திருமங்கலம்: மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் சிவராத்திரி பூஜைக்கு வந்த 20 பக்தர்கள் வாந்தி மயக்கம் காரணமாக ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். இங்குள்ள பெரியக்கடை வீதியில் குருநாதன் கோயில் உள்ளது. இங்கு கடந்த ஒரு வார காலமாக சிவராத்திரி பூஜை கொண்டாடப்பட்டது. இந்த பூஜையில் பங்கேற்க ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்திருந்தனர். பூஜை நேற்று கடைசி நாள் ஆகும். இதனையொட்டி கிடா வெட்டி சிறப்பு பூஜை நடந்தது. முன்னதாக இங்குள்ள பகுதியில் பதநீர் விற்கப்பட்டது. இந்த பதநீரை குடித்த பல பக்தர்களுக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டது. இதனையடுத்து பக்தர்கள் திருமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
சிறுவர் -சிறுமியரும் பாதிப்பு :
இன்றைய போதை கள் குடித்ததில் சிறுவர், சிறுமியர் உள்பட 20 பக்தர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டுள்ளோர் பெயர் விவரம் வருமாறு: பிரசாந்த் ( வயது16 ), வனஜா ( 48 ), சந்துரு ( 7 ), கலையரசன் ( 20 ) , பாலமுருகன் ( 480, சாந்தி ( 47 ), சஞ்சீவி ( 8 ), வேலம்மாள் , கலைவாணி, உள்பட 20 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
பதநீரா - கள்ளா ? : இதன் சுற்றுப்பகுதியில் பல நாட்களாக இது போன்று போதை பதநீர் விற்கப்பட்டு வருகிறது. அதாவது பனைமரத்தில் இருந்து இறக்கும் இந்த வகை பானம் வடித்து எடுக்கும் போது களயைத்தில் சுண்ணாம்பு கலந்து வந்தால் பதநீர். சுண்ணாம்பு கலக்காமல் கொண்டு வருவது கள். இவ்வாறு சுண்ணாம்பு இல்லாமல் தான் விற்கப்பட்டு வருகிறது. மேலும் இதில் போதை மாத்திரைகள் கலப்பு செய்யப்படுகிறது. இதனை வாங்கி குடிப்போர் குறைந்த விலையில் போதையை அனுபவித்து விட முடிகிறது. இதனால் கூலி தொழிலாளர்கள் இதனை குடிப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர்.
போலீஸ் மெத்தனம் :
இது போன்று விற்கப்படுவது குறித்து போலீசாருக்கு தெரிந்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் கண்டு கொள்ளாமல் இருந்து விடுகின்றனர் என இப்பகுதி மக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
சர்வேஸ்வரா நம்ம நாடு என் நா ஆகிறதுன்னே தெரியவில்லை . பயமா இருக்கு. வரும் ஜெனறேஷனே இல்லாம் போயிடுமோ என்று என்ன வைக்கிறது. தூய மனத்துடன் சிவனை ஒன்றுமே தின்னாமல் உன் நாமத்தை ஜபித்து இருக்கணும்னு தானே பெரியவா கத்து தந்தாங்க ஆனால் இன்று கல்லையும் கண்ட கசுமாலத்தையும்குடிச்சுத்தான் விரதம் அனுஷ்டிக்கனுமா ???????இதற்கு மூனுவெலையும் தின்னுட்டு கிடக்கலாமே .இன்று கஷ்டம் சிவனுக்கு இல்லே .குடிச்சு ஆசுபத்திரிலே கிடக்கும் மனுஷாளுக்கே . காசேதான் சிவன் விஷ்ணு என்று குறியா இருக்கு து அரசு .ஒருவேளை இதுவும் ஒருவஜிலே ஜனத்தொகைய குரைஇகுமெ என்ற என்னமாவும் இருக்குமோ?
குழந்தைகளுக்கு யாரவது கள் வாங்கி கொடுப்பார்களா? அது கலப்பட பதனி. வருடம் முழுவதும் சில உள்ளூர் வியாபாரிகள் சீசன் இல்லாத நேரத்திலும் பதனி விற்று கொண்டிருப்பார்கள். சாகிரீம் மற்றும் வடித்த நீருடன் பனை மட்டைகளை போட்டு ஊர வைத்து பின்னர் விற்பனை செய்கின்றனர்.அது பதநீர் வாசனையை தரும். சீசன் நேரத்தில் பதநீருடன்,வடித்த நீர்,மற்றும் சாகிரீம் சேர்ப்பார்கள். இது போக பத நீர் மரங்களில் இருந்து இறக்கி சுமார் 5 மணி நேரத்தில் குடித்து விடல் வேண்டும். குறிப்பிட்ட நேரம் தவறும் போது அது லேசான போதை மற்றும் சாப்பிட்டவுடன் வந்தி,மற்றும் வயற்று உபாதைகளை ஏற்படுத்தும். சும்மாவே இந்த பகுதிகளில் பதநீர் இறக்க கூட காவல் துறை அனுமதிப்பது இல்லை.நீங்களும் சங்க ஊதிடீங்க. பதநீர் மற்றும் அதைவைத்து பனை வெல்லம் தயாரிக்க வரும் தென் தமிழக மக்களின் பிழைப்பு இனி கேள்விக்குறிதான்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.