புதுடில்லி:பெட்ரோல்
விலை லிட்டருக்கு, இரண்டு ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது. இது நேற்று
நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது. அதே சமயம், டீசல் விலையில் எவ்வித
மாற்றமும் செய்யப்படவில்லை.
சமீப காலமாக பெட்ரோல் விலை
அதிகரிக்கப்பட்டு வந்த நிலையில், கடந்த ஒன்பது மாதங்களில் இல்லாத வகையில்,
லிட்டருக்கு இரண்டு ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது.கடந்த, 2ம் தேதி பெட்ரோல்
விலை உயர்த்தப்பட்ட போது, எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன. கடந்த
ஒரு மாத காலத்தில் மட்டும், 3 ரூபாய் வரை பெட்ரோல் விலை
உயர்த்தப்பட்டது.இவற்றுடன், மதிப்பு கூட்டு வரியும் அதிகரித்தது. தற்போது
சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை கணிசமாக குறைந்து வருவதை அடுத்து,
பெட்ரோல் விலையை, குறைக்க பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் முடிவு
செய்தன.இதற்கு ஏற்ப, மதிப்பு கூட்டு வரியும் குறையும் என்பதால், சென்னையை
பொருத்த மட்டில், பெட்ரோல் விலை லிட்டருக்கு, 2.54 ரூபாய் குறைகிறது.அதே
சமயம், மாதந்தோறும் டீசல் விலையை, 40 காசுகள் முதல், 50 காசுகள் வரை
உயர்த்தி கொள்ளலாம் என, முடிவு செய்யப்பட்டது. ஆனால், இம்முறை
உயர்த்தப்படவில்லை.நான்கு நகரங்களில், பெட்ரோல் விலை விபரம் வருமாறு:
தற்போதைய விலை புது விலை குறைப்பு
டில்லி ரூ. 70.74 ரூ.68.34
ரூ.2.40,கோல்கட்டா ரூ.78.34 ரூ.75.84 ரூ.2.50, மும்பை ரூ.77.66 ரூ.75.14
ரூ.2.52, சென்னை ரூ.73.95 ரூ.71.41 ரூ.2.54 .
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.