1கோடி பேரிடம் கையெழுத்து பெற தி.மு.க., திட்டம்?| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

1கோடி பேரிடம் கையெழுத்து பெற தி.மு.க., திட்டம்?

Added : மார் 16, 2013 | கருத்துகள் (18)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
1கோடி பேரிடம் கையெழுத்து பெற தி.மு.க., திட்டம்?

இலங்கைத் தமிழர்களின் விடியலுக்காக, டில்லி "டெசோ' மாநாடு, "பந்த்' போராட்டம் நடத்தி முடிக்கப்பட்ட நிலையில், அடுத்தக் கட்டமாக, 1கோடி பேரிடம் கையெழுத்து இயக்கம் நடத்தி, விண்ணப்ப படிவத்தை பிரதமரிடம் வழங்குவதற்கு தி.மு.க., தலைமை திட்டமிட்டுள்ளது.

இலங்கை தமிழர்களுக்கு சாதகமாக, மத்திய அரசு முடிவு எடுக்கவில்லை என்றால், மத்திய அமைச்சரவையிலிருந்து தி.மு.க., அமைச்சர்கள் வெளியேறி, அரசுக்கு வெளியிலிருந்து ஆதரவு அளிக்கவும், தி.மு.க., தரப்பு தயாராகியுள்ளதாக, அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இலங்கைக்கு எதிராக, ஐ.நா., சபையில், அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானத்தை, மத்திய அரசு ஆதரிக்க வேண்டும். இலங்கை தமிழர்களுக்கு நல்வாழ்வு கிடைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, "டெசோ' சார்பில், டில்லியில் நடந்த மாநாடு படுதோல்வி அடைந்ததால், தமிழகம் முழுவதும், "பந்த்' போராட்டம் நடத்தப்பட்டது. "டெசோ' சார்பில் நடைபெறும் அடுக்கடுக்கான போராட்டங்களை முறியடிப்பதற்காக, ம.தி.மு.க., நாம் தமிழர் போன்ற கட்சிகள் மற்றும் பல்வேறு தமிழ் அமைப்புகள், கிறிஸ்தவ அமைப்புகள், தமிழ் ஆர்வலர்களின் ஆதரவில், தமிழகம் முழுவதும் கல்லூரி மாணவர்கள் போராட்டங்கள் தீவிரம் அடைந்துள்ளன. இந்நிலையில், "டெசோ' அமைப்பின் போராட்டங்களை தீவிரப்படுத்தும் வகையில், இலங்கை தமிழர்கள் நலனுக்காக, 1 கோடி பேரிடம் கையெழுத்து இயக்கத்தை நடத்தி, அந்த விண்ணப்ப படிவங்களை பிரதமர் மன்மோகன் சிங்கிடம் வழங்க வேண்டும் என, தி.மு.க., தரப்பில் விருப்பம் தெரிவிக்கப்பட்டு உள்ளது. கையெழுத்து இயக்க போராட்டத்திற்கும் மத்திய அரசு செவி சாய்க்கவில்லை என்றால், மத்திய அமைச்சரவையிலிருந்து தி.மு.க., வெளியேறி, மத்திய அரசுக்கு வெளியிலிருந்து ஆதரவு தெரிவிக்கவும் தி.மு.க., தரப்பு தயாராகியுள்ளது.

இது குறித்து கட்சி வட்டாரங்கள் கூறியதாவது: காங்கிரஸ் மீது, தி.மு.க., தலைமை கடும் அதிருப்தியில் இருக்கிறது. இலங்கை தமிழர்கள் பிரச்னையில், "டெசோ' அமைப்பின் கோரிக்கையை, மத்திய அரசு பரிசீலனை செய்வது குறித்து எந்த உறுதியும் அளிக்காமல் இருப்பதால், 1 கோடி பேரிடம் கையெழுத்து இயக்கம் நடத்தி, அந்த விண்ணப்ப படிவங்களை பிரதமர் மன்மோகன் சிங்கிடம் வழங்க வேண்டும் என, தி.மு.க., தரப்பு திட்டமிட்டுள்ளது. இதற்கும் பின்னும் மத்திய அரசு செவிசாய்க்கவில்லை என்றால், மத்திய அமைச்சரவையிலிருந்து வெளியேறி, மத்திய அரசுக்கு வெளியிலிருந்து ஆதரவு அளிக்கவும் தி.மு.க., தயாராக உள்ளது. அதற்கு காரணம், கடந்த 2009ம் ஆண்டில், போர் நடந்த போது, தி.மு.க., - எம்.பி.,க்கள் தங்களது பதவிகளை ராஜினாமா செய்த கடிதங்களை பிரதமரிடம் வழங்காமல் கருணாநிதியிடம் வழங்கி, நாடகமாடினர் என்ற விமர்சனம் எழுந்தது. இலங்கை தமிழர்கள் விஷயத்தில், "கண்கெட்ட பின் சூரிய நமஸ்காரத்தை' தி.மு.க.,வினர் செய்கின்றனர் என்ற விமர்சனத்தையும் தமிழ் ஆர்வலர்கள் எடுத்து வைக்கின்றனர். எனவே, இலங்கை தமிழர்களின் வாழ்வில் ஒளியேற்றி வைக்க வேண்டும் என்பதற்காக, மத்திய அமைச்சர் பதவிகளை ராஜினாமா செய்ய வேண்டும் என, ஸ்டாலின் தரப்பில் விருப்பம் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இவ்வாறு கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

- நமது நிருபர் -

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (18)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
g.s,rajan - chennai ,இந்தியா
17-மார்-201312:27:58 IST Report Abuse
g.s,rajan எவ்வளவு கையெழுத்து வாங்கினாலும் உங்க தலை எழுத்து அவ்வளவுதான் உங்கள் கட்சியின் அழிவை ,தோல்வியை யாராலும் தடுக்கவே முடியாது . ஜி.எஸ்.ராஜன் சென்னை .
Rate this:
Share this comment
Cancel
villupuram jeevithan - villupuram,இந்தியா
17-மார்-201310:40:59 IST Report Abuse
villupuram jeevithan இந்த பெரிய போராட்டம் மிகப் பெரிய அழுத்தத்தை ராஜபக்ஷே மீது கொடுக்கும் அனேகமாக அவர் இச்செய்தியை படித்தவுடன் நடுங்க ஆரம்பித்திருப்பார்?
Rate this:
Share this comment
Cancel
ரகு - chennai ,இந்தியா
17-மார்-201310:16:40 IST Report Abuse
ரகு ஒரு கோடி கையெழுத்து வாங்கி தங்களுக்கு ஒரு கோடி மக்கள் ஆதரவு உண்டென்று கூறி தேர்தலில் சீட்டு பேரம் பேச வசதியாக இருக்கும்ன்னு இப்பவே திட்டம் போட்டு செயல் படுறாரு...
Rate this:
Share this comment
Cancel
VAAGUNAN - MIMISAL  ( Posted via: Dinamalar Android App )
17-மார்-201310:12:04 IST Report Abuse
VAAGUNAN தலை கீழா நின்னு தண்ணி குடிச்சாலும் இனி உங்கள நம்ப முடியாது.
Rate this:
Share this comment
krishna - cbe,இந்தியா
17-மார்-201317:13:29 IST Report Abuse
krishnaஇங்க யாருங்க நம்பர மாதிரி இருக்காங்க. எல்லோருமே ஏமாற்று பேர்வழிகள் தானே. ...
Rate this:
Share this comment
Cancel
வைகை செல்வன் - சென்னை,இந்தியா
17-மார்-201309:52:34 IST Report Abuse
வைகை செல்வன் மக்களை மாக்களாக்க செய்யும் முயற்சி...ஒரு கோடி என்ன ஓராயிரம் கையெழுத்து போட்டாலும் மரித்த எம் ஈழத்து சொந்தங்கள் ஆவிகள் கூட உமை மன்னிக்காது.. ரத்தம் உலர்ந்தவுடன் மீண்டும் காட்டேரிகளாய் வளம் வரும் இந்த ஈன தலைவனை இனம் கண்டு கருவறு தமிழனே.. துரோகத்தின் பலன் துக்கமே என்று எடுத்தியம்பு...
Rate this:
Share this comment
Cancel
Ambaiyaar@raja - Nellai to chennai ,இந்தியா
17-மார்-201309:24:54 IST Report Abuse
Ambaiyaar@raja 1 லச்சம் தமிழர்களை கொன்றவர்களுக்கு உறுதுணையா இருந்து விட்டு அவர்களை கொன்று ஒழித்து 5 வருடத்திற்கு பின்பு ஆட்சி போன பின்பு இப்போது 1 கோடி கையெழுத்து கருணா அவர்களே சூப்பர் அடித்து பின்னுகிண்றீர்கள். என்ன செய்தாலும் நீங்கள் எத்தனை கை எழுத்தை வாங்கினாலும் உங்கள் தலை எழுத்தை மாற்ற முடியாது.
Rate this:
Share this comment
Cancel
venkat - ngr,இந்தியா
17-மார்-201308:51:47 IST Report Abuse
venkat தமிழனுக்கு நீ செய்த கைங்கர்யம் தெரியும், ஆகையால் தமிழ் அல்லாதவர்களிடம் வாங்குகோ?
Rate this:
Share this comment
Cancel
Aboobacker Siddeeq - Singapore,சிங்கப்பூர்
17-மார்-201308:31:02 IST Report Abuse
Aboobacker Siddeeq மு.க.வின் ஒரு கையழுத்து போதும்,,,,, கணினியில் அதை கொடுத்து பலகோடி கையளுத்துகளை உருவாக்கும் திறன் நம் கழக தொண்டர்களிடம் உண்டு...
Rate this:
Share this comment
Cancel
Ganapathysubramanian Gopinathan - Bangalore,இந்தியா
17-மார்-201306:13:54 IST Report Abuse
Ganapathysubramanian Gopinathan ஒரு கோடி அல்ல, நூறு கோடி கையெழுத்து இட்டாலும் இன படுகொலை செய்யும் இலங்கை அரசு பணியாது. அதற்க்கு பதில் இந்திய அரசு சரியான் நடவடிக்கை எடுக்கும் ஆயின் அது பலன் தரும் என்பது இந்த மஞ்சள் துண்டு மறப்பதேனோ?
Rate this:
Share this comment
Cancel
K.Sugavanam - Sengkang,சிங்கப்பூர்
17-மார்-201306:03:16 IST Report Abuse
K.Sugavanam ஒரு கோடி என்ன ஒம்பது கோடி கைஎழுத்த போடக்கூட தெரியாதா?எவன் வந்து வெரிபை பண்ண போறான்..மக்களே யாரும் போடாதீங்க.திமுக வுல 2.5 கோடி உறுப்பினர் இரிக்கிறதா சொல்லுதாஹலே அப்போ அது உட்டாலக்கடியா?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை