Govt., plan to ban fast foods in school canteens | பள்ளிகளில் "பாஸ்ட் புட்' தடை: மத்திய அரசு ஆலோசனை| Dinamalar

பள்ளிகளில் "பாஸ்ட் புட்' தடை: மத்திய அரசு ஆலோசனை

Updated : மார் 18, 2013 | Added : மார் 16, 2013 | கருத்துகள் (6)
Advertisement
Govt., plan to ban fast foods in school canteens

புதுடில்லி: "பீட்சா, பர்கர் போன்ற, "பாஸ்ட் புட்' அயிட்டங்களை, பள்ளி கேன்டீன்களில், இனி விற்பனை செய்யாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்கு பதிலாக, உடல் ஆரோக்கியத்துக்கு உதவும், பழங்கள், பால் பொருட்களை விற்பனை செய்யலாம்' என, மாநில அரசுகளுக்கு, மத்திய அரசு ஆலோசனை வழங்கியுள்ளது.
மத்திய சுகாதார அமைச்சர், குலாம் நபி ஆசாத், லோக்சபாவில், எழுத்து மூலமாக அளித்த பதில்: நாடு முழுவதும் உள்ள, பல பள்ளிகளின் கேன்டீன்களில், "பாஸ்ட் புட்' வகைகள் விற்பனை செய்யப்படுகின்றன. இந்த வகை உணவுகளில், கொழுப்பு சத்து அதிகம் இருப்பதோடு, சர்க்கரை, உப்பு, காரம் ஆகியவையும், அதிகம் சேர்க்கப்படுகின்றன. இந்த உணவுகளில், உடல் நலத்துக்கு பயன் அளிக்கும், புரோட்டின், விட்டமின், மினரல் ஆகியவை போதிய அளவில் இல்லை. கரிமப் பொருள் சேர்க்கப்பட்ட குளிர்பானங்களும் அதிகம் விற்பனை செய்யப்படுகின்றன. இதுபோன்ற உணவுகளையும் சாப்பிடுவதாலும், குளிர்பானங்களை அருந்துவதாலும், குழந்தைகளுக்கு, பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன. எனவே, இந்த வகை உணவுகளையும், குளிர்பானங்களையும், பள்ளி கேன்டீன்களில் விற்பனை செய்யாமல் இருப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியது அவசியம். இதுதொடர்பாக, அனைத்து மாநில முதல்வர்கள், மாநில சுகாதார அமைச்சர்களுக்கு கடிதங்கள் மூலம் ஆலோசனை தெரிவிக்கப்பட்டுள்ளது. "பாஸ்ட் புட்' வகைகளுக்கு பதிலாக, காய்கறி, பழங்கள், தானியங்கள் ஆகியவற்றை விற்பனை செய்வதோடு, அவற்றின் பயன்பாடுகளையும், மாணவர்களுக்கு விளக்க வேண்டும். இவ்வாறு, குலாம் நபி ஆசாத் கூறினார்.மத்திய அரசின் இந்த நடவடிக்கைகக்கு, அனைத்து தரப்பினரும், வரவேற்பு தெரிவித்துள்ளனர். இதுகுறித்து, டாக்டர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: பீட்சா, பர்கர் போன்ற, உணவு வகைகளை அதிகமாக சாப்பிடுவதால், குழந்தைகளுக்கு உடல் பருமன் ஏற்படுவதோடு, உடல் ரீதியான, வேறு பல பாதிப்புகளும் ஏற்படுகின்றன. குறிப்பாக, நீரிழிவு நோய் பாதிப்பு, இதனால் அதிகம் ஏற்படுகிறது. இந்த உணவு வகைகளை கட்டுப்படுத்த, அரசு சார்பில் உறுதியான நடவடிக்கை எடுக்கவில்லை எனில், குழந்தைகளின் எதிர்காலம் பாதிக்கப்படும். இவ்வாறு, டாக்டர்கள் தரப்பில் கூறப்படுகிறது.


Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
RAJA - chennai,இந்தியா
17-மார்-201317:18:46 IST Report Abuse
RAJA அப்படியே lays குர் குரே போன்ற உடலுக்கு கெடுதல் விளைவிக்க கூடிய பொருட்களையும் தடை செய்தால் நன்றாக இருக்கும்
Rate this:
Share this comment
Cancel
kumaresan.m - hochimin ,வியட்னாம்
17-மார்-201309:01:54 IST Report Abuse
kumaresan.m " இதை தான் தும்பை விட்டுவிட்டு வாலை பிடிப்பது என்பது, மத்திய மற்றும் மாநில அரசுகள் மக்கள் தொகை பெருக்கத்திற்கு தக்கவாறு வருங்கலங்களில் வேளாண்மை செயிக்க பசுமை புரட்சி திட்டங்களை செயல் படுத்த வேண்டும் ,மத்திய அரசுக்கு சொந்த மான குடோன்களில் வீணாகும் தானியங்களை உணவு பாதுகாப்பு மசோதாவின் மூலம் பகிர்த்து உண்ணாலாம், உணவு பொருட்களின் விலையேற்றம் மற்றும் உணவுகள் பற்றாகுறையின் காரணமாக மக்கள் துரித உணவை நாடவேண்டிய நிலைமைக்கு தள்ளப்பட்டு உள்ளார்கள் "
Rate this:
Share this comment
Cancel
K.Sugavanam - Sengkang,சிங்கப்பூர்
17-மார்-201306:10:59 IST Report Abuse
K.Sugavanam மாக்கு,கேஎப்சி நாட்டிலிருந்தே தொரத்தனும்,அவங்கதான் இந்த பாஸ்ட்புட் இங்க வாறதுக்கே காரணம்.அதை தின்னா நம்ப உடலுக்கே உலை வெக்கும்.அதனால விக்க தடை செஞ்சா போதாது.கடையே போடக்கூடாதுன்னு கம்பனிக்கே தடை விதிக்கணும்..
Rate this:
Share this comment
Cancel
தி.இரா.இராதாகிருஷ்ணன் - நாக்பூர்....,இந்தியா
17-மார்-201300:57:56 IST Report Abuse
தி.இரா.இராதாகிருஷ்ணன் மிகவும் வரவேற்கப்பட வேண்டிய முடிவு......மாநில அரசு, பள்ளிகள் உடனே இதனை செயல்படுத்த வேண்டும்......
Rate this:
Share this comment
Cancel
Krishnan (Sarvam Krishnaarpanam....) - Hindu American Foundation,யூ.எஸ்.ஏ
17-மார்-201300:34:26 IST Report Abuse
Krishnan (Sarvam Krishnaarpanam....) நேற்று, உலக மாற்றுதிரனாளிகள் தினம். இந்தியாவில் மாற்றுதிரனாளிகள் அதிகம். அவற்றில் பெரும்பாலும் மூளைவளர்ச்சி குறைபாடு, பிறவியில் இருந்தே கண் தெரியாமல், காத்து கேளாமல், வாய் பேச முடியாதவர்கள் அதிகம். அதற்கு முக்கிய காரணம், குழந்தை கருவாக இருக்கும் பொழுதே நல்ல ஊட்டசத்து கிடைக்காதது தான். விருப்பமுள்ளவர்கள், நல்ல சத்துள்ள அசைவ உணவு உட்கொள்ளுங்கள். அது உங்கள் உடலுக்கு மட்டும் அல்ல, உங்கள் வருங்கால சந்ததியினருக்கும் ஆரோக்கியம் கொடுக்கும். மேலை/அரபு நாடுகளில் இவ்வளவு மாற்றுதிரனாளிகள் கிடையாது. நாம் அசைவ உணவு சாப்பிடவில்லை என்றால், அவை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு, அங்கிருப்பவர்களுக்கு பயனளிக்கும் தவிர, யாரும் நிறுத்திவிட போவதில்லை..
Rate this:
Share this comment
நாஞ்சில் சுலைமான் - THUCKALAY,இந்தியா
17-மார்-201309:37:55 IST Report Abuse
நாஞ்சில் சுலைமான் //மேலை/அரபு நாடுகளில் இவ்வளவு மாற்றுதிரனாளிகள் கிடையாது//-ஆனால் JUNK FOOD காரணமாக நடக்க இயலாத BROILER கோழிகளை போன்றவர்களை அதிகம் பார்க்கலாம். இதில் பெரும்பாலானவர்கள் 20 வயதுக்கும் குறைவான இளைஞர்களே .......
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை