Work in progress, that private temple lands converted into HCEB | அறநிலையத்துறை பெயரில் கோவில் நிலங்கள் மாற்றம்: தனியார் பெயரை நீக்க வருவாய்த்துறை நடவடிக்கை| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

அறநிலையத்துறை பெயரில் கோவில் நிலங்கள் மாற்றம்: தனியார் பெயரை நீக்க வருவாய்த்துறை நடவடிக்கை

Updated : மார் 18, 2013 | Added : மார் 16, 2013 | கருத்துகள் (5)
Advertisement
Work in progress, that private temple lands converted into HCEB

தமிழகம் முழுவதும், தனியார் கட்டுப்பாட்டில் உள்ள கோவில் நிலங்களை மீட்டு, அறநிலையத் துறை பெயருக்கு பட்டா மாற்றும் பணியில், வருவாய்த் துறையினர் ஈடுபட்டு உள்ளனர்.
தமிழகத்தில் அறநிலையத்துறை கட்டுப்பாட்டில், 36 ஆயிரத்து 451 கோவில்கள் உள்ளன. அறநிலையத் துறையின் கீழ், ஒரு லட்சத்து 83 ஆயிரத்து 669 ஏக்கர் ஈர நிலமாகவும், இரண்டு லட்சத்து 18 ஆயிரத்து 226 ஏக்கர் வறண்ட நிலமாகவும், 20 ஆயிரத்து 746 ஏக்கர் மானாவாரி நிலமாகவும், 36 ஆயிரத்து 627 ஏக்கர் காலியிடம், 22 ஆயிரத்து 599 கட்டடம் ஆகியவை உள்ளன. கோவில் நிலங்களை, தனியாருக்கு வாடகைக்கு விடுவதன் மூலம், அரசுக்கு கணிசமான வருவாய் கிடைக்கிறது. அரசியல் பிரமுகர்கள், செல்வந்தர்களால், கோவில் நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டும், வாடகை தராமல் ஏமாற்றியதாலும், அரசுக்கு பல கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டது. தமிழகத்தில், அ.தி.மு.க., ஆட்சியமைத்ததும், கோவில் நிலங்களை ஆக்கிரமித்தோர் மீது நடவடிக்கை பாய்ந்தது. இது தொடர்பாக, 11 ஆயிரத்து 644 வழக்குகள் நிலுவையில் உள்ளன. அறநிலையத் துறைக்கு சொந்தமாக, தனியார் பெயரில் உள்ள அனைத்து கோவில் நிலங்களையும், அறநிலையத் துறை பெயரில் மாற்ற அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
இதுகுறித்து அறநிலையத் துறை அதிகாரிகள் கூறியதாவது: கோவில்களில் பணியாற்றும் குருக்கள், ஊழியர்கள் ஆகியோருக்கு விவசாயம் பார்த்து பிழைப்பு நடத்த, ஆங்கிலேயர் காலத்தில், கோவில் நிலம் வழங்கப்பட்டது. பல ஆண்டாக, கோவில் நிலத்தை பயன்படுத்தியதால், பட்டாவில், குறிப்பிட்ட கோவிலின் பெயரோடு, குருக்கள்மற்றும் கோவில் ஊழியர்களின் பெயரும் சேர்ந்தது. கோவில் நிலத்தை, பலரும் ஆக்கிரமிக்கும் நிலை உருவானதால், அனைத்து கோவில் நிலத்தையும், அறநிலையத் துறை பெயருக்கு மாற்ற, வருவாய்த் துறைக்கு அரசு உத்தரவிட்டது. அதன்படி, மாநிலம் முழுவதும் அனைத்து கோவில்களின், பட்டாவையும் வருவாய்த் துறையினர் ஆய்வு செய்து வருகின்றனர். ஈரோடு மாவட்டத்தில், ஒரு மாதத்தில், ஒன்பது கோவில்களுக்கு சொந்தமான, 182 ஏக்கர் நிலம், அறநிலையத் துறை பெயருக்கு மாற்றப்பட்டது. இதே போல், தமிழகம் முழுவதும் பணி நடந்து வருகிறது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
- நமது நிருபர் -

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
கோமனத்தாண்டி - கோயமுத்தூரு,இந்தியா
17-மார்-201317:25:16 IST Report Abuse
கோமனத்தாண்டி ஈரோடு மாவட்டம் , சத்தியமங்கலம் தாலூக்கா ,, புஞ்சை புளியம் பட்டி ,,, அருள் மிகு முத்து பிள்ளையார் மற்றும் காமாட்சி அம்மை கோவில் பக்கம் சிறிது வாருங்கள், நடக்கிற அக்கிரமம் அரசு என்ன ஆண்டவன் தலை கூட சுற்றும் அளவுக்கு விதி மீறல் , ஆக்கிரமிப்பு , இதில் கணிக்க படவேண்டியது என்ன என்றால் ,, காலாவதி ஆகி போன தர்மகர்த்தாக்கள் மற்றும் அற நிலையத்துறை அதிகாரிகள் கூட்டணி அருமையாக சதி வேலை செய்கிறது, ,, அம்மா நினைத்தால் கூட இந்த தர்மகர்தக்களை ஒன்னும் செய்ய முடியாது, நெருப்பு இல்லாமல் புகை வராது ,, கொஞ்சம் யாரச்சும் வாங்க ,,, உங்களுக்கு புண்ணியமா போகட்டும், தடி எடுத்தவன் தண்டல் காரன், போறவன் வர போக்கத்தவன் எல்லாம் பண்ணும் திருட்டு மொள்ள மாரித்தனம், ஒண்ட வந்த பிடாறி ஊர் பிடாறிய ஓட ஓட விரட்டிய கதை எல்லாம் உண்டு, விசாரணை கமிசியன் கூட காசை வாங்கிட்டு ஓடி போய்விட்டது, ஒட்டு மொத்த சுரண்டல் மன்னர்கள் எல்லாம் கூடாரம் வைத்து கொள்ளை அடிகிறார்கள், அரசு இயந்திரம் வேடிக்கை பார்கிறது ,
Rate this:
Share this comment
Cancel
NS நாயுடு - சீர் கெட்ட சென்னை,இந்தியா
17-மார்-201310:45:32 IST Report Abuse
NS நாயுடு அறநிலையத்துறை பெயரில் கோவில் நிலங்கள் மாற்றம் என்பது ஒரு மாபெரும் கொள்ளை முயற்சிக்கு வழிவகுக்கும்.. இந்தியாவில், தமிழகதில் உள்ள அனைத்து சட்டங்களும் கோவிலில் உள்ள கடவுளை ஒரு 'Entity' யாக அங்கீகரிகிறது. அதாவது அந்த கோவிலில் உள்ள கடவுளர்களின் பெயரிலேயே சொத்துக்கள், வங்கி கணக்குகள் உருவாக்குதல் & பராமரித்தல், நீதிமன்ற நடவடிக்கைகள் மற்றும் அனைத்து சட்டபூர்வமான நடவடிக்கைகளும் செய்ய முடியும். ஒவ்வொரு கோவிலும் அது சார்ந்த பிற சொத்துக்களுக்கும் அந்தந்த கடவுளர்களே சட்டப்படியான முதலாளிகள். அதை பராமரிக்க மட்டும் அதிகாரம் பெற்றவர்களாக தர்மகர்த்தாக்கள், சில இடங்களில் சிறப்பு அதிகாரியோ அறநிலையத்துறை ஆணையாளரோ விளங்கினர்(ஒரு கம்பெனி மேனஜர் போல). பல பரம்பரை தர்மகர்த்தாக்கள் அந்த கோவிலை நிர்மானித்த/பராமரித்த/பக்திமான்கள் மேலும் பல்வேறு கைங்கர்யங்கள் செய்து கொண்டிருப்பவர்கள். ஒவ்வொரு கோவிலுக்கும் தனிப்பட்ட வழிபாட்டு முறை, நித்திய கடமைகள், பராமரிக்க வேண்டிய கடமைகள், செலவுகள், வரவுகள் வேறுபடும். இது மதம், ஆன்மீகம் சம்பந்தப் பட்டது. அறநிலையத்துறை என்பது இன்றைய தமிழக அரசின் ஒரு அங்கம். இதில் யாரும் வேலைக்கு சேரலாம்... ஆன்மீகம், கலாச்சாரம், பக்தி, கடவுள் நம்பிக்கை எதுவும் தேவையில்லை. பிற மதத்தினரும், ஏன் கடவுள் மறுப்பாளர் கூட அதிகாரிகளாகலாம். கோவில் சொத்துக்களை அரசு சொத்தான பின் அதை எவ்வித பயன்பட்டுக்கும் கொடுக்கலாம், மததிற்கு விரோதமான, கடவுள் நம்பிக்கைக்கு எதிரான எதை வேண்டுமானாலும் செய்ய முடியும். கோவில் சொத்துக்குகளை அரசு சொத்தாக்குவது மிக மிக தவறான முன்னுதாரணம். இது தடுக்கப் படவேண்டும்.
Rate this:
Share this comment
Cancel
K.Sugavanam - Sengkang,சிங்கப்பூர்
17-மார்-201309:22:07 IST Report Abuse
K.Sugavanam அதிகாரிகளின் துணையோடு பிரமுகர்கள் ஆட்டய போடுவதை தடுக்க உரிய சட்டம் இயற்ற வேண்டும்.இந்த நிலங்கள் பட்டா மாற்றமோ,பெயர் மாற்றமோ செய்ய முடியாதபடியும்,விற்பனை அல்லது பரிமாற்றம் செய்யப்படமுடியாமலும் இருக்கும்படி சட்டம் இருக்க வேண்டும்.இப்போது ASI கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களை சுற்றி 300மீட்டருக்கு எந்த மாற்றமும் செய்ய முடியாது.இந்த நிலங்களை வேறு பெயருக்கு ரிஜிஸ்ட்ரேஷன் செய்ய முடியாத வண்ணம் சட்டம் திருத்தப்பட்டாலோழிய காபபாற்றுவதற்கு மிகுந்த பிரயத்தனம் வேண்டும்..
Rate this:
Share this comment
Cancel
naagai jagathratchagan - mayiladuthurai ,இந்தியா
17-மார்-201306:51:04 IST Report Abuse
naagai jagathratchagan சபாஷ் இதுதான் சரி ....அப்போதான் நமக்கு வேண்டப்பட்டவருக்கு ...தானம் செய்ததை கண்டு பிடிக்கலாம் ..கோயில் நிலத்தை வைத்து சாப்பிட்டுக்கிட்டு கோயிலுக்கும் கட்டணம் செலுத்தாமல் ஏமாற்றும் முதலைகளை தண்டிக்கவேண்டும் ...இம்மாதிரியான வழக்குகளில் மேல் முறையீடு என்ற பேச்சுக்கே இடமில்லாமல் தீர்ப்பு எழுதப்படவேண்டும் அறநிலையத்துறை பெயரில் பட்டாவை மாற்றி மட்டும் பயன் இல்லை ..நிலத்தை யார் வைத்திருக்கிறார்களோ அவர்களிடமிருந்து நிலுவைத்தொகையை பெறவேண்டும் அல்லது அவர்களிடமிருந்து நிலத்தை பெறவேண்டும் .....இதில் கட்சி வித்தியாசம் பார்க்ககூடாது ...இதில் நிலுவை வழக்குகள் சேரக்கூடாது ..உடனுக்குடன் வழக்குகள் முடிவுக்கு வரவேண்டும் ...தாமதப் பாடுத்தும் எல்லாம் சங்கடத்தில் தான் முடியும்
Rate this:
Share this comment
Cancel
g.s,rajan - chennai ,இந்தியா
17-மார்-201306:29:46 IST Report Abuse
g.s,rajan அப்படியே இந்த கட்சி பாரபட்சம் இல்லாம எல்லா நிலத்தையும் கைப்பற்றுங்க அதற்கு அந்த கடவுள் தான் அருள் புரியணும்,அவரோட நிலத்துக்குக்கு கூட அவரே தான் அனுக்ரஹமும் செய்யணும் போல இருக்கு அட ஆண்டவா ஜி.எஸ்.ராஜன் சென்னை .
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை