திருச்சி: தஞ்சையில், தமிழ் ஈழ ஆதரவாளர்களால், தாக்குதலுக்கு உள்ளான சிங்களர் உட்பட, 17 மாணவர்கள், தனியார் விமானம் மூலம், சென்னை அனுப்பி வைக்கப்பட்டனர். அவர்கள் வந்த வேன் மீது தாக்குதல் நடத்திய, ஐந்து பேரை பிடித்து, திருச்சி போலீசார் விசாரிக்கின்றனர்.
டில்லியில் உள்ள ஒரு பல்கலையில், தொல்லியல் துறையில் படித்து வரும், 17 மாணவர்கள், புராதன சின்னங்கள் பற்றி ஆய்வு செய்ய, சென்னையில் இருந்து, ராக்போர்ட் எக்ஸ்பிரஸ் மூலம், நேற்று காலை, திருச்சி வந்தனர். பின், வேனில் தஞ்சை பெரிய கோவிலுக்கு சென்றனர். அவர்களில், புத்த மதத்தை சேர்ந்த, கனலேகா என்ற சிங்களர், காவி உடை அணிந்து, மொட்டை அடித்திருந்தார். சிங்களர் ஒருவர், தஞ்சை பெரிய கோவிலுக்கு வந்திருக்கும் தகவல் அறிந்து, அங்கு சென்ற தமிழ் ஈழ ஆதரவாளர்கள், அவர் மீது தாக்குதல் நடத்தினர்; சக மாணவர்கள், கனலேகாவை மீட்டனர். போலீசார் உதவியுடன், வேன் மூலம் அவர்கள், திருச்சி அனுப்பி வைக்கப்பட்டனர். நேற்று மதியம், 2:20 மணிக்கு, திருச்சி விமான நிலையம் வந்த வேன் மீது, அரியமங்கலம் பழைய பால்பண்ணை அருகே நின்றிருந்த சிலர், கல், கட்டை உள்ளிட்ட ஆயுதங்களை கொண்டு தாக்குதல் நடத்தினர். இதில், வேன் கண்ணாடி உடைந்தது. வேனில் இருந்தவர்கள் அதிர்ஷ்டவசமாக தப்பினர். போலீஸ் பாதுகாப்புடன், திருச்சி விமான நிலையத்துக்குள், கனலேகாவின் உடைகளை மாற்றி, அங்கிருந்து ஜெட் ஏர்வேஸ் விமானத்தில், மதியம், 3:30 மணிக்கு, 17 மாணவர்களும் சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். வேன் மீது தாக்குதல் நடத்தியது தொடர்பாக, ஐந்து பேரை பிடித்து, திருச்சி போலீசார் விசாரிக்கின்றனர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
நம் நாட்டின் பெருமையான சகிப்புத்தன்மைக்கு இது ஒரு அவமானம். இங்கு இலண்டனில் இலங்கை தமிழர்கள் வீடுகளில் சிங்களவர்கள் வசிக்கிறார்கள். ஒரே வீட்டில் ஒரே சமையலறையை பகிர்ந்து கொள்கிறரர்கள் . ஹாலில் அமர்ந்து ஒன்றாக டிவி பார்கிறார்கள். நேரடியாக பாதிக்கப்பட்ட அவர்களே மனித நேயத்துடன் ஒன்றாக வாழும்போது நம்மவர்களுக்கு ஏன் இந்த வேண்டாத வேலை.அரசியல் லாபதுக்காகவும் சுய விளம்பரதுக்காகவும் செயல்படும் அறிவிலிகளை கடுமையாக தண்டிக்க வேண்டும்
அநாகரிகத்தின் உச்சகட்டம். இந்தமாதிரி நடந்துகொள்பவர்களுக்கும், ராஜபக்ஸே சகோதரர்களுக்கும் பெரிய வேறுபாடு இல்லை. உண்ணாவிரத நயவஞ்சக கருணா கும்பல்களிடம் இப்படி நடந்துகொண்டால் ஒரு நியாயம் இருக்கும். அதைவிட்டுவிட்டு, கடவுள்மேல் பாரத்தைப்போட்டு, நம்மை நம்பிவரும் சாதாரணமானவர்களிடம் வெட்டி வீரத்தைக் காட்டுவதில் என்ன பயன்?

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.