Advertisement
சமையல் காஸ் முறைகேடுகளை தடுக்க கிடுக்கிப்பிடி : ஏப்ரல் முதல் அமல்படுத்த எண்ணெய் நிறுவனங்கள் திட்டம்
Advertisement
 
 
Advertisement
 
 
 
எழுத்தின் அளவு:
Bookmark and Share  
ஆல்பம்
பதிவு செய்த நாள் : மார்ச் 17,2013,00:15 IST

முறைகேடுகளை தடுக்க, புதிய காஸ் இணைப்புக்கான விண்ணப்பம், அதற்கான சான்றுகளை, தலைமை அலுவலகம் மூலம் ஆய்வு செய்த பின்பே, அனுமதி வழங்க, எண்ணெய் நிறுவனங்கள் முடிவு செய்துள்ளன. ஏப்ரல் முதல், இந்த புதிய முறையை நடைமுறைப்படுத்த, எண்ணெய் நிறுவனங்கள் திட்டமிட்டு உள்ளன.இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன், இந்துஸ்தான் பெட்ரோலியம், பாரத் பெட்ரோலியம் ஆகிய பொதுத்துறை நிறுவனங்கள், நாடு முழுவதும், வீட்டு உபயோக மற்றும் கமர்ஷியல் காஸ் சிலிண்டர்கள் மற்றும் பெட்ரோல், டீசல் வினியோகத்தில் ஈடுபட்டுள்ளன. புதிய காஸ் இணைப்புக்காக விண்ணப்பிக்கும் வாடிக்கையாளர்கள், ரேஷன் கார்டு நகல், வாக்காளர் அட்டை மற்றும் காஸ் இணைப்பு இதுவரை பெறவில்லை என்பதற்கான சான்றுகளை இணைத்து, அருகிலுள்ள காஸ் ஏஜென்சிகளுக்கு வழங்கினர். விண்ணப்பங்களை, சம்பந்தப்பட்ட காஸ் ஏஜென்சிகளே ஆய்வு செய்து, வாடிக்கையாளர்களுக்கு புது இணைப்பு வழங்கியது.இதை, தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி, ஏற்கனவே காஸ் இணைப்பு வைத்துள்ள பலர், போலியான ஆதாரங்களை கொடுத்து, புதிய காஸ் இணைப்பு வாங்கி, முறைகேடு செய்வது தெரியவந்தது.இதை தடுக்க, ஆயில் நிறுவனங்கள் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளன. அதன்படி, புதிதாக காஸ் இணைப்பு கேட்டு வரும் விண்ணப்பம், அதற்கான சான்றுகளை, சம்பந்தபட்ட ஏஜென்சிகள் பெற்று, "இ-மெயில்' மூலம் மும்பையில் உள்ள எண்ணெய் நிறுவன தலைமை அலுவலகத்துக்கு அனுப்ப வேண்டும்.

தலைமை அலுவலகம், விண்ணப்பதாரரின் சான்றிதழ்களை ஆய்வு செய்து, தகுதியானது என்றால் மட்டுமே, புது இணைப்புக்கு அனுமதி வழங்கும். வரும் ஏப்ரல் முதல், தமிழகத்தில் இந்த புதிய முறையை, எண்ணெய் நிறுவனங்கள் நடைமுறைப்படுத்த உள்ளன.காஸ் ஏஜென்சி உரிமையாளர் ஒருவர் கூறியதாவது:இந்த புதிய முறை, புதுச்சேரியில் நடைமுறைக்கு வந்துள்ள நிலையில், வரும், ஏப்ரல் முதல், தமிழகத்திலும் வர உள்ளது. ஏப்ரல் முதல், பழைய வாடிக்கையாளர்கள் தங்கள் முகவரி, பாஸ்புக்கில் பெயர் திருத்தம் செய்ய வேண்டுமானால் கூட, சான்றுகளை தலைமையகத்துக்கு அனுப்பியே மாற்றம் செய்ய வேண்டும்.தற்போது, வேறு ஊருக்கு வாடிக்கையாளர் மாறி சென்றால், அங்கு பாஸ்புக் எண் மாற்றம் செய்யப்படும். ஏப்ரல் முதல், இந்தியாவில் எங்கு சென்றாலும், பாஸ்புக் எண் மாற்றப்படாமல், அதே எண்ணை பயன்படுத்தி, காஸ் சிலிண்டர் பெற்று கொள்ளலாம்.இவ்வாறு அவர் கூறினார்.


- நமது சிறப்பு நிருபர் -




வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து (1)
மாயூரம் கிருஷ்ணமூர்த்தி சங்கரன் - திருச்சிராபள்ளி,இந்தியா
17-மார்-201305:19:08 IST Report Abuse
மாயூரம் கிருஷ்ணமூர்த்தி சங்கரன் மான்ய விலையில் ஆண்டுக்கு 9 சிலிண்டர் மட்டும் என்று சொன்ன பின்பும் கூட, 24 மணி நேரத்தில் சிலிண்டர் கொடுக்க முடியவில்லை என்றால், ஒரு காலத்திலும் உங்களால் இதில் நடக்கும் அநியாயங்களை தடுக்க முடியாது.... எல்லாம் சரி, பாராளு மன்ற உறுபினர்கள் பெயரில் சிலிண்டர் கொடுகுரீர்களே.....அது எல்லாம் ஞாயமா தேச நலனுக்ககதான் பயன் படுதா?
Rate this:
0 members
0 members
7 members
Share this comment

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
( OR )Login with
New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

அன்புள்ள வாசகர்களே!,

நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.