போபால்:மத்திய பிரதேசத்தில், கணவருடன் சைக்கிளில் சென்ற, சுவிட்சர்லாந்து நாட்டுப் பெண், எட்டு பேர் கும்பலால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார்.சுவிட்சர்லாந்தை சேர்ந்த பெண்ணும், அவரின் கணவரும், இந்தியாவிற்கு சுற்றுலா வந்துள்ளனர். மத்திய பிரதேச மாநிலம், ஆர்ச்சாவில் உள்ள ராமர் கோவில் உட்பட, பல இடங்களை, சைக்கிளிலேயே சுற்றிப் பார்த்த இந்த தம்பதியர், ஆக்ரா நோக்கி சைக்கிளில் புறப்பட்டனர்.நேற்று முன்தினம் இரவு, அவர்கள், வழியில் உள்ள காட்டுப் பகுதியில், ஓய்வெடுத்தனர். அப்போது அங்கு வந்த எட்டு பேர் கும்பல், சுவிஸ் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ததோடு, அவர் கணவரையும் கடுமையாகத் தாக்கியது. இது தொடர்பாக, அத்தம்பதியர், போலீசில் புகார் அளித்தனர். மருத்துவ பரிசோதனையில், அவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது உறுதி செய்யப்பட்டது. இது தொடர்பாக, எட்டு பேர் கைது செய்யப்பட்டனர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.