பெண்கள் உரிமை காத்திட மத்திய அரசு சாதனை ; பட்டியலிட்டு சோனியா பெருமித பேச்சு
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
எழுத்தின் அளவு:
Advertisement

கோல்கட்டா : பிரதமர் மன்மோகன்சிங் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு நமது நாட்டு பெண்களின் முக்கியத்துவத்திற்கென பல்வேறு சாதனை திட்டங்களை செயல்படுத்தி வருவதாக காங்., தலைவர் சோனியா பெருமையாக தெரிவித்தார். மேற்குவங்கம் நாராயண்பூரில் உள்ள தொழில்நுட்ப கல்லூரியில் நடந்த ஒருவிழாவில் பங்கேற்று பேசுகையில் இவ்வாறு அவர் குறிப்பிட்டார்.
பிரதமர் மன்மோகன்சிங்கும் இந்த விழாவில் கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் சோனியா பேசியதாவது: பெண்கள் முக்கியத்துவம் அறிந்து இந்த அரசு செயல்படுகிறது. பெண்கள் முன்னேற்றத்திற்கென பல்வேறு திட்டங்களை செயல்படுத்தியுள்ளோம். குறிப்பாக சமீபத்திய பட்ஜெட்டில் பெண்கள் வங்கி துவக்கும் ஏற்பாடு சிறப்பான திட்டம் ஆகும். பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டால் குற்றவாளிகளுக்கு வழங்கப்படும் சிறைத்தண்டனை 20 ஆண்டுகளாக உயர்த்தியுள்ளோம். முக்கிய வழக்குகளில் மரணத்தண்டனை வரை வழங்கிட ஆவன செய்யப்பட்டுள்ளது. மேலும் இளைஞர் வயது 18 முதல் 16 ஆக குறைக்கப்பட்டுள்ளது. இந்த புதிய சட்டம் விரைவில் அமல்படுத்தப்படும். இதன் மூலம் பெண் எதிர் குற்றங்கள் வெகுவாக குறையும்.டில்லியில் கற்பழிக்கப்பட்ட பெண் பெயரில் நிர்பயா நிதிக்கென ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. பெண்கள் முன்னேற்றம் மற்றும் ஊக்கத்திற்கென இந்த நிதி வழங்கப்படும். கிராம பகுதிகளில் கல்வியை மேம்படுத்த மத்திய அரசு முழுக்கவனம் எடுத்து வருகிறது. உணவு பாதுகாப்பு மசோதா விரைவில் கொண்டு வரப்படும் இதன் மூலம் பட்டினிச்சாவு இல்லாத நிலை உருவாக்கப்படும் இவ்வாறு அவர் பேசினார்.


கல்வி முன்னேற்றம் அவசியம் :


விழாவில் பிரதமர் மன்மோகன்சிங் பேசுகையில்; தமது தலைமையிலான அரசு கல்விக்கு முக்கியத்துவம் அளித்து வருவதால் வளமான எதிர்காலத்தை உருவாக்கிட முடியும். கல்வி முன்னேற்றம் பொருளாதார முன்னேற்றத்திற்கு பெரிதும் உதவக்கூடியவை. உயர்ந்த திறனுடை விஞ்ஞானிகள், வல்லுனர்கள் உலகத்தரம் மிக்கவர்களாக உருவாக்கப்பட வேண்டும். என்றார்.


Advertisement
Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (18)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
சொல்லின் செல்வன் - Bangalore,இந்தியா
17-மார்-201310:48:03 IST Report Abuse
சொல்லின் செல்வன் உங்களால நம் நாட்டுக்கு எப்பவுமே தலகுனிவுதான்
Rate this:
Share this comment
Cancel
அண்ணனின் விழுதுகள் - Male,மாலத்தீவு
17-மார்-201309:24:15 IST Report Abuse
அண்ணனின் விழுதுகள் பாரத அன்னையே உன்னை வரவேற்கிறோம். வயதில்லை ஆனாலும் வாழ்த்துகிறோம். கணவர் நினைத்ததை நிறைவேற்றி கொண்டு இருக்கிறாய். வாழ்க வளமுடன்.
Rate this:
Share this comment
Cancel
jaga - cbe  ( Posted via: Dinamalar Android App )
17-மார்-201309:17:28 IST Report Abuse
jaga ungalai veetuku anupum neram yengaluku vanthu vittathu......readyahga irugal mootai mutichukalutan.....
Rate this:
Share this comment
Cancel
SENTHIL KUMAR - MADURAI,இந்தியா
17-மார்-201305:06:39 IST Report Abuse
SENTHIL KUMAR இன்றைய தினமலரின் முக்கிய செய்திகள் மீண்டும் உங்கள் பார்வைக்கு "பெண்கள் உரிமை காத்திட மத்திய அரசு சாதனை பட்டியலிட்டு சோனியா பெருமித பேச்சு"/// "கணவன் முன்பு சுவிஸ் நாட்டு பெண் கற்பழிப்பு ம. பியில் ஒரு அதிர்ச்சி சம்பவம்"
Rate this:
Share this comment
அண்ணனின் விழுதுகள் - Male,மாலத்தீவு
17-மார்-201309:18:30 IST Report Abuse
அண்ணனின் விழுதுகள் செந்தில் அண்ணே அது மாநில அரசோட பிரச்னை....
Rate this:
Share this comment
Cancel
S K RAM - Chennai,இந்தியா
16-மார்-201319:52:32 IST Report Abuse
S K RAM இந்த மாதிரி கூச்ச படமா பேசவும் ஒரு தைரியம் மற்றும் திறமை வேணும்... இவங்க பேசறதை எல்லாம் கேட்ட என் காதுல இருந்து ரத்தம் தான் வருது.. ஷப்பா.. முடியல..
Rate this:
Share this comment
Cancel
R.சுதாகர் - Jeddah,சவுதி அரேபியா
16-மார்-201318:54:35 IST Report Abuse
R.சுதாகர் இப்போ தான் சுவிஸ் தம்பதியைப் பற்றின செய்தியை படித்தேன். ஓ... இந்தியப் பெண்களுக்கு மட்டும் தான் இங்கே பாதுகாப்பு வழங்கப்படும் போல...
Rate this:
Share this comment
Cancel
Linux - gudal  ( Posted via: Dinamalar Android App )
16-மார்-201318:36:12 IST Report Abuse
Linux எப்படிதான் இப்படி வாய் கூசாம பொய் சொல்றாங்களோ
Rate this:
Share this comment
Cancel
Ak Gopal - chennai,இந்தியா
16-மார்-201318:13:47 IST Report Abuse
Ak Gopal ரோம் நகரம் பற்றி எரியும் போது நீரோ மன்னன் இப்படி தான் பிடில் வாசித்து கொண்டும் பெருமித பேச்சு பேசி கொண்டும் இருந்தானாம் ..
Rate this:
Share this comment
அண்ணனின் விழுதுகள் - Male,மாலத்தீவு
17-மார்-201309:19:54 IST Report Abuse
அண்ணனின் விழுதுகள் தம்பி கோவாலு இன்னும் டீ வரல....
Rate this:
Share this comment
Cancel
மும்பை தமிழன் - mumbai,இந்தியா
16-மார்-201318:09:23 IST Report Abuse
மும்பை தமிழன் நீங்க மட்டும் தான் பெருமை பட்டு கொள்ளவேண்டும் இதற்கு அடுத்த செய்தியை பார்க்கவும் ( கணவன் முன்பு சுவிஸ் நாட்டு பெண் கற்பழிப்பு ம. பியில் ஒரு அதிர்ச்சி சம்பவம்: 8 பேர்.............. )
Rate this:
Share this comment
Cancel
நாஞ்சில் சுலைமான் - THUCKALAY,இந்தியா
16-மார்-201317:46:27 IST Report Abuse
நாஞ்சில் சுலைமான் //கணவர் முன்னர் சுவிட்சர்லாந்து பெண் கற்பழிப்பு//-..//ஓடும் பேருந்தில் மாணவி கும்பலால் கற்பழிப்பு // - //வயிற்றுப்பசிக்கு பிச்சை கேட்ட சிறுமிகள் கற்பழித்து கொலை //காதலிக்க மறுத்ததால் ஆசிட் வீசி கொலை//-இன்னுன் ஏராளம் ஏராளம்.."பெண்கள் நலன் காக்க உங்கள் அரசு தீட்டிய திட்டங்களை எண்ணி உள்ளம் பூரிக்கிறது."
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.
மேலும் செய்திகள்