பதிவு செய்த நாள் :
கருத்துகள் (18)  கருத்தை பதிவு செய்ய
எழுத்தின் அளவு:

"பல, பெரிய தனியார் பள்ளிகள், மறைமுகமாக, குண்டர் படையை வைத்திருக்கின்றன. இது போன்ற பள்ளிகளில், கடும் கண்காணிப்பை மேற்கொண்டால், தேர்வுக்குப் பின், சம்பந்தபட்ட அதிகாரிகளை தாக்குவர். இது போன்ற சம்பவங்கள் ஏற்கனவே நடந்திருக்கின்றன' என, கல்வித் துறை அதிகாரி ஒருவர், அதிர்ச்சி தகவலை தெரிவித்தார்.
தனியார் பள்ளிகளுக்கு மத்தியில், கடுமையான போட்டி இருந்து வருகிறது. மாநிலம் முழுவதும், பெரிய பள்ளிகள் வரிசையில், 100 பள்ளிகள் வரை இடம் பெற்றிருப்பதாகக் கூறப்படுகிறது. இப்பள்ளிகளுக்கிடையே, அதிக மாணவர்களை இழுப்பதில், கடும் போட்டி நிலவுகிறது. இது போன்ற பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவியர், பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண்களை குவிக்கின்றனர். இதனால், பொறியியல், மருத்துவம் போன்ற தொழிற்கல்வி படிப்புகளில், அரசு ஒதுக்கீட்டின் கீழ், "சீட்' கிடைத்து விடுகிறது. இந்த விளம்பரத்தை வைத்தே, பெரிய பள்ளிகள், மாணவ, மாணவியரை இழுக்கின்றன.

நாமக்கல், கிருஷ்ணகிரி உள்ளிட்ட சில குறிப்பிட்ட மாவட்டங்களில் உள்ள, முன்னணி தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களே, பொறியியல், மருத்துவப் படிப்புகளில் இடம் பிடிப்பதால், இது போன்ற பள்ளிகளில், பிள்ளைகளைச் சேர்க்க, பெற்றோர் முட்டி மோதுகின்றனர். பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கு, விடுதி, உணவு வசதி உள்ளிட்ட அனைத்தும் சேர்த்து, ஆண்டுக்கு, 2 லட்சம் ரூபாய் வரை, மேற்கண்ட தனியார் பள்ளிகள், கட்டணம்

வசூலிக்கின்றன. பொதுத் தேர்வில், முக்கிய பாடங்களில், 200க்கு 200 பெற வேண்டும் என்பதில், தனியார் பள்ளிகள் தீவிரம் காட்டுகின்றன. இதனால், பள்ளிகளுக்கிடையே, பலத்த போட்டி எழுந்துள்ளது. இதற்கு முட்டுக்கட்டையாக யாராவது நின்றால், அவர்களை, "சரி கட்டும்' வேலைகளும், ஜரூராக நடப்பதாக, கல்வித் துறையில் கூறப்படுகிறது. நிர்வாகத்துடன் ஒத்துழைப்பு தராத பறக்கும் படை அதிகாரிகளை, தேர்வுக்குப் பின், அடியாட்கள் கும்பலை வைத்து, தாக்கும் சம்பவங்களும் நடக்கின்றன என, கல்வித் துறை அதிகாரி ஒருவர், அதிர்ச்சியுடன் கூறினார்.

அவர் மேலும் கூறியதாவது: தனியார்

பள்ளிகளுக்கிடையே, கடுமையான போட்டி நிலவுகிறது. தேர்வில், மாணவர்கள் மதிப்பெண் களை குவிக்க வேண்டும் என்பது மட்டுமே, நிர்வாகத்தினரின் நோக்கமாக உள்ளது. இதற்காக, எந்த நிலைக்கும் செல்கின்றனர். நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ஒரு பள்ளியில் படித்த எனக்கு தெரிந்த நண்பரின் மகனை, சரியாக படிக்கவில்லை எனக் கூறி, கடுமையாக தாக்கியதில், அவனது கால்கள் முறிந்தன. பறக்கும் படை அதிகாரிகள், பெரிய தனியார் பள்ளி களில், கடுமையான கண்காணிப்பை மேற்கொண்டால், தேர்வுக்குப் பின், தாக்குதல் நடத்துகிற சம்பவங்களும் நடக்கின்றன. சில ஆண்டுகளுக்கு முன், திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் தேர்வு மையத்தில், கண்காணிப்பை தீவிரப்படுத்திய ஒரு ஆசிரியரை, ஒரு கும்பல் கடுமையாக தாக்கியது. சில தனியார்

Advertisement

பள்ளிகள், மறைமுகமாக குண்டர் படைகளை வைத்திருப்பதாகக் கூறப்படுகிறது. இவை எல்லாம், வெளியில் தெரியாது. பல பள்ளிகளை, அரசியல்வாதிகளோ அல்லது அவர்களது பினாமிகளோ தான் நடத்துகின்றனர். இதுபோன்ற பள்ளிகளில், கண்காணிப்பை தீவிரப்படுத்தினால், அதிகாரிகள் நிலைமை என்ன ஆகும் என்பதற்கும், பல சம்பவங்கள் முன்னுதாரணமாக இருக்கின்றன.

முன்னாள் மந்திரி ஒருவர், பல கல்வி நிறுவனங்களை நடத்துகிறார். அவர் நடத்தும், ஒரு மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில், ஆண்டுதோறும், "காப்பி' நடக்கிறது என்று வந்த தகவலை அடுத்து, நேர்மைக்கு பெயர் பெற்ற ஒரு உயர் அதிகாரியின் மேற்பார்வையில், சிறப்பு பறக்கும் படை குழு, சம்பந்தபட்ட பள்ளியில், தீவிர கண்காணிப்பை மேற்கொண்டது. இதன் காரணமாக, பிளஸ் 2 கணிதப் பாடத்தில், அந்த பள்ளியைச் சேர்ந்த, 100க்கும் மேற்பட்ட மாணவர்கள், தோல்வி அடைந்தனர். இதனால், பறக்கும் படை குழுவில் இடம் பெற்ற ஆசிரியர்கள் பலரும், தென் மாவட்டங்களுக்கு தூக்கி அடிக்கப்பட்டனர். குழுவிற்கு தலைமை ஏற்ற, அந்த அதிகாரிக்கு, ஓய்வு பெறும் வரை, நல்ல பதவி கிடைக்கவே இல்லை. இது போன்ற நிலைமையில், உயிரை கையில் பிடித்துக் கொண்டு தான், தேர்வை கண்காணிக்க வேண்டியுள்ளது. இவ்வாறு, அந்த அதிகாரி, வேதனையுடன் தெரிவித்தார்.

- நமது நிருபர் -
Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (18)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Selvam Kannan - Maduravoyal,இந்தியா
23-மார்-201306:10:51 IST Report Abuse
Selvam Kannan என் நண்பர் சொன்ன தகவல் இதுதான், தனியார் பள்ளிகளில் additional sheet அளவுக்கு அதிகமா வாங்கி அதை முன்னாடியே மாணவர்களுக்கு தந்து முக்கியமான கேள்விகளுக்கு விடைகளை எழுதி வர வைக்கிறார்கள் ஆசிரியர்கள்
Rate this:
Share this comment
Cancel
Skv - Bangalore,இந்தியா
19-மார்-201303:12:28 IST Report Abuse
Skv கல்வி தமிழ் நாட்டில் பெரிய வியாபாரமா த்தான் நடக்குது பல காலங்களா என்பது மறுக்கவே முடியாத உண்மை .மார்க் மட்டுமே குறி ன்ன தும் எனக்கு சில விஷயங்கள் நியாபகம் வரது . ஒருகச்சிக்காரன் மந்திரி ஆனால் முதலில் செய்யும் பிராடு கல்விச்தாபனம் நிறுவி முதல் கொல்லைய துவங்கிறான் .இதைப்போல ஏராளமான பணம்பிடுங்கும் கல்வி நிறுவனம் தமிழ் நாட்டில் ஏராளம் படிப்பறிவே இல்லாத கூமுட்டை களே அதிகம் நிறுவி யுள்ள pallikkuutam எவ்ளோ படிப்பே எராதவாகூட இதுலே பணபலத்துலே சேர்ந்து படிக்கறதா பேரு செஞ்சு வருங்கால குண்டாச்களா மாறுகிறார்கள் இந்த கொடுமைகள் ஒழியனும்னா 10 அண்ட் 12ம் வகுப்பு தேர்வுகள் காமன் ஹால்களில் நடத்தப்படனும் .மாணவர்களை அன்புடன் நடத்தனும் பெத்தவங்களே உங்க பிள்ளைகளை நம்புங்க கவர்ன்மெண்ட் லே படிச்சாலும் பிள்ளை ஒழுங்கா சின்சியரா படிச்சால் போரும் நல்ல மதிப்பெண் வாங்கி ஜெயிப்பான் ஸ்ட்ரிக்ட் என்ற பெயரில் நடக்கும் பள்ளிகளை நாடாதீங்க்க . அன்புடன் நடப்பது ப்ரெண்ட்லிய மானவமநிகளை நடத்தும் ஆசிரியர்களே உங்க பிள்ளைகள் சிறக்க வழிகாட்டுவாங்க . பணம் பிடுங்கிகளை ஒதுக்குங்க
Rate this:
Share this comment
Cancel
mvv - Kandahar,ஆப்கானிஸ்தான்
18-மார்-201300:04:06 IST Report Abuse
mvv இன்னும் 5-ல் இருந்து 10 வருடங்களுக்குள் 500/500, 1200/1200 வாங்கும் மாணவர்கள் பள்ளிக்கு பத்து பேராவது இருப்பார்கள். 200, 300 மாநில முதல் மாணவர்கள் இருப்பார்கள். உலகத்திலேயே கல்வியில் கரை கண்ட ஒரே மாநிலமாக தமிழ்நாடு இருக்கப் போகிறது. அதற்குள் இங்கிருந்து தப்பித்து ஓடிவிடுபவர்கள் புண்ணியசாலிகள். நீயா நானாவில் educational mafia என்ற வார்த்தைக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த திருடர் கூட்டம் இப்போது என்ன சொல்லப்போகிறது?
Rate this:
Share this comment
Cancel
Sangamithra.R - Seoul,தென் கொரியா
17-மார்-201319:13:06 IST Report Abuse
Sangamithra.R This is absolutely true. Teaching profession is a holy profession but most of the private schools are business oriented and they concentrate on only money not on the education of students. Most of the private schools, do whatever they wish by simply offering currency to any level of educational officers. This kind of attitude should be prevented by the education department to avoid spoiling students future, however it may be a difficult task to ute. I dont know how it would be possible to bring up our country as per Dr. Abdul Kalam's vision. Not only in this field....corruption and kunda's are everywhere and its much more difficult even for straight forwarded officer. The changes should come from basic level one by one. For example, we need to give job opportunities to everybody in our country and its possible if government plans seriously. The government should take care of beggers (Only physically challeneged persons) of our country by arranging some orphanizes. All childrens should be educated...many many views and ideas could be uted to improve our country step by step. Who can do this job.....???? Can you imagine Yes...we can do...each individuals should think first that its my country its my village its my city...If individual is changed thats the growth of country. Can you, the citizens of India, do it
Rate this:
Share this comment
Cancel
Karthick - Bangalore ,இந்தியா
17-மார்-201316:33:53 IST Report Abuse
Karthick திருடராய் பார்த்து திருந்தா விட்டால் திருட்டை ஒழிக்க முடியாது. பெற்றோகளையும் சேர்த்துதான்.
Rate this:
Share this comment
Cancel
vasan - doha,கத்தார்
17-மார்-201314:00:40 IST Report Abuse
vasan மக்களும் திருந்த மாட்டார்கள்.......அரசியல் வாதிகளும் திருந்த மாட்டார்கள் அதனால் தான் படித்துவிட்டு வேலை இல்லாமல் சுற்றி தெரியும் இளைஞ்சர்கள் கூடம் பெருகி வருகிறது.........சர்வதேச அளவில் நம் கல்வியின் மதிப்பு குறைகிறது......வெறும் மதிப்பெண் எடுக்கும் இயந்திரமாக மாணவர்கள் இ உருவாக்கி வருகிறோம்...............குறைந்த பட்ச சிந்தனை திறன் கூட கிடையாது......
Rate this:
Share this comment
Cancel
Shankar G - kuwait,குவைத்
17-மார்-201313:56:47 IST Report Abuse
Shankar G இதுக்கலாம் மாணவர்கள் போராட்டம் நடத்த மாட்டார்கள் ஏன்? உங்கள் படிப்புதான் உங்கள் எதிர்காலம்.இதுவும் தமிழ் நட்டு முக்கிய பிரச்சனை.
Rate this:
Share this comment
Cancel
g.s,rajan - chennai ,இந்தியா
17-மார்-201313:41:43 IST Report Abuse
g.s,rajan கல்வியை நாசமாக்கி விட்டார்கள் படு பாவிகள் ஜி.எஸ்.ராஜன் சென்னை .
Rate this:
Share this comment
Cancel
Thangamagan - ????????,இந்தியா
17-மார்-201312:22:01 IST Report Abuse
Thangamagan அனைத்து தனியார் பள்ளிகளையும் அரசுடமை ஆக்கினால் தான் இதற்க்கு விமோசனம் கிடைக்கும், அரசு இதை செய்யுமா? இல்லை செய்ய விடுவார்களா? காலம் பதில் சொல்லும் வரை காத்திர்ப்போம்
Rate this:
Share this comment
Cancel
KMP - SIVAKASI ,இந்தியா
17-மார்-201311:19:40 IST Report Abuse
KMP காமராஜர் இப்போது இருந்திருந்தால் குண்டர்கள் போன்றவர்கள் இருக்க மாட்டார்கள் ...கல்வி இன்று தனியார்மயம் மாயம் ஆனதால் தான் இந்த பிரச்சனை ???/ சுய நலமான , மனிதநேயமற்ற, பணம் ஒன்றே மட்டுமே தம் குறிக்கோளாக கொண்ட செல்வந்தர்கள் நாட்டில் பெருகிவிட்டார்கள் ....
Rate this:
Share this comment
Skv - Bangalore,இந்தியா
19-மார்-201303:14:28 IST Report Abuse
Skv காமராசர் தானே குண்டர்களை நம்பலயே பிறகுவந்த கழகங்களும் இந்திரக்குபிறகு வந்த காங்கிரெஸ் உம்மெ குண்டர்களை வளர்த்த பெருமையாளர்கள் ...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.