DMK threat draws mixed response from Congress | தி.மு.க., மிரட்டலை பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் காங்கிரஸ் வேடிக்கை| Dinamalar
பதிவு செய்த நாள் :
கருத்துகள் (58)  கருத்தை பதிவு செய்ய
எழுத்தின் அளவு:

"இலங்கைக்கு எதிரான அமெரிக்க தீர்மானத்தை, மத்திய அரசு ஆதரிக்கா விட்டால், ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில்இருந்து, தி.மு.க., விலகும் சூழ்நிலை உருவாகலாம்' என, அந்தக் கட்சியின் தலைவர் கருணாநிதி விடுத்த மிரட்டலை, காங்கிரஸ் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. தி.மு.க., ஆதரவை வாபஸ் பெற்றாலும், முலாயம் சிங்கின் சமாஜ்வாதி மற்றும் மாயாவதியின் பகுஜன் சமாஜ் ஆதரவு தொடரும் வரை, அரசுக்கு ஆபத்தில்லை என்பதால், மிகுந்த நம்பிக்கையுடன், காங்., உள்ளது.
போர் குற்றங்கள்: இலங்கையில், விடுதலை புலிகளுடன் நடந்த கடைசி கட்ட போரின் போது, பெருமளவில் போர்க் குற்றங்கள் நிகழ்ந்ததாக குற்றம் சாட்டப்படுகிறது. இந்த போர்க் குற்றங்கள் தொடர்பாக, ஐக்கிய நாடுகள் சபையின், மனித உரிமை கமிஷனில், இலங்கைக்கு எதிராக, அமெரிக்கா தீர்மானம் கொண்டுவர உள்ளது. "இந்தத் தீர்மானத்தை, வலுவான திருத்தங்களுடன், இந்தியா ஆதரிக்க வேண்டும். அதற்கேற்ற வகையில், மன்மோகன் சிங் அரசு முடிவெடுக்கவில்லை எனில், மத்திய அமைச்சரவையிலிருந்து, தி.மு.க., விலக நேரிடும்' என, நேற்று முன்தினம், அந்தக் கட்சியின் தலைவர் கருணாநிதி எச்சரிக்கை விடுத்தார். அதனால், மத்திய அரசுக்கு அளித்து வரும் ஆதரவை, தி.மு.க., வாபஸ் பெற்றால், தேசிய அரசியலில் நெருக்கடி ஏற்படும் என்றும், மத்திய அரசு கவிழும் அபாயம் உருவாகும் என்றும், வதந்திகள் பரவின. ஆனால், உண்மையில் நிலைமை வேறாக உள்ளது. லோக்சபாவைப் பொறுத்தவரை, மொத்த எம்.பி.,க்கள் எண்ணிக்கை, 544. இதில், தனிப்பெரும்பான்மை பலத்தை நிரூபிக்க, 273 எம்.பி.,க்கள் ஆதரவு தேவை. காங்கிரசுக்கு, 206 எம்.பி.,க்கள் இருந்தனர். சமீபத்தில், குஜராத்தைச் சேர்ந்த, ஒரு எம்.பி., காலமாகி விட்டதால், பலம் 205 ஆக குறைந்துள்ளது.
எந்த பயமும் இல்லை: மன்மோகன் சிங் தலைமையிலான, ஐக்கிய முற்போக்கு கூட்டணி

அரசுக்கு, தி.மு.க., இல்லாமல், பிற கட்சிகள் சார்பில் ஆதரவு அளிக்கும் எம்.பி.,க்கள், 68 பேர். இதுதவிர, ஒன்பது சுயேச்சை, எம்.பி.,க்களும், ஆதரவு தருகின்றனர். இந்த கணக்குப்படி பார்த்தால், மன்மோகன் அரசுக்கு, ஆதரவு தரும் எம்.பி.,க்கள் எண்ணிக்கை, 278. ஒருவேளை, தி.மு.க.,வின், 18 மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த ஒருவர் என, 19 எம்.பி.,க்களும், தங்களின் ஆதரவை வாபஸ் பெற்றாலும், மத்திய அரசு நம்பிக்கை ஓட்டெடுப்பில் தப்பிவிடும். அதற்கு காரணம், முலாயம் சிங்கின் சமாஜ்வாதி மற்றும் மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி எம்.பி.,க்கள் தரும் ஆதரவே. இந்த இரு கட்சிகளுக்கும் சேர்த்து, மொத்தம், 43 (22+21) எம்.பி.,க்கள் உள்ளனர். இந்த கட்சிகளின் ஆதரவு, எந்த சூழ்நிலையிலும் தொடரும் என்பதால், "அரசிலிருந்து விலகுவோம்' என, தி.மு.க., விடுத்த மிரட்டலை, மத்திய கூட்டணி அரசுக்கு தலைமை வகிக்கும் காங்கிரஸ் கட்சி பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. மாயாவதியோ அல்லது முலாயம் சிங்கோ, அரசுக்கு அளித்து வரும் ஆதரவை வாபஸ் பெற திட்டமிட்டால் மட்டுமே, நிலைமை வேறு விதமாக மாறும்; அரசு கவிழும் நிலைமை உருவாகலாம். அதுவரை எந்தப் பயமும் இல்லை என, காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

"பிரதமர் முடிவு எடுப்பார்': பிரதமர் அலுவலக

Advertisement

விவகாரங்களுக்கான மத்திய அமைச்சர், நாராயணசாமி கூறியதாவது: தமிழக மக்கள் மற்றும் தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகளை பொறுத்தவரை, இலங்கை தமிழர் பிரச்னை, உணர்வுப்பூர்வமானது. இந்த உணர்வுகளைத் தான், தி.மு.க.,வும், அதன் தலைமையும் பிரதிபலித்துள்ளன. இந்த பிரச்னை பற்றிய அனைத்து விஷயங்களையும், பிரதமர் மன்மோகன் சிங் பரிசீலித்து, முடிவை அறிவிப்பார். "இலங்கை தமிழர்களை பாதுகாக்கும் விஷயத்தில், மத்திய அரசு உறுதியாக உள்ளது' என, பிரதமர், ஏற்கனவே, பார்லிமென்டில் தெரிவித்துள்ளார். இவ்வாறு, நாராயணசாமி கூறினார்.
- நமது டில்லி நிருபர் -

AdvertisementAdvertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (58)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ayathuray Rajasingam - Scarborough ,கனடா
17-மார்-201319:07:05 IST Report Abuse
Ayathuray Rajasingam தி.மு.க.வினர் ஒரு கோமாளிக் கூட்டம் என்பது காங்கிரஸ் கட்சிக்கு தெரியும். இறுதிக் கட்டப் போரின் பின்னர் தாங்கள் சேகரித்த பொருட்களை மத்திய அரசினூடாக அனுப்புவதற்குப் பதிலாக, தன்னிச்சையாக அனுப்பி கேவலப்படுவார்களா? திரையுலகத்தினரும் இதனைச் சுட்டிக் காடியிருக்கலாம். அன்றைக்கு இதனை முறையாகச் செய்திருந்தால் போர்க் குற்றங்களை மத்திய அரசு கவனத்தில் எடுத்திருக்கும். என்றாலும் சோனியா இருக்குமட்டும் தமிழர்கள் மூன்றாம் கட்டமே.
Rate this:
Share this comment
Cancel
அண்ணாத்தம்பி - திருச்சி ,இந்தியா
17-மார்-201316:37:07 IST Report Abuse
அண்ணாத்தம்பி அமெரிக்க, இந்திய மற்றும் இலங்கையின் கூட்டுத் தயாரிப்புதானே இந்த வாக்கெடுப்பு ... 'நான் உனக்கு கண்டனம் தெரிவித்து உன்னை மன்னித்து விட்டுவிடுகின்றேன்' ... 'உங்கள் திட்டத்தில் திடீர் மாற்றமாக கண்டனம் என்பது தண்டனை என்று ஆகிவிடக் கூடாது. எனவே நான் முனெச்சரிக்கை நடவடிக்கையாக எதிர்ப்பு தெரிவித்து வருவேன்' ... 'உள்நாட்டு நிர்ப்பந்தத்திற்கு உடன்பட்டு நான் ஆதரிப்பது போல் ஆதரித்து எனக்கு எதிரான இன உணர்வாளர்களின் கோபத்தைக் குறைத்துவிடுவேன்' ... அமெரிக்க, இந்திய மற்றும் இலங்கையின் கூட்டுத் தயாரிப்புதானே இந்த வாக்கெடுப்பு ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... நாடகமே உலகம் ...
Rate this:
Share this comment
Cancel
sundararaman - chennai,இந்தியா
17-மார்-201313:26:04 IST Report Abuse
sundararaman மன்மோகன் சிங் சொல்றாரு,"மாப்ள இவிங்க எப்பவுமே இப்டிதான் சும்மா சவுண்டு மட்டும் பெருசா விடுவாங்க. அத பார்த்து ஏதோ பயங்கரமா நடக்க போகுதுன்னு மத்தவன்லாம் நினைப்பான். ஆனா கடைசியில நாம நீட்ன இடத்துல கையெழுத்து போட்டுட்டு பேட்டா வாங்கிகிட்டு போயிட்டே இருப்பாங்க. மக்கள் நலம் மக்கள் நலம் என்றே சொல்லுவார் தம் மக்கள் நலம் ஒன்றேதான் மனதில் கொள்ளுவார். நம்ம கலைஞர் பொதுநலம் கருதி ஒரு முடிவு எடுத்தார்னா கூட அதுல குடும்ப நலம் ஒன்று ஒளிஞ்சிகிட்டு இருக்கும். இது நமக்கு மட்டும்தான் தெரியும்"
Rate this:
Share this comment
Cancel
சத்தி - Bangalore,இந்தியா
17-மார்-201312:47:29 IST Report Abuse
சத்தி காங்கிரஸ் இலங்கைக்கு எதிரா வாக்களித்தால் அது திமுகாவிற்கு கிடைக்கும் பெரிய வெற்றியாகும். திமுக விற்கு செவி சாய்க்குமா காங்குராஸ், பாப்போம்.
Rate this:
Share this comment
Cancel
Sri Gugan - Vandavasi,இந்தியா
17-மார்-201312:27:54 IST Report Abuse
Sri Gugan எந்த இக்கட்டான சூழ்நிலையிலும் இவர் தன்னுடைய ஆதரவை வாபஸ் வாங்கமாட்டார்.இது வெறும் பூச்சாண்டி வேலை.அவ்வாறு வாபஸ் வாங்கினால் தன் குடும்பத்தை திஹார் அழைக்கும் என்று பாசதலைவனுக்கு தெரியாத என்ன?(ஹயோ .......ஹயோ .......நா தமாசுக்கு சொன்னதையெல்லாம் இந்த ராகுல் தம்பி சீரியசாக எடுத்துகுது அவ்........)
Rate this:
Share this comment
Cancel
s.maria alphonse pandian - CHENNAI-88,இந்தியா
17-மார்-201311:00:53 IST Report Abuse
s.maria alphonse pandian இந்த செய்தியின் தலைப்பில் உள்ளதை போல மத்ய அரசு திமுகவின் மிரட்டலை சீரியஸாக எடுத்து கொள்ளவில்லை என்றால் இலங்கைக்கு ஆதரவாக வாக்களிக்கும்...அப்படித்தானே?வாக்களிப்பன்று பார்ப்போமே?என்னை பொறுத்தவரை திமுக..காங்கிரசை இலங்கைக்கு எதிராக வாக்களிக்க வைக்கும்....திமுகவா...கொக்கா?
Rate this:
Share this comment
guru - chennai,இந்தியா
17-மார்-201312:59:52 IST Report Abuse
guruஇது ஒரு காமெடி பீசு. முடியல...........
Rate this:
Share this comment
CHERANAADAN - Thuckalay,இந்தியா
17-மார்-201313:07:32 IST Report Abuse
CHERANAADANபாண்டியனா கொக்கா கொக்கா ...எனக்கு பிடிக்காதே காக்கா காக்கா.....
Rate this:
Share this comment
17-மார்-201314:26:25 IST Report Abuse
அறிவாலயம் c / o போயஸ் எப்போதுமே நாங்கள் கூட்டணியை விட்டு விலகியதில்லை. மற்றவர்கள் விலகினால் அது எங்கள் தவறல்ல என எப்போதும் தலிவர் கூறுவார் , இப்போ ?? போனாப் போய்க்கோன்னு விரட்டப்பட்டு விட்டார் . கட்டுமரம் கவிழ்ந்து காணமல் போகும் ...
Rate this:
Share this comment
SJS - chennai,இந்தியா
17-மார்-201315:14:22 IST Report Abuse
SJSதி மு க கொக்கு இல்ல காக்கா இனி தி மு க பேச்சு எடுபடாது ...
Rate this:
Share this comment
Cancel
S K RAM - Chennai,இந்தியா
17-மார்-201310:50:28 IST Report Abuse
S K RAM உதார் விடறதுல நம்ம தலைவரை யாரும் அடிச்சுக்க முடியாது. வாயிலையே வைட் ஹௌஸ் (White House) கட்டுற திறமை நம்ம தலைவருக்கு மட்டுமே இருக்கு. இனி தந்தி மற்றும் கடிதம் எழுத ஆரம்பிச்சுடுவாரு நம்ம தலைவர்.
Rate this:
Share this comment
Cancel
villupuram jeevithan - villupuram,இந்தியா
17-மார்-201310:22:32 IST Report Abuse
villupuram jeevithan உன்னை பார்த்து உலகம் சிரிக்கிறது உன் செயலைப் பார்த்து உன் நிழலும் வெறுக்கிறது.
Rate this:
Share this comment
MJA Mayuram - chennai,இந்தியா
17-மார்-201314:54:40 IST Report Abuse
MJA Mayuramதட்டுங்கள் தட்டுங்கள் திறக்கும் என்ற தத்துவம் தேவையில்லை முட்டுங்கள் முட்டுங்கள் வெடிக்கும் என்ற வார்த்தைக்கு மோசமில்லை ...கலைஞரின் கைகளை உயர்த்த வா ......
Rate this:
Share this comment
Cancel
Sukumar Talpady - Mangalore ,இந்தியா
17-மார்-201310:22:15 IST Report Abuse
Sukumar Talpady தமிழர்களுக்கு துன்பம் என்றால் முலாயம் சிங்க் யாதவ், மாயாவதி மற்றும் சில வடஇந்திய தலைவர்களுக்கு கவலை இல்லை. ஆனால் வடஇந்தியர்களுக்கு , வங்காளிகளுக்கு தொல்லை என்றால் இவர்களெல்லாம் ஒன்றாகி விடுவார்கள். தென்இந்தியர்களான நாமெல்லாம் இவர்கள் சொன்ன படி கேட்க வேண்டும் . ரஷ்ய இலங்கைக்கு ஆதரவு அளிக்கும் என்பது கவலை தரக்கூடிய விஷயம். இந்தியா தனிமை படுத்தப்படும் .
Rate this:
Share this comment
Cancel
Tamilan - Chennai,இந்தியா
17-மார்-201309:54:52 IST Report Abuse
Tamilan எங்க தலைவரோட திரை வசனத்தில் இதுவும் ஒன்று
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.