Advertisement
பள்ளி கேன்டீன்களில் "பாஸ்ட் புட்' விற்பனைக்கு தடை: மத்திய அரசு ஆலோசனை
Advertisement
 
 
Advertisement
 
 
 
எழுத்தின் அளவு:
ஆல்பம்
பதிவு செய்த நாள் : மார்ச் 16,2013,19:41 IST
மாற்றம் செய்த நாள் : மார்ச் 16,2013,19:45 IST

புதுடில்லி: "பீட்சா, பர்கர் போன்ற, "பாஸ்ட் புட்' அயிட்டங்களை, பள்ளி கேன்டீன்களில், இனி விற்பனை செய்யாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்கு பதிலாக, உடல் ஆரோக்கியத்துக்கு உதவும், பழங்கள், பால் பொருட்களை விற்பனை செய்யலாம்' என, மாநில அரசுகளுக்கு, மத்திய அரசு ஆலோசனை வழங்கியுள்ளது.

மத்திய சுகாதார அமைச்சர், குலாம் நபி ஆசாத், லோக்சபாவில், எழுத்து மூலமாக அளித்த பதில்: நாடு முழுவதும் உள்ள, பல பள்ளிகளின் கேன்டீன்களில், "பாஸ்ட் புட்' வகைகள் விற்பனை செய்யப்படுகின்றன. இந்த வகை உணவுகளில், கொழுப்பு சத்து அதிகம் இருப்பதோடு, சர்க்கரை, உப்பு, காரம் ஆகியவையும், அதிகம் சேர்க்கப்படுகின்றன. இந்த உணவுகளில், உடல் நலத்துக்கு பயன் அளிக்கும், புரோட்டின், விட்டமின், மினரல் ஆகியவை போதிய அளவில் இல்லை. கரிமப் பொருள் சேர்க்கப்பட்ட குளிர்பானங்களும் அதிகம் விற்பனை செய்யப்படுகின்றன. இதுபோன்ற உணவுகளையும் சாப்பிடுவதாலும், குளிர்பானங்களை அருந்துவதாலும், குழந்தைகளுக்கு, பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன. எனவே, இந்த வகை உணவுகளையும், குளிர்பானங்களையும், பள்ளி கேன்டீன்களில் விற்பனை செய்யாமல் இருப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியது அவசியம். இதுதொடர்பாக, அனைத்து மாநில முதல்வர்கள், மாநில சுகாதார அமைச்சர்களுக்கு கடிதங்கள் மூலம் ஆலோசனை தெரிவிக்கப்பட்டுள்ளது. "பாஸ்ட் புட்' வகைகளுக்கு பதிலாக, காய்கறி, பழங்கள், தானியங்கள் ஆகியவற்றை விற்பனை செய்வதோடு, அவற்றின் பயன்பாடுகளையும், மாணவர்களுக்கு விளக்க வேண்டும். இவ்வாறு, குலாம் நபி ஆசாத் கூறினார்.


மத்திய அரசின் இந்த நடவடிக்கைகக்கு, அனைத்து தரப்பினரும், வரவேற்பு தெரிவித்துள்ளனர். இதுகுறித்து, டாக்டர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: பீட்சா, பர்கர் போன்ற, உணவு வகைகளை அதிகமாக சாப்பிடுவதால், குழந்தைகளுக்கு உடல் பருமன் ஏற்படுவதோடு, உடல் ரீதியான, வேறு பல பாதிப்புகளும் ஏற்படுகின்றன. குறிப்பாக, நீரிழிவு நோய் பாதிப்பு, இதனால் அதிகம் ஏற்படுகிறது. இந்த உணவு வகைகளை கட்டுப்படுத்த, அரசு சார்பில் உறுதியான நடவடிக்கை எடுக்கவில்லை எனில், குழந்தைகளின் எதிர்காலம் பாதிக்கப்படும். இவ்வாறு, டாக்டர்கள் தரப்பில் கூறப்படுகிறது.





வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து (7)
Raj - Chennai,இந்தியா
18-மார்-201307:42:10 IST Report Abuse
Raj சரியான காமெடி பொது இடங்களில் புகை பிடிப்பது சட்டப்படி குற்றம் ... நின்றுவிட்டதா? அது போல்தான் இதுவும்
Rate this:
0 members
0 members
1 members
Share this comment
Prabu.KTK - Coimbatore,இந்தியா
17-மார்-201314:40:33 IST Report Abuse
Prabu.KTK வெரி குட்
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
சுலைமான் - தோஹா,கத்தார்
17-மார்-201309:03:43 IST Report Abuse
சுலைமான் சரியான முடிவு...இப்போது இளந்தலைமுறையினர் இந்த fast food என்னும் junk food களை உண்டு ஊளை சதையிட்டு நடக்கக்கூட முடியாமல் அவதிப்படுகின்றனர்.....
Rate this:
0 members
0 members
1 members
Share this comment
Jayakumar - Bangalore  ( Posted via: Dinamalar Android App )
17-மார்-201307:04:36 IST Report Abuse
Jayakumar நல்ல முயற்சி
Rate this:
0 members
0 members
1 members
Share this comment
jay - salem  ( Posted via: Dinamalar Android App )
17-மார்-201306:58:04 IST Report Abuse
jay நல்ல செய்தி்
Rate this:
0 members
0 members
2 members
Share this comment
g.s,rajan - chennai ,இந்தியா
17-மார்-201305:40:58 IST Report Abuse
g.s,rajan குறிப்பா இந்த இத்தாலியில் இருந்து வர்றது எல்லாமே நமக்கு கெடுதல்தான் விளைவிக்கும் .அதே மாதிரி இந்த காற்று அடைத்த வகை வகையான சிப்ஸ் பாக்கெட்களையும் தடை பண்ணுங்க ஜி.எஸ்.ராஜன் சென்னை .
Rate this:
1 members
0 members
68 members
Share this comment
suresh - madurai  ( Posted via: Dinamalar Android App )
17-மார்-201305:00:39 IST Report Abuse
suresh GOOD
Rate this:
0 members
0 members
3 members
Share this comment

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
( OR )Login with
New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

அன்புள்ள வாசகர்களே!,

நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.