சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொன்றவனுக்கு 9 நாளில் தண்டனை| Dinamalar

சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொன்றவனுக்கு 9 நாளில் தண்டனை

Added : மார் 16, 2013 | கருத்துகள் (3)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement

போபால்:சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொன்ற வழக்கில், குற்றவாளிக்கு இரட்டை ஆயுள் தண்டனை மற்றும் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. இந்த வழக்கின் விசாரணை, ஒன்பது நாட்களில் முடிக்கப்பட்டு, தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.மத்திய பிரதேச மாநிலம், போபாலில், கடந்த மாதம், எட்டு வயது சிறுமி, பாலியல் பலாத்காரம் செய்து, கொடூரமான முறையில் கொல்லப்பட்டாள். கொலையான
சிறுமியின் உடல், மாநில உள்துறை அமைச்சர், உமா ஷங்கர் குப்தாவின் வீடு அருகே கைப்பற்றப்பட்டதால், இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.போலீசார் விசாரணை நடத்தியதில், நந்தகிஷோர் வால்மீகி என்பவன் கைது செய்யப்பட்டான். இந்த வழக்கு விசாரணை, மாவட்ட செஷன்ஸ் கோர்ட்டில் நடைபெற்றது. கடந்த வியாழக்கிழமை, நீதிபதி சுஷ்மா கோஷ்லா தீர்ப்பு வழங்கினார்.அதில், குற்றவாளி நந்தகிஷோருக்கு, இரட்டை ஆயுள் தண்டனை மற்றும் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது.

இந்த வழக்கு விசாரணை, ஒன்பது நாட்களுக்குள்முடிக்கப்பட்டு, தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.தீர்ப்பு வழங்கிய நீதிபதி சுஷ்மா கோஷ்லா பேசியதாவதுநந்தகிஷோரின் இந்த செயல், பெரும் அவமானத்திற்குரியது. குற்றவாளியின் வெறிச் செயலுக்கு, தூக்கு தண்டனையே குறைந்த பட்ச தண்டனையாக கருதுகிறேன். எட்டு வயது சிறுமியை கடத்தி சென்று, பாலியல் பலாத்காரத்துக்கு உட்படுத்தியுள்ளான். சிறுமியின் கழுத்தை நெரித்து கொன்றதோடு, அதை மறைக்க, அவளின் முகத்தை சிதைத்து தெருவில் வீசியுள்ளான்.மற்றவர்கள் இது போன்ற கொடுஞ்செயல்களில் ஈடுபடாமல் இருக்கவே, இந்த கடுமையான தண்டனை வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு நீதிபதி கூறினார்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sitaramenv - Hyderabad,இந்தியா
17-மார்-201311:57:58 IST Report Abuse
sitaramenv திராவிடம் என்ற பெயரிலும் நாத்திகம் என்ற பெயரிலும் அகில இந்திய அளவில் மதச்சார்பின்மை என்ற பெயரிலும் .......ஆன்மீக கல்வி ஒடுக்கப்பட்டதன் விளைவை அனுபவிக்க துவங்கி உள்ளோம். குருகுலத்தில் கல்வி பயிலும் மாணவர்களும் இளம்வயதிலேயே ஆன்மீக சிந்தனை ஒழுக்கம் ஆகிய பாடங்கள் கற்பிக்கப்பட்ட எந்த ஒரு மதத்தை சேர்ந்த மாணவனும் இதுபோன்ற இழிசெயலில் மனம் திரும்ப இடம் தரவே மாட்டான். ஆங்கிலேயர்கள் கொண்டு வந்த கல்வித்திட்டம் கலாசாரம் எல்லாமே இதற்கு காரணம். காந்தி போதித்த அஹிம்சையும்.....கோழைத்தனமும் அடுத்தபடியான காரணங்கள்.
Rate this:
Share this comment
Cancel
Loganathan - Madurai,இந்தியா
16-மார்-201305:29:35 IST Report Abuse
Loganathan மத்ய பிரதேசத்திலும் விரைந்து நடவடிக்கை எடுத்து முன் மாதிரியாக இருக்கிறார்கள்.
Rate this:
Share this comment
Cancel
Skv - Bangalore,இந்தியா
16-மார்-201305:22:23 IST Report Abuse
Skv பெண்ணே நீ கருவிலே இருக்கும்போதே உனக்கு கொடுமை ஆரம்பமாஹுது. பெண் என்று தெரிந்தால் செய்வது உடனே கருக்கலைப்பு, பிறந்தால் கள்ளிப்பால் , மீறி வளர்ந்தால் திருமணம் வரை அவளுக்கு நித்திய கண்ட பூரன ஆயுசுதான் , திருமணம் ஆனாலும் தொடரும் கொடுமை உச்சம் , அழகியோ இல்லியோ அவளுக்கு பாலியல் கொடுமை உண்டு. அன்று பெண்கள் வீட்டிலே இருந்தப்போ நடந்த கொடுமைகள் இருவிதம் என்றால் இன்று பெண்ணினத்துக்கு நிகழும் கொடுமைகள் இன்னம் ஏராளம். விதம் விதமா திட்டம் போடுரானுக . தானே திருந்தாத இந்த ஜனத்திற்கு விழிப்பே வராதா, இதுலே பெரிய கொடுமை பல இடங்களில் பெண்களே இந்தமாதிரி செயல்களுக்கும் துணை போவதுதான் ( சிவப்பு விளக்கு ஏரியா )மனசாட்சி இருந்தால் இந்த மாதிரி இருப்பாகளா
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை