கட்டாக்:பாலியல்
வழக்கில் தண்டனை பெற்ற மகன் தலைமறைவாக இருக்கவும், அவன் போலி கல்விச்
சான்றிதழ்கள் பெறவும், ஒடிசா மாநில முன்னாள் போலீஸ், டி.ஜி.பி., மொகந்தி
உதவினாரா என்பது குறித்து, கேரள போலீசார் நேற்று அவரிடம் விசாரணை
நடத்தினர்.ஒடிசா மாநில, முன்னாள் போலீஸ், டி.ஜி.பி., மொகந்தி. இவரின் மகன்,
பிட்டி மொகந்தி. ராஜஸ்தான் மாநிலம், ஆல்வாரில், 2006ல், ஜெர்மன் நாட்டு
பெண்ணை, பலாத்காரம் செய்த வழக்கில் கைதாகி, ஏழு ஆண்டு சிறைத் தண்டனை
பெற்றார்.அடுத்த எட்டு மாதங்களில், பரோலில் வெளிவந்த பிட்டி தலைமறைவானார்.
இவர், தன் பெயரை, ராகவ் ராஜன் என மாற்றி, கேரளாவில், எம்.பி.ஏ., படித்து,
பின், கண்ணூரில் உள்ள, ஸ்டேட் பாங்க் ஆப் திருவிதாங்கூரில், பயிற்சி
அதிகாரியாக பணியாற்றியது சமீபத்தில் தெரிய வந்தது; இதையடுத்து பிட்டி கைது
செய்யப்பட்டார்.
பின், பிட்டியை ராஜஸ்தான் அழைத்துச் சென்று, அங்குள்ள
அவர் தொடர்பான ஆவணங்களை, போலீசார் பரிசோதித்தனர். இதில், கைதானவர்,
பிட்டியே என்பது உறுதியானது.இந்நிலையில், பிட்டியின் தந்தையும், ஒடிசா
மாநில முன்னாள் போலீஸ் டி.ஜி.பி.,யுமான, மொகந்தியிடம் கட்டாக்கில் உள்ள
உதவி போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு வரவழைத்து விசாரித்தனர்.அப்போது,
பிட்டி கேரள மாநிலம் கண்ணூரில் தங்கியிருந்தது, மொகந்திக்கு தெரியுமா
என்பது உட்பட, பல விவரங்களை, அவரிடம் கேட்டறிந்தனர்.முன்னதாக, பிட்டி
படித்த பள்ளி மற்றும் கல்லூரிக்கு சென்ற போலீசார், அங்கும் அவர் தொடர்பான
கல்விச் சான்றிதழ்களை சரிபார்த்தனர். இதன்மூலம், ராகவ் ராஜன் என்ற பெயரில்,
வங்கிப் பணியில் சேர, பிட்டி கொடுத்தது போலி சான்றிதழே, என்பது
தெரியவந்துள்ளது.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.