சென்னை: ""அமெரிக்க தீர்மானத்தில், இலங்கையில், தமிழருக்கு எதிராக போர் குற்ற நடவடிக்கையில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதற்கான திருத்தத்தை, மத்திய அரசு மேற்கொள்ள வேண்டும். இல்லையேல், மத்திய அமைச்சரவையில், தி.மு.க., நீடிப்பது அர்த்தமற்றதாகி விடும்,'' என தி.மு.க., தலைவர், கருணாநிதி தெரிவித்தார்.
இதுகுறித்து, கருணாநிதி நேற்று இரவு வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: ஐக்கிய நாடுகள் சபையின், மனித உரிமை ஆணையத்தில், அமெரிக்கா கொண்டு வரவிருக்கின்ற தீர்மானங்கள் குறித்து, பல கருத்துகள் பரப்பப்படுகின்றன. இந்தச் சூழலில், தி.மு.க., வைப் பொறுத்தவரை, இலங்கையில் அண்மை காலத்தில் நடைபெற்ற இனப்படுகொலை குறித்தும், அந்தப் படுகொலைக்கு காரணமான, போர்க் குற்றவாளிகளை அடையாளம் காட்டுவதும் குறித்தும், அடையாளம் காட்டப்படுபவர்கள் மீது, சுதந்திரமான சர்வதேச விசாரணை நடத்தி, குறிப்பிட்ட காலவரையறைக்குள் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இந்த திருத்தத்தை அமெரிக்க அரசின் தீர்மானத்தில் சேர்ப்பதற்கான முயற்சியை எந்த சந்தேகத்திற்கும் இடம் கொடுக்காத வகையில், இந்திய அரசு மேற்கொள்ள வேண்டுமென தி.மு.க.,வின் சார்பில் வலியுறுத்துகிறோம். இந்தக் கோரிக்கை நிறைவேற்றப்படாத பட்சத்தில், மத்திய அமைச்சரவையில், இனி மேலும் தி.மு.க., நீடிப்பது அர்த்தமற்றதாகி விடும் என்பதை உறுதி பட தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு, அந்த அறிக்கையில் கருணாநிதி கூறியுள்ளார்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.
4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.
@ கார்த்திகேயன் ஈரோடு .....
பிரமாதம் ....கை கொடுங்கள் .....நெத்தியடி அனலிசிஸ் ...அருமையான தொகுப்பு....
முரண்பாடுகளின் மூட்டை நமது கலைஞர் என்பதை அப்படியே தோலுரித்து
பட்டியல் இட்டு விட்டீர்கள் ....
இந்தவாரம் டாப் 10 லில் உங்களுக்கே முதலிடம் ..
பெருசு பொங்கி எழுங்கள் ..............வாங்க மெரினா பீச்சுக்கு போகலாம் ..........ரெண்டு குளிர் சாதனம் ரெண்டு பொண்டாட்டி ரெண்டு பிள்ளை ரெண்டு பேரன் ரெண்டு மகள் சகிதம இன்னொரு உண்ணாவிரத நாடகம் அரங்கேற்றலாம் .............கிளப்புங்கள் உங்கள் படை பரிவாரங்களை ................
கரிகாலன் என்றால் கல்லணை. ராஜராஜன் என்றால் தஞ்சை கோவில். காமராஜர் என்றால் கல்வி. எம்ஜியார் என்றால் மனிதாபிமானம், +2 கல்விமுறை, சத்துணவு,என்றெல்லாம் நினைவு வரும். ஊழல், வன்முறை, அரசியல் கொலைகள், பச்சோந்தித்தனம், தமிழ் துரோகி என்றால் கருணாநிதி நினைவுக்கு வருகிறார்....
ராஜபக்ஷே போகுற்றவாளி என்று சொல்லப்பட வேண்டுமென்றால், போரை நிறுத்த, தடுக்க வல்லமையும்,வாய்ப்பும் இருந்தும் போரை தடுக்க முயற்சி எடுக்காத கருணாநிதியையும் அந்த பட்டியலில் சேர்க்கவேண்டும். ...
அங்கே இறந்த தமிழ் மக்களின் ஆத்மா உங்களை சுற்றி சுற்றி வரும் .... செய்த பாவம் உங்கள் பரம்பரையை சும்மா விடாது .... சோனியாவிற்கு தமிழர்களின் உணர்வு எப்படி புரியும் ....
இந்த மனிதனை ஒப்பிடுவதற்கு உலகத்தில் உதாரணம் ஒன்றுமில்லை. தந்தரத்திலேயே வாழ்க்கையை ஓட்டி முடித்துவிட்டார். என்ன ஒரு கவலையென்றால் இனி வரும் சந்ததிகளும் இவரை பின்பற்றி அரசியல் செய்ய நேர்ந்தால் நாடு எக்கதி படும் என்பதை சிந்திக்கவேண்டும்.
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.