மதுரை: லஞ்ச வழக்கில், குற்றச்சாட்டுகள் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூப்பிக்கப்படாததால், ராஜபாளையம் வருவாய் உதவியாளருக்கு, கீழ்கோர்ட் விதித்த, மூன்று ஆண்டு சிறை தண்டனையை, மதுரை ஐகோர்ட் கிளை ரத்து செய்தது. விருதுநகர் மாவட்டம், ராஜபாளையத்தைச் சேர்ந்தவர் சேதுராஜ். இவர், 2002ல், நிலத்திற்கு பட்டா கோரி மனு செய்தார். வருவாய் உதவியாளர் வெங்கடேசன், லஞ்சம் கேட்டதாக, லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு, சேதுராஜ் தகவல் கொடுத்தார். 300 ரூபாய் லஞ்சம் பெற்றதாக, வெங்கடேசனை போலீசார் கைது செய்தனர். தலைமை மாஜிஸ்திரேட் கோர்ட், அவருக்கு மூன்று ஆண்டு சிறை தண்டனை, 2,000 ரூபாய் அபராதம் விதித்து, 2009 அக்., 22 ல், உத்தரவிட்டது. இதை எதிர்த்து, மதுரை ஐகோர்ட் கிளையில், வெங்கடேசன் மேல்முறையீடு செய்தார். நீதிபதி, அருணாஜெகதீசன் முன், மனு விசாரணைக்கு வந்தது. மனுதாரர் வக்கீல் ரவிசங்கர், ""மனுதாரர் மீது, தாமதமாக புகார் செய்யப்பட்டு உள்ளது; அதற்கு தகுந்த காரணங்கள் இல்லை. வழக்கு தொடர அனுமதி பெற்றதற்கான ஆவணங்கள் தாக்கல் செய்யப்படவில்லை,'' என்றார். நீதிபதி, "மனுதாரர் மீதான குற்றச்சாட்டுகள் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்படவில்லை. கீழ்கோர்ட் தீர்ப்பு ரத்து செய்யப்படுகிறது. சந்தேகத்தின் பலனை சாதகமாக்கி, மனுதாரரை விடுதலை செய்ய உத்தரவிடப்படுகிறது' என்றார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.