தி.மு.க.,வை தனிமைப்படுத்த முயற்சி: கருணாநிதி ஆதங்கம்
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
எழுத்தின் அளவு:
Advertisement

சென்னை: "தி.மு.க.,வை தனிமைப்படுத்த வேண்டும் என, அரசியல் கட்சிகள் சில நினைக்கின்றன; ஆனால், தி.மு.க.,வின் விந்தையான செயல்பாடுகளை, மக்கள் சரியாகவே புரிந்து கொண்டுள்ளனர்' என, அக்கட்சித் தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டு உள்ள அறிக்கை: மத்திய அரசை குறை சொல்ல வேண்டுமென்றால், தி.மு.க., அங்கம் வகிக்கும் மத்திய அரசு என, கூறுகின்றனர். மத்திய அரசு நல்லது செய்தால், தி.மு.க., அங்கம் வகிக்கும் மத்திய அரசு என, கூறுவதில்லை. தி.மு.க.,வை தனிமைப்படுத்த வேண்டும் என்பதே இதன் நோக்கம்.


விலகல் ஏன்? தி.மு.க., மாநில கட்சி என்பதை மறந்துவிட்டு, வல்லரசு போல கற்பித்துக் கொண்டு, இலங்கையில் நடந்த படுகொலைகளை, தி.மு.க., நினைத்திருந்தால், நிறுத்தியிருக்கலாம் என, திட்டமிட்டு குறை சொல்லுகின்றனர். மத்திய அரசை, இதற்கு வலுவான தீர்மானத்தை, ஐ.நா., மனித உரிமை ஆணையத்தில் கொண்டு வரவேண்டும் என, வலியுறுத்துகிறோம். மத்திய அரசு தீர்மானம் கொண்டுவராத காரணத்தால், அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானத்தை ஆதரிக்க வேண்டும் என, வலியுறுத்துகிறோம். தமிழினத்துக்கு நிறைவு தரும் பதில், மத்திய அரசிடமிருந்து கிடைக்காததால், மத்திய அமைச்சரவையில், தி.மு.க., நீடிப்பது அர்த்தமற்றதாகி விடும் என, அறிக்கை வெளியிட்டேன்.


கிண்டல்: இதற்கு, "ஆறாவது முறையாக, மத்திய அரசை, தி.மு.க., மிரட்டுகிறது' என, கிண்டல் செய்கின்றனர். தி.மு.க.,வின் எச்சரிக்கையால், தமிழகத்துக்கு நன்மை ஏற்பட்டுள்ளது என்பதே முக்கியம். கூட்டணியில் அங்கம் வகிப்பதால், முக்கியமான பிரச்னைக்கு கோரிக்கை வைக்கிறோம்; அடுத்து வலியுறுத்துகிறோம்; அழுத்தம் தருகிறோம். இதற்கு பின்பும் கோரிக்கை நிறைவேறாவிட்டால், வெளியேறுகிறோம் என, அறிவிக்கிறோம். கூட்டணி அரசியலில் இப்படி முடிவெடுப்பது வழக்கம் தான். ஆனால், மத்திய அரசில், தி.மு.க., நீடிப்பது பலருக்கு உறுத்துகிறது. அவலை நினைத்து, உரலை இடிப்போருக்கு, தி.மு.க., எடுக்கும் முடிவுகள் விந்தையாக இருக்கலாம். ஆனால், தமிழக மக்கள், தி.மு.க.,வை சரியாகவே புரிந்து கொண்டுள்ளனர். இவ்வாறு அறிக்கையில் கருணாநிதி கூறியுள்ளார்.


பதில் இல்லை: நிருபர்களுக்கு அவர் அளித்த பேட்டி: இலங்கை அரசுக்கு எதிராக, ஐ.நா., சபையில் அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானத்தில், உரிய திருத்தங்களை மத்திய அரசு செய்து, அத்தீர்மானத்தை ஆதரிக்க வேண்டும். இல்லையேல், மத்திய அமைச்சரவையில், தி.மு.க., நீடிப்பதில் அர்த்தமில்லை என, நேற்று முன் தினம் அறிவித்தோம். ஆனால், அதற்கு மத்திய அரசிடமிருந்து எந்த பதிலும் வரவில்லை. இலங்கை பிரச்னை பற்றி, மத்திய அரசிடம் பல நாட்களாக சொல்லி வருகிறோம்; ஆனால், வெளிப்படையாக எதையும் மத்திய அரசு அறிவிக்கவில்லை. இதனால், தி.மு.க.,வும் தன் நிலையை வெளிப்படுத்தாமல் உள்ளது. மத்திய அரசு வழக்கம்போல் செயல்படுகிறது. அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானத்தில் தேவையான திருத்தங்களை இந்தியா செய்யவேண்டும் என்பதே, எங்களின் இறுதியான எதிர்பார்ப்பு. இதற்கு, பதில் கிடைக்கும் காலம் தான், மத்திய அரசுக்கு, தி.மு.க., வழங்கும் காலக்கெடு. டில்லியில் நடந்த, "டெசோ' கருத்தரங்கில், அமெரிக்க தீர்மானத்தை, மத்திய அரசு ஆதரிக்கும் என, அமைச்சர் குலாம் நபி ஆசாத் கூறினார். ஆனால், இதுபற்றி மத்திய அரசு பதில் அளிக்காமல் உள்ளது. அதனால் தான், அமைச்சரவையில் நீடிப்பதில் அர்த்தமில்லை என, அறிக்கை கொடுத்தோம். இவ்வாறு கருணாநிதி கூறினார்.


Advertisement
Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (127)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Tamilselvan - Chennai,இந்தியா
18-மார்-201305:18:43 IST Report Abuse
Tamilselvan திமுக போன்ற ஒரு நல்ல இயக்கத்தை தனிமை படுத்த கூடாது. அதில் உள்ள மஞ்சள் துண்டு கும்பல்களை தனிமை படுத்தி தூக்கி ஏறிய வேண்டும். ஒரு இனமே அழிந்து கொண்டு இருந்த நிலையில், தனது பதவி பறி போய் விடும் என்று, வாயே திறக்காமல் அட்டை போல பதவியில் ஒட்டி கொண்டு கொள்ளை அடித்த கும்பல் இந்த மஞ்சள் துண்டு கும்பல். முன்னுக்கு பின் முரணாகி பேசும், பித்தலாட்டத்தின் மொத்த உருவம் கட்சி வரையில் பதவில் இருந்து கொண்டு கொள்ளை அடிப்பதை மட்டும் குல தொழிலாக கொண்டு இருக்கும் இந்த மஞ்சள் துண்டு கும்பல் துரத்தி அடிக்க பட வேண்டும். இந்திய அரசியலில் உள்ள மஞ்சள் துண்டு கும்பல் போன்ற ஊழல் புற்று நோய் அறவே தனிமை படுத்த பட்டு, சுத்தம் செய்தால் மட்டும் இந்தியா ஒரு மானம், மரியாதை உள்ள ஒரு வல்லரசு ஆகும்.
Rate this:
Share this comment
Cancel
என்னுயிர்தமிழகமே - hyderabad,இந்தியா
18-மார்-201303:35:33 IST Report Abuse
என்னுயிர்தமிழகமே சடாரென்று ஏனோ ஒரு சொல் வழக்கு நினைவுக்கு வந்து விட்டது, மன்னியுங்கள் பொது ஜனமே, fill in the blanks "ஆட தெரியாத ...... தெரு கோணல் " அப்படீன்னு சொன்னாளாம். எவ்ளோ மார்க் வாங்கரீங்கன்னு பார்க்கலாம்
Rate this:
Share this comment
Cancel
elzhalan - belgium ,யுனைடெட் கிங்டம்
18-மார்-201300:02:48 IST Report Abuse
elzhalan கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவுல இவரை பத்தி ஒரு நாலு வர்த்த எழுதுங்க வரலாற்று நாயகன் இவர் செய்த நல்ல காரியங்கள் வரபோகும் சந்ததியர்க்கும் தெரியவேண்டாமா .........[இனத்துரோகி என்பதை மறவாமல் குறிப்பிட்டு எழுதுங்க]
Rate this:
Share this comment
Cancel
elzhalan - belgium ,யுனைடெட் கிங்டம்
17-மார்-201318:07:59 IST Report Abuse
elzhalan அரசியல் சாணக்கியராமே ' அவருக்கு தெரியாத என்ன ஒரு சீட்டு கூட வரபோற தேர்தல கிடிக்காது என்று தெரியும் சும்மா தெரியாது மாறி நடிகிராறு இவரு கூட்டணி வைக்கும் கட்சி நூருதடவையவது பரிசிலனை செய்யவும்........அப்புறம் கூட்டணி வச்சிட்டு கைல சங்கு தான்.........
Rate this:
Share this comment
Cancel
Rakks Poovizhi - Gingee,இந்தியா
17-மார்-201317:48:56 IST Report Abuse
Rakks Poovizhi திமுக வரலாற்று சிறப்புகள் ரொம்ப ரொம்ப சூப்பரா இருக்கு ,,,மன்னிச்சிடுங்க தப்பா டைப் பண்ணிட்டேன் ரொம்ப கேவலமா இருக்கு ,........தலைவரே நீங்க எட்டபர கூட overtake பண்ணிட்டிங்க....இப்டியே maintain பண்ணுங்க...நீங்க நல்லா வருவிங்க...
Rate this:
Share this comment
Cancel
Anand - Madurai,இந்தியா
17-மார்-201317:04:19 IST Report Abuse
Anand //தி.மு.க., மாநில கட்சி என்பதை மறந்துவிட்டு, வல்லரசு போல கற்பித்துக் கொண்டு, இலங்கையில் நடந்த படுகொலைகளை, தி.மு.க., நினைத்திருந்தால், நிறுத்தியிருக்கலாம் என, திட்டமிட்டு குறை சொல்லுகின்றனர்// அந்த நெரத்தில் நீங்கள் மத்திய அரசில் இருத்து வெளிறி இருதால், திமுக முயன்றது சொல்லி இருப்போம்
Rate this:
Share this comment
Cancel
ugan - coimbatore,இந்தியா
17-மார்-201316:58:49 IST Report Abuse
ugan ஒரு சிலர் கிடையாது எங்கெங்கு உண்மையான தமிழ் மக்கள் இருக்கிறார்களோ அங்கெல்லாம் இந்த இன துரோகி தனிமைப்படுத்த படுவார், இந்த கட்சியும் தனிமை படும். தலை என்ன தலை கீழாக நின்னாலும் உருள்வது உருல்வதுதான்.
Rate this:
Share this comment
Cancel
Janaki raman Pethu chetti - Trichy,இந்தியா
17-மார்-201315:46:48 IST Report Abuse
Janaki raman Pethu chetti 'நெஞ்சு பொறுக்குதில்லையே இந்த நிலை கெட்ட மனிதரை நினைத்து விட்டால்' என்ற பாரதியின் பாடல் நினைவுக்கு வருகிறது.
Rate this:
Share this comment
Cancel
Shaikh Miyakkhan - jeddah,சவுதி அரேபியா
17-மார்-201314:57:17 IST Report Abuse
Shaikh Miyakkhan வலை தலத்தில் வடிவேல் இல்லாத குறையை இவர் நிவர்த்தி செய்கிறார்
Rate this:
Share this comment
Cancel
Baskaran Kasimani - Singapore,சிங்கப்பூர்
17-மார்-201314:36:24 IST Report Abuse
Baskaran Kasimani நாடகமே உலகம் என்ற கொள்கை உடைய திமுக குடும்பம் தனிமைப்படுத்தப்படவேன்டியாதே
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.
மேலும் செய்திகள்