புதிய போப்பின் பள்ளி பருவ காதலி: காதல் கடிதத்தையும் வெளியிட்டார்

Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
எழுத்தின் அளவு:
Advertisement

ரோம்: "என்னை திருமணம் செய்யாவிட்டால், பாதிரியாராகப் போய் விடுவேன்' என, இளம் வயதில், காதலியை கடிதம் மூலம் மிரட்டியவரே, தற்போது, புதிய போப் ஆக தேர்வு செய்யப்பட்டுள்ளார் என்ற, ருசிகர தகவல் வெளியாகியுள்ளது.
கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் தலைவராக கருதப்படும், 265வது போப் ஆண்டவராக இருந்த, பெனடிக்ட், உடல்நிலை மற்றும் வயோதிகத்தின் காரணமாக, கடந்த மாதம் பதவி விலகினார். இதையடுத்து, கடந்த, 13ம் தேதி, புதிய போப்பை தேர்வு செய்வதற்கான, உலகம் முழுவதும் உள்ள நாடுகளைச் சேர்ந்த, 115 கார்டினல்கள் பங்கேற்ற கூட்டம் நடந்தது. இதில், தென் அமெரிக்க நாடான, அர்ஜென்டினாவை சேர்ந்த, ஜார்ஜ் மரியோ பெர்காக்லியோ, 76, புதிய போப்பாக தேர்வு செய்யப்பட்டார். இவர், "போப் பிரான்சிஸ் -1' என, அழைக்கப்படுவார் என்றும் தெரிவிக்கப்பட்டது. புதிய போப் தேர்வு செய்யப்பட்டதை அடுத்து, அவரைப் பற்றிய, தகவல்கள் வெளியாகத் துவங்கியுள்ளன. அந்த வரிசையில், அவரின் சிறு வயதில் உருவான, "முதல் காதல்' குறித்த செய்தி வெளியாகியுள்ளது. ஜார்ஜ் மரியோ, தன் பள்ளிப் பருவத்தில் கொடுத்த காதல் கடிதத்தை, அர்ஜென்டினாவைச் சேர்ந்த அமாலியா டெமான்டே, 76, என்ற மூதாட்டி இப்போது வெளியிட்டுள்ளார். ஜார்ஜ் மரியோவும், அமாலியாவும், பள்ளிப் பருவத்தில் ஒன்றாக படித்த போது, தன், 12வயது வயதில், அமாலியாவிடம், காதல் கடிதம் கொடுத்துள்ளார் ஜார்ஜ் மரியோ.
இதுதொடர்பாக அமாலியா கூறியுள்ளதாவது: புதிய போப்பாக தேர்வு செய்யப்பட்டுள்ள, ஜார்ஜ் மரியோவும், நானும் பக்கத்து பக்கத்து வீட்டில் வசித்தோம். எங்களுக்கு, 12 வயது இருக்கும் போது, திடீரென ஜார்ஜ் மரியோ என்னிடம் ஒரு கடிதத்தை கொடுத்தார். அதில், "உன்னை மணக்க ஆசைப்படுகிறேன். நீ சரி என்றால் மணப்பேன். இல்லையெனில், பாதிரியாராகி, மத சேவையில் ஈடுபடுவேன்' என, தெரிவித்திருந்தார். அந்த கடிதத்தில், வெள்ளை மாளிகை படத்தையும், அதன் மேற்கூரையை, சிகப்பு நிறத்திலும் வரைந்திருந்தார். ஜார்ஜ் மரியோ கடிதத்திற்கு, பதில் கடிதம் எழுத நினைத்தேன். ஆனால், அந்த கடிதம் பற்றி என் பெற்றோருக்கு தெரிந்து விட்டதால், அடித்தனர். பின், வேறு இடத்திற்கு என்னை கூட்டிச் சென்று விட்டதால், அதன்பின், ஜார்ஜ் மரியோவை சந்திக்க முடியவில்லை. அவர் இப்போது, போப்பாகியுள்ள மகிழ்ச்சி அளிக்கிறது, என்றார்.

Advertisement
Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (10)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
venks - mumbai,இந்தியா
20-மார்-201311:01:50 IST Report Abuse
venks மணிரத்தினத்தின் அடுத்த படத்திற்கு கரு ரெடி
Rate this:
Share this comment
Cancel
Ganapathysubramanian Gopinathan - Bangalore,இந்தியா
17-மார்-201306:15:53 IST Report Abuse
Ganapathysubramanian Gopinathan இதை ஒரு செய்தி என வெளியிடுவதற்கு அப்படி என்ன தப்பு செய்து விட்டார்?
Rate this:
Share this comment
Cancel
Siva Panchalingam - Toronto,கனடா
17-மார்-201306:09:59 IST Report Abuse
Siva Panchalingam அந்த பாட்டி சொல்லுற விடயம் ஒரு கிரிமினல் குற்றம் என்ற கருத்தில் சொல்ல முடியுமா? எல்லாருடைய இளமை காலத்திலும் இப்படியான சம்பவங்கள் வரும்.போகும் .ஒரு நாட்டுக்கு உதவாத சமுக விரோத செயல் செய்தால் அல்லது செய்திருந்தால் மட்டுமே அது கருத்தில் கொள்ள வேண்டிய ஒரு குற்றம் ஆகும். தமக்கு நன்கு தெரிந்த ஒரு மனிதன் இன்று பாப்பரசர் ஆகி இருப்பது இந்த வஜதான பாட்டிக்கு தாங்கி கொள்ள கொஞ்ச சிரமமாய் இருக்கு போல இருக்கு.
Rate this:
Share this comment
Cancel
naagai jagathratchagan - mayiladuthurai ,இந்தியா
17-மார்-201305:54:19 IST Report Abuse
naagai jagathratchagan நினைத்தேன் வந்தாய் நூறு வயது ...கேட்டேன்.... மறுத்தாய் ....ஆசை... மனதை ..வலித்த மனதை மாற்றி .பாதிரியாகி ..பரவசமானேன் ...நீ வந்திருந்தால்...நொந்து பொய்..... நூடுல்ல்ஸ் ஆகியிருப்பேனே ...என் உள்ளே உன் உருவம் வாடியதே
Rate this:
Share this comment
Cancel
Sekar Sekaran - Jurong-West,சிங்கப்பூர்
17-மார்-201305:24:44 IST Report Abuse
Sekar Sekaran போப் அவர்களுக்கு நல்ல நேரம் அன்றைக்கே ஆரம்பித்துவிட்டது. தப்பித்தார். அதனால்தான் ரெண்டு மூணு கட்டிக்கொண்டவர்கள் எல்லாம் வாழ்த்துக்களை இங்கிருந்தே சொல்லுகின்றனர் முன்டியயடித்துகொண்டு..
Rate this:
Share this comment
Cancel
Bava Husain - riyad,சவுதி அரேபியா
17-மார்-201301:55:08 IST Report Abuse
Bava Husain ஆஹா...மலரும் நினைவுகள்.....
Rate this:
Share this comment
Cancel
Samy Chinnathambi - rayong,தாய்லாந்து
17-மார்-201300:46:27 IST Report Abuse
Samy Chinnathambi இவ்வளவு நாலு கம்முனு இருந்துட்டு பெரிய ஆளுன்னு தெரிஞ்சவுடனே இப்ப பீத்திகிட்டு திரியுது இந்த பாட்டி....
Rate this:
Share this comment
Cancel
Krishnan (Sarvam Krishnaarpanam....) - Hindu American Foundation,யூ.எஸ்.ஏ
17-மார்-201300:36:07 IST Report Abuse
Krishnan (Sarvam Krishnaarpanam....) புதிய போப் பிரான்சிஸ் -1 அவர்களுக்கு வாழ்த்துக்கள்.
Rate this:
Share this comment
Cancel
தி.இரா.இராதாகிருஷ்ணன் - நாக்பூர்....,இந்தியா
17-மார்-201300:25:44 IST Report Abuse
தி.இரா.இராதாகிருஷ்ணன் போச்சுடா.........அடுத்த தமிழ் படத்துக்கு ஒன் லைன் ரெடி.......ரூம் போட்டு யோசிக்க வேண்டியதுதான் பாக்கி......என்ன டைட்டில் வைக்கலாம்?
Rate this:
Share this comment
Cancel
Thangairaja - tcmtnland,இந்தியா
17-மார்-201300:21:14 IST Report Abuse
Thangairaja விடலைப்பருவ வசீகரம் இயல்பானது தானே ......இந்த பெண்மணியின் ஏமாற்றம் இத்தனை ஆண்டுகளுக்கு பிறகு.......
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.
மேலும் செய்திகள்