வாஷிங்டன்: "பறவைகள் வெளிப்படுத்தும் வெவ்வேறு வகையான ஒலிகள், மனிதர்கள் பேசும் மொழிகளை ஒத்தவை. அவற்றில் இருந்து மனித மொழி பிறந்திருக்கலாம்' என, சமீபத்திய ஆய்வு தெரிவிக்கிறது.
பரிணாமவியலின் தந்தை என, அழைக்கப்படும், சார்லஸ் டார்வின், 1871ல் எழுதிய நூலில், "பறவைகளின் பாடல்களில் இருந்து, மனிதன் பேச கற்றுக்கொண்டிருக்கலாம்' என, தெரிவித்திருந்தார். தற்போது, அமெரிக்காவை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள், அவர் கூறியது உண்மை என, ஒப்புக்கொண்டுள்ளனர். ஆதி மனிதர்கள், தங்களுக்குள் தகவல்களை பரிமாறிக்கொள்ள, சங்கேத மொழிகளை பயன்படுத்தினர். அதில், இரண்டு அடுக்குகள் இருந்தன. உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் முதல் அடுக்கில், வாக்கியத்தை மாற்றி அமைத்துக்கொள்ள தேவையான தகவல்கள் இருக்கும். மற்றொரு அடுக்கு, வாக்கியத்தின், மொத்த அர்த்தத்தையும் நிர்ணயிக்கக் கூடியது. பறவைகள், தங்களுக்குள் தகவல்களை பரிமாறிக்கொள்ள பயன்படுத்தும் பல்வேறு வகையான ஓசைகளும், இதே தன்மை கொண்டிருப்பதை, அமெரிக்காவின் மசாசூசெட்ஸ் தொழில்நுட்ப நிறுவனத்தைச் சார்ந்த மொழியிலாளர்கள் கண்டறிந்துள்ளனர். ""ஆதிகாலத்தில், காடுகளில் வாழ்ந்த மனிதர்கள், பறவைகள் வெளிப்படுத்தும் ஓசையை கவனித்து, பேசக் கற்றுக்கொண்டிருப்பர். 80 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன், இரண்டு அடுக்குகளையும் ஒன்றிணைத்து, மேம்பட்ட, மொழி வடிவை உருவாக்கினர்,'' என, மொழியியல் பேராசிரியர், ஷிகெரு மியாகவா தெரிவித்து உள்ளார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
பறவைகளின் மொழியிலிருந்து மனிதன் பேச கற்று இருக்கலாம் என்ற கூற்று சரியானதே.ஆனால் பறவைகளின் குணங்களை மட்டும் அவைகளிடமிருந்து மனிதன் கற்றுக்கொள்ளவில்லை.அப்படி கற்று இருந்தால் மனிதன் அன்புடன் அனைவரையும் நேசித்து இருப்பான்.குரோதமும் ,விரோதமும் ,கொலை நோக்கமும் ,பொய்யும் புரட்டும் ,திருட்டும் அவனிடம் இல்லாமல் வாழ்ந்திருப்பான்...

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.