..
இந்த லீவேல ஒழுங்க எதாவது சுய தொழிலை உருப்படியாக கட்டரு கொண்டு உங்க தாய் தந்தையரை காபட்ட்ற வழி பாருங்கள். சும்மா போராட்டம் அது இது என்று சொல்லி உங்கள் பொன்னான காலத்தை வீண் அடிக்காதீர்கள்
படிக்கும் மாணவர்களுக்கு அரசியல் தேவை இல்லை. இந்த காலத்தில் வேறு மொழிகளை கட்டரு கொள்ளுங்கள் அப்போது தான் நாம் எல்லா இடங்களிலும் வேலை செய்ய முடியும்.
சிந்தித்து பாருங்கள்.
தமிழக அரசு சரியான கோணத்தில் செல்கிறது.. இந்த போராட்டங்களை எதிர்கட்சிகள் அரசியல் லாபத்துக்காக பயன்படுத்தும்... குறிப்பாக திமுக... திமுக மத்தியில் ஆட்சியில் இருக்கும் பொது, 2009 இல் தான் இலங்கை போர் நடைபெற்றது.. அப்போது தான் பாலசந்திரனும் கொல்லபட்டிர்ப்பான்..ஆனால் அவன் இருப்பது போன்ற பதாகைகளை இப்போது வைத்து கொண்டு திமுக ஊர்வலம் சமீபத்தில் சென்றது லாஜிக் இல்லாதது. வெட்ககேடானது... மாணவர்களே ... அட எங்க வருங்கால மாணவ கண்ணுங்களா.... பரிட்சை நெருங்குகிறது.... உங்க அப்பன் , ஆத்தா , கஷ்டப்பட்டு சம்பாதித்து, கல்லூரிக்கு அனுப்பினா, கேட்பார் பேச்ச கேட்டுட்டு இப்படி ஹாயா உண்ணாவிரதம் இருந்தா எப்படி? உங்களுக்கு உண்மையிலேயே இனஉணர்வு அல்லது, பச்சாதாபம் இருந்தா 4 வருடத்துக்கு முன்னால் அல்லவா போராடியிருக்க வேண்டும்... 4 வருடத்துக்கு முன்னால் நான் கல்லூரியிலேயே சேரவில்லையே என சப்பை கட்ட வேண்டாம்... 4 வருடமாக இலங்கை தமிழர்களை பற்றி கவலை படாதவர்கள், இப்போ திடீரென போராட்டம் நடத்துவது ஏனோ? ஐநா சபை, அமெரிக்கா - இவர்கள் எல்லாம் நடவடிக்கை எடுத்தாலும் , ராஜபக்ஷே , அப்படியே , எதுவும் நடக்காதது போல தான் திருட்டு முழி முழிக்கபோகிறார்... நமது அரசியல்வியாதிகள் , உங்களை தூண்டி விட்டு , வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் 40 பெற கனவு காண்கின்றனர்.. .. ஒவ்வொரு அரசியல்வாதிக்கும் ஒவ்வொரு பீலிங்கு... இதுல இடையில நீங்க எதுக்கு கண்ணுங்களா? காசு கொடுத்து படிக்க வைக்கும் உங்க அப்பன் ஆத்தாக்கு நல்ல பிள்ளையா இருங்க... அதுவே நீங்க நாட்டுக்கு செய்யும் உபகாரம்.. அரசியல்வாதி பின்னால் போனால் , உங்களில் ஒன்னுரெண்டு பேர் , ஏதாவது கவுன்சிலர் பதவி பெறுவான்... மத்தவங்க எல்லாம் நம்பி ஏமாறபடுவர்... பாராளுமன்ற தேர்தல் வரை தான் இலங்கை தமிழர் பற்றி கட்சிகள் ஒப்பாரிகள் வைக்கும்... ஓட்டுபதிவு முடிஞ்சு அன்னைக்கு சாயங்காலமே, அவுங்க கிட்ட இலங்கை தமிழர்கள் பற்றி கேளுங்க... அப்போ வைப்பாங்க பாருங்க உங்களுக்கு ஆப்பு.... அடுத்த பாராளுமன்ற தேர்தல்வரை தான் நமது அரசியல் கட்சிகள் இலங்கை பிரச்சினையை கையில் வைத்திருக்கும்.. அதற்க்கப்புறம் அவர்களும் மறந்து விடுவார்கள்.. நீங்களும் மறந்து தான் ஆக வேண்டும்... ஏனென்றால் அவர்கள் TV க்கள் உசுப்பி விடுவதால் தான் இப்போது நீங்கள் போராடுகிறீர்கள்.. மாணவர்களை இப்போதாவது போராடவிடுங்கள் என்று சொல்லும் மேதாவிகளை கேட்கிறேன்....சுதந்திர காலத்துக்கு பின், மாணவர் போராட்டம் வெற்றி பெற்றது ஹிந்தி எதிர்ப்பு போராட்டத்தில் மட்டும் தான்.. அதுவும் அறிஞர் அண்ணாவின் கடும் முயற்சியால் அப்போது வெற்றி பெற்றது...அதற்கப்புறம் மாணவர் போராட்டம் வெற்றி பெற்றதாக சரித்திரம் இல்லை... ஏனென்றால் கழகங்கள் சுயநலத்துக்காக தான் மாணவர் போராட்டத்தை தூண்டுவர்.. மத்திய அரசால் மட்டுமே இலங்கை பிரச்சினையை தீர்க்க முடியும்.. இலங்கை தமிழர்கள் இப்போது, குண்டு சத்தம் இல்லாமல் கொஞ்சம் அமைதியாக உள்ளதாக தான் ஐநா அமைப்பு சொல்கிறது...ஆகையால் மாணவர்கள் குட்டையை குழப்பாமல், தன்னால் முடிந்த அளவுக்கு இலங்கை தமிழருக்கு உதவலாம்... குறிப்பாக, இலங்கை தமிழ் பெண்களை அல்லது நமது நாட்டில் அவதியுறும் திருமணம் ஆகாத இலங்கை அகதி தமிழ் பெண்களை மணமுடித்து இந்திய மருமகளாக்கும் துணிச்சல் நமது மாணவர்களுக்கு உள்ளதா? ?? ???... சொல்லுங்க பார்ப்போம்... மாணவரின் போராட்டத்துக்கு ஆதரவு தருபவர்கள் முன்மாதிரியாக இருந்து , இது போல [ இந்திய தமிழன் - இலங்கை தமிழ் பெண் ] அல்லது [ இலங்கை தமிழன் - இந்திய தமிழ் பெண் ]... இப்படி இலவச திருமணங்களை நடத்தி, புது யுகத்துக்கு வழி அமைப்பார்களா?
தமிழ்நாட்டு மாணவர்கள் அனைவரும் ஒன்று திரண்டு சென்னையில் உள்ள அமெரிக்க தூதரகத்தை முற்றுக்கையிடவேண்டும், அவ்வாறு செய்யும்போது போற்குற்றவிசாரனை மற்றும் தனி ஈழத்திற்கான
சர்வதேச பொது வாக்கெடுப்பிற்கு ஆர்பாட்டம், முழக்கம் செய்யவேண்டும். அப்போதுதான் சர்வதேச அரங்கில் நன்றாக ரீச் ஆகும். தன்னலம் கருதாத மாணவசெல்வங்களுக்கு வாழ்த்துக்கள். உங்கள் மூலமாகவாவது தனித்தமிழீழம் பிறக்கட்டும்.
ஒரேயடியாக எல்லா கல்லூரிகள், பள்ளிகள் இன்னும் உள்ள பள்ளிக்கூடங்கள், தொழிற்சாலைகள், அரசு அலுவலகங்கள் எல்லாவற்றையும் திண்டுக்கல் பூட்டாக போட்டு பூட்டி விடுங்கள். எல்லோருமே போராட்டம் நடத்தலாம். இப்போது ஈழ தமிழர் பிரச்சினை, இன்னும் கொஞ்ச நாளில் இன்னும் வேறு ஏதாவது பிரச்சினை தலை தூக்கலாம் எனவே எல்லாவற்றுக்கும் சேர்த்து ஒட்டு மொத்தமாக கடை அடைப்பு செய்து விடலாம். விஷம் போல் ஏறி வரும் விலைவாசியை சமாளிக்க இனி எல்லோரும் ஒரு வேளையே சாப்பிடலாம். அதற்கும் வழி இல்லாதவர்களுக்கு சொல்லவே வேண்டியதில்லை. உண்ணாவிரதம் தான். அவர்கள் ஈழ தமிழர்களுக்காக உண்ணாவிரதம் இருப்பதாக சொல்லிக்கொண்டால், வைகோ. சீமான், பழ. நெடுமாறன், வேல்முருகன், தொல்.திருமா போன்றவர்கள் ஓடோடி வந்து உங்களை கட்டி தழுவி, மாலை போட்டு, தொலைக்காட்சிகளுக்கு பேட்டி கொடுத்து விட்டு, உங்கள் வாயில் வெண்ணையும் தடவி விட்டு போவார்கள். பத்திரிகைகளுக்கும், தொலைகாட்சிகளுக்கும் கூடுதல் விளம்பரம் கிடைக்கும். இன்னும் ஈழ தமிழர்களுக்காக துரும்பை கிள்ளி போடாதவர்கள் யாராவது இருந்தால் தயவு செய்து உங்கள் வீட்டிலேயாவது உண்ணாவிரதம் இருப்பது நல்லது. அல்லது உங்கள் தெருவில் போகும் வாகனங்களையாவது போக விடாமல் தடுங்கள் எதுவும் முடியாவிட்டால், குறைந்த பட்சம், தமிழ் வாழ்க தமிழர்கள் வாழ்க என்று உரக்க கத்துங்கள். எப்படியாவது, உங்கள் தமிழ் உணர்வை காட்டி விடுங்கள். இப்போது ஈழ தமிழர்களுக்காக அனுதாப நாடகம் நடத்தப்பட்டுக்கொண்டிருக்கிறது. நீங்கள் விரும்பினாலும், இல்லாவிட்டாலும் இதில் கலந்து கொண்டே ஆகவேண்டும். இல்லாவிட்டால் நீங்கள் தமிழர்களே இல்லை என்று..முத்திரை குத்தப்படும் அபாயம் இருக்கிறது. இங்கு சட்டம் ஒழுங்கு கெட்டால் என்ன? மாணவர்களின் படிப்பு கெட்டால் என்ன?எது எக்கேடு கெட்டாலும் பரவாயில்லை. வீறு கொண்டு எழுங்கள். உண்ணாவிரதம் இருங்கள். கடைகளை அடையுங்கள். சாலை மறியலில் இறங்குங்கள். இதுவே நீங்கள் ஈழ தமிழர் மீது அனுதாபம் கொண்டுள்ளதற்கு அடையாளம்.
விஷம் போல் ஏறி வரும் விலைவாசிக்கு காரணம் யார்..? இன்றைய ஆளும் கட்சியும். இதற்கு முன் ஆண்ட கட்சிகளும் தான்.. இந்த கட்சிகளையே மக்கள் திரும்ப திரும்ப தேர்ந்தெடுத்ததற்கு காரணம் மக்களிடம் போதிய விழிப்புணர்வு இல்லாமையே.. இப்போது இந்த மாணவர்களிடம் நல்ல விழிப்புணர்வு இருக்கிறது.. இந்த விழிப்புணர்வு மக்களிடமும் பரவும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. மாணவர்கள் போராடுவது இந்த வாக்கு வங்கி அரசியல் கட்சிகளையும் எதிர்த்து தான்.. மாணவர்கள் போராட்டத்தினால் அந்த குடும்பங்களிலும் ஒரு எழுச்சி ஏற்படுவதை தடுக்க விரும்புகிறீர்களா? மக்களிடம் எழுச்சி ஏற்படுவதற்கு இதை ஏன் ஒரு வாய்ப்பாக கருதக்கூடாது..? எல்லாம் சரி.. மாணவர்கள் போராடுவதில் உங்களுக்கு ஏன் இவ்வளவு கடுப்பு ?...
ரெடின் ஜோஸ் அவர்களே, எதை விழிப்புணர்வு என்று கூறுகிறீர்கள். மாணவர்களின் அறியாமையையா? அப்படி மாணவர்களுக்கு உண்மைலேயே விழிப்புணர்வு இருந்தால் அவர்கள் தமிழ் நாட்டில் உள்ள எத்தனயோ பிரச்சனைகளுக்கு போராடியிருக்க வேண்டும் அல்லவா. மேலும் இவர்களின் போராட்டத்தால் இலங்கை தமிழர்களுக்கு ஒரு சதவிகிதம் கூட நன்மை விளையாது என்பதே உண்மை. இக்கால மாணவர்களுக்கு விழிப்புணர்வு உள்ளது என்ற வாசகம் நம் நாட்டில் காலங்காலமாக சொல்லப்பட்டு வருகிறது.ஆனால் உண்மையில் அரசியல் வாதிகளின் வார்த்தைகளுக்கு பின்னால்தான் மாணவர்கள் உள்ளனர். ...

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.