மதுரை: மதுரை ஐகோர்ட் கிளையில் நேற்று நடந்த மெகா லோக் அதாலத்தில் விபத்து நஷ்டஈடு கோரும் வழக்குகளில், ரூ.3.96 கோடி வரை இழப்பீடு வழங்க உத்தரவிடப்பட்டது.
நீதிபதி சித்ராவெங்கட்ராமன் இதை துவக்கி வைத்தார். ஓய்வு பெற்ற நீதிபதிகள் டேவிட் சிமியோன், ராமலிங்கம், மலைசுப்ரமணியன், பாலசுப்ரமணியன், சம்பத்குமார், ராமமூர்த்தி ஆகியோர் வழக்குகளை விசாரித்தனர். மனுதாரர், எதிர்மனுதாரர், இன்சூரன்ஸ் நிறுவன அதிகாரிகள், மருத்துவர்கள் பங்கேற்றனர்.
பல்வேறு அரசு போக்குவரத்து கழக மண்டலங்கள் தொடர்புடைய விபத்தில் இழப்பீடு கோரும் 741 வழக்குகள் பட்டியலிடப்பட்டன. இதில் ஒரு கிரிமினல் வழக்கு, இரு ரிட் மனுக்கள், 105 இழப்பீடு மனுக்கள் விசாரிக்கப்பட்டன. பாதிக்கப்பட்டோருக்கு ரூ.3.96 கோடி வரை இழப்பீடு வழங்க உத்தரவிடப்பட்டது.
இதற்கான ஏற்பாடுகளை பதிவாளர்கள் உதயன், தங்ககனி, சட்டபணிகள் குழு துணை பதிவாளர் சத்தியமூர்த்தி, செயலாளர் அருள் செய்திருந்தனர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.