புதுடில்லி:அண்டார்டிக்
பகுதியில், இந்திய தேசியக் கொடியை பறக்க விட்டு, சண்டிகரைச் சேர்ந்த சோனல்
உன்சந்த், கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளார் .உலகம் வெப்பமயமாதலின் காரணமாக,
"பனிக் கண்டம்' என்றழைக்கப்படும், அண்டார்டிக் பகுதிகளில் உள்ள
பனிப்பாறைகள், உருகத் துவங்கியுள்ளன. இதனால், கடல் மட்டம் அதிகரிக்கும்
அபாயம் ஏற்பட்டுள்ளது. இதை தடுக்கவும், அண்டார்டிக் பனிக் கண்டத்தை
பாதுகாக்கவும், மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில்,
பிரிட்டனைச் சேர்ந்த "ராபர்ட் ஸ்வான்' தலைமையில் ஒரு குழுவினர், உலக
சுற்றுப்பயணம் மேற்கொண்டு உள்ளனர்.
இந்த பயணத்திற்கு, "ஐ.ஏ.இ.2041' என,
பெயரிடப் பட்டுள்ளது. அதன் படி, தற்போது இந்த குழுவினர், அண்டார்டிக்
கண்டத்தை அடைந்துள்ளனர்.கடந்த, 2003ம் ஆண்டு பயணத்தை துவங்கிய இவர்கள்,
பயணத்தின் 10ம் ஆண்டு நிறைவு விழா கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.இதன் ஒரு
பகுதியாக, இக்குழுவில் இடம் பெற்றுள்ள, இந்தியாவைச் சேர்ந்த "சோனல்
உன்சந்த்' நமது தேசியக் கொடியை அண்டார்டிக் கண்டத்தில் பறக்கவிட்டு,
நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ளார். சண்டிகரைச் சேர்ந்த சோனல், கடந்த,
2003ம் ஆண்டு முதல், இக்குழுவுடன் இணைந்து, உலகின் பல பகுதிகளுக்கும்
சென்றுள்ளார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.