ராமேஸ்வரம்: இலங்கை கடற்படையினரால் பிடித்துச் செல்லப்பட்ட, ராமேஸ்வரம் மீனவர்கள், 34 பேர் விடுதலை செய்யப்பட்டனர். ராமேஸ்வரத்தில் இருந்து, மார்ச், 13ல், கச்சத்தீவு அருகே மீன் பிடிக்கச் சென்ற, மீனவர்களில், 34 பேரை, இலங்கை கடற்படையினர் கைது செய்து, நெடுந்தீவு போலீசாரிடம் ஒப்படைத்தனர். எல்லை தாண்டி வந்ததாக வழக்குப் பதிந்து, யாழ்ப்பாணம் கெய்ட்ஸ் கோர்ட்டில், நேற்று முன்தினம் ஆஜர்படுத்தப்பட்டனர். இவர்களை எச்சரித்து விடுவித்த கோர்ட், இந்தியாவிற்கு திருப்பி அனுப்ப உத்தரவிட்டது. நேற்று, 34 மீனவர்களை அழைத்து வந்த, இலங்கை கடற்படையினர், மாலை, 4:30 மணிக்கு, இந்திய கடல் எல்லையில் கடலோர காவல்படையிடம் ஒப்படைத்தனர்.
இவர்கள், இரவில் ராமேஸ்வரம் வந்து சேர்ந்தனர். "அதே தினத்தில், கைது செய்யப்பட்ட, 19 மீனவர்களும், ஓரிரு நாட்களில் விடுதலை செய்யப்படலாம்' என, ராமேஸ்வரம் மீனவர் சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.