பிளஸ் 2 தேர்வுகள், இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில், பொறியியல் சேர்க்கைக்கான ஏற்பாடுகளைச் செய்வதில், கல்லூரிகள் மும்முரமாக ஈடுபட்டுள்ளன.
வரவேற்பு: கல்லூரியின் உள்கட்டமைப்பு வசதிகள், தரமான ஆசிரியர்கள், முழுமையான ஆய்வக வசதிகள், இவற்றுடன், வேலைவாய்ப்பு வசதிகள் ஆகியவற்றின் அடிப்படையில், தரமான கல்லூரிகளுக்கு, மாணவர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கிறது. சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய, மூன்று மாவட்டங்களில் மட்டும், 150 கல்லூரிகள் உள்ளன. இந்த கல்லூரிகள் தான், அதிக மாணவ, மாணவியரை இழுப்பதாக இருக்கின்றன. ஒரே நிர்வாகத்தினர், பல கல்லூரிகளை நடத்துகின்றனர். பொது கலந்தாய்வு துவங்கியதும், முதலில், அண்ணா பல்கலை மற்றும் அதன் உறுப்பு கல்லூரிகளில் உள்ள இடங்கள், இரண்டு நாட்களில் மள மளவென நிரம்பிவிடுகின்றன. அதன்பின், முன்னணி கல்லூரிகள் மீது, மாணவர்கள் கண் திரும்புகிறது. அதிக தேர்ச்சி சதவீதம், நான்காம் ஆண்டு படிக்கும்போதே, வேலை வாய்ப்பு உத்தர வாதம் ஆகியவற்றை தருகின்ற கல்லூரிகளில் சேர, மாணவர்கள் போட்டி போடுகின்றனர். இதுபோன்ற கல்லூரிகளில், பணியாற்றும் ஆசிரியர்கள், யு.ஜி.சி., விதிப்படி தகுதியான ஆசிரியர்கள் நியமிக்கப்படுகின்றனர். அவர்களுக்கு, யு.ஜி.சி., நிர்ணயித்துள்ளபடி, சம்பளம் வழங்கப்படுகின்றன.
கலந்தாய்வு ஒதுக்கீட்டின் கீழ் சேரும் மாணவர்களுக்கு, 40 ஆயிரம் ரூபாயும், நிர்வாக ஒதுக்கீட்டின் கீழ் சேரும் மாணவர்களுக்கு, 70 ஆயிரம் ரூபாயும், கல்விக் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எனினும், இதர கட்டணங்கள் எல்லாம் சேர்த்து, கலந்தாய்வு ஒதுக்கீட்டின் கீழ், தனியார் கல்லூரிகளில் சேரும் மாணவர்களிடம், 1 லட்சம் ரூபாய் முதல், 1.25 லட்சம் ரூபாய் வரை, வசூலிக்கப்படுகின்றன. பிளஸ் 2 பொதுத்தேர்வுகள், தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளதால், பொறியியல் கல்லூரிகளில், சேர்க்கைக்கான ஏற்பாடுகள், மும்முரமாக நடந்து வருகின்றன. கடந்த ஆண்டு, மெக்கானிக்கல், இ.சி.இ.,-கம்ப்யூட்டர் சயின்ஸ் ஆகிய பாடப்பிரிவுகளை, அதிகமான மாணவர்கள், தேர்வு செய்தனர். இந்த ஆண்டும், மெக்கானிக்கல், இ.சி.இ., பாடப் பிரிவுகளுக்கே, மாணவர்கள் முன்னுரிமை தருவர் என, எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையே, முன்னணி தனியார் பொறியியல் கல்லூரிகளில், முக்கிய பாடப் பிரிவுகளுக்கான, "ரேட்'டை, கணிசமாக உயர்த்த திட்டமிட்டுள்ளதாக, அண்ணா பல்கலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
டிமாண்ட்: கடந்த ஆண்டு, மெக்கானிக்கல், "சீட்', 8 லட்சம் ரூபாய் வரை, விலை போனது. இ.சி.இ., 7 லட்சம் ரூபாய் வரையும், நன்கொடையாக பெறப்பட்டது. இந்த ஆண்டு, மெக்கானிக்கல் சீட், 10 லட்சம் ரூபாய் வரை, விலை போகலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது. இ.சி.இ., சீட், 8 லட்சம் ரூபாய் வரை போகும் எனவும் கூறப்படுகிறது. இதுகுறித்து, அண்ணா பல்கலை வட்டாரங்கள் கூறுகையில், ""கடந்த ஆண்டு, முன்னணி கல்லூரிகளில், 5 லட்சம் ரூபாய் முதல், 8 லட்சம் ரூபாய் வரை, சேர்க்கைக்கு பெற்றனர். இந்த ஆண்டு, இந்த தொகை மேலும் உயரலாம். குறிப்பாக, சிறந்த உள்கட்டமைப்பு வசதிகள், பெரிய நிறுவனங்களில், வேலை வாய்ப்பு வசதிகள் ஆகியவை கிடைக்கும் கல்லூரிகளில், "டிமாண்ட்' அதிகமாகவே இருக்கும்' என, தெரிவித்தன.
தர அடிப்படையில் முன்னணியில் உள்ள கல்லூரிகள்: கடந்த ஆண்டு, சென்னை அண்ணா பல்கலை கட்டுப்பாட்டுக்குள் இயங்கிய பொறியியல் கல்லூரிகளில், இறுதி செமஸ்டர் தேர்வு முடிவு அடிப்படையில், கல்லூரிகளின் தர பட்டியலை, பல்கலை வெளியிட்டது. அதில், எஸ்.எஸ்.என்., கல்லூரி, முதலிடத்தை பிடித்துள்ளது. மீனாட்சி சுந்தர ராஜன் கல்லூரி, இதயா பெண்கள் பொறியியல் கல்லூரி, ஆர்.எம்.கே., கல்லூரி, ஈஸ்வரி கல்லூரி, கிங்ஸ்டன், வேலம்மாள், பல்கலை பொறியியல் கல்லூரி-விழுப்புரம். சாய்ராம் கல்லூரி, ஆர்.எம்.கே., கல்லூரி, ஆர்.எம்.டி., கல்லூரி மற்றும் அக்னி தொழில்நுட்பக் கல்லூரி உள்ளிட்ட கல்லூரிகள், முதல், 20 இடங்களில் இடம்பெற்று உள்ளன.
- நமது நிருபர் -
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
ஐயாக்களே ஏன் எல்லாரும் பொறியியல் கல்லூரிகளை திட்டுகிறீர்கள். சுயநிதி கல்லூரிகளினால்தான் கடந்த இருபது வருடங்களில் லட்சக்கணக்கான பொறியாளர்கள் உருவாஹி மென்பொருள் விற்பன்னர்களாக தொழிலதிபர்களாக நம் நாட்டிற்கு அந்நிய செலாவணியை சம்பாதித்து கொடுத்துகொண்டிருக்கிரார்கள் .இது நிதர்சனமான உண்மை. சுயநிதி கல்லூரிகளில் இருக்கும் கல்வி ஒழுக்கம், உபகரணங்கள், பிற வசதிகள் அரசு கல்லூரிகளில் உள்ளனவா என்று நீங்களே சென்று பார்த்து தெரிந்து கொள்ளலாம். இங்கு சொல்வது தரநிர்ணயம் பெற்ற சுமார் 100 கல்லூரிகளை பற்றிதான். தனியார் மயமாகப்பட்டால் எந்த துறையும் முன்னேறுமே தவிர தரம் தாழாது. தரம் பார்த்து படிப்பது மாணவர்,பெற்றோர் கடமை. அரசு மலான்மை திறனுடன் முதலீடு செய்து நடத்த தயாராக இருந்தால் சரி. அரசுதான் திட்ட முதலீட்டில் கல்விக்கே ஒதுக்க மாட்டேன் என்று முடிவேடுதுள்ளதே. சுயநிதி கல்லூரிகளை மூடினால் பீகார் , வங்காளம் போல் வெளி மாநிலதிற்குதான் செல்ல வேண்டும். மற்றபடி வேலை கிடைப்பது மாணவனின் திறமை . சுமார் 75% மதிப்பெண்கள் பெற்று normal communication திறமை உள்ள எவரும் placementil செலக்ட் செய்யப்பட்டு விடுகிறார்கள். இந்த காலத்தில் ப்லாசெமேன்ட்டில் வேலை என்பது, அர்ரியர்ஸ் இல்லாமல் முடிப்பது, மற்ற IT சார்ந்த படிப்புகளை உடன் படிப்பது, எம்ப்லோய்மென்ட் மார்க்கெட்டை வாட்ச் செய்து கொண்டேயிருப்பது போன்ற எல்லாவற்றையும் பொறுத்தது.. மற்றபடி நிர்வாகத்தின் தொடர்பு இதில் இல்லை. நன்றாக படிப்போம் அர்ரியர்ஸ் இல்லாமல் அதிக மதிப்பெண் எடுப்போம் கம்யுனிகேஷன் அறிவை வளர்த்து கொள்வோம் என்ற முடிவில் தீர்க்கமாக உள்ள மாணவர்கள் மட்டும் பொறியியலில் படிக்க முடிவு எடுக்க வேண்டும்..

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.