கோபிசெட்டிபாளையம்: தமிழகத்தில் பல்வேறு வகையான ஆவணங்களுக்காக முத்திரைத்தாள் பயன்படுத்தப்படுகிறது. நிலம் வாங்குதல், ஒப்பந்தம் போடுதல், கிரையம், வங்கி கடன், அடமானம் போன்றவைக்கு அதிகளவில் முத்திரைத்தாள் பயன்படுத்தப்படுகிறது. கருவூலக அலுவலகத்தில் லைசென்ஸ் பெற்றவர்கள் மூலமே, முத்திரைத்தாள் விற்பனை செய்யப்படுகிறது.
கடந்த, 1998ல் முத்திரைத்தாள் விற்பனைக்கான கமிஷன் தொகை உயர்த்தப்பட்டது. 1998ம் ஆண்டில், 50 ரூபாய் வரையிலான முத்திரைதாளுக்கு இரண்டு சதவீதத்தில் இருந்து, 2.4 சதவீதமும், 51 ரூபாயில் இருந்து, 100 ரூபாய் வரையிலான முத்திரைத்தாளுக்கு, 1.5 சதவீதத்தில் இருந்து இரண்டு சதவீதமும், 101 ரூபாயில் இருந்து, 1,000 ரூபாய் வரையிலான முத்திரைத்தாளுக்கு, 0.3 சதவீதம், 1,001 ரூபாயில் இருந்து, 5,000 ரூபாய் வரையிலான முத்திரைத்தாளுக்கு, 0.1 சதவீத்தில் இருந்து, 0.15 சதவீதமும் உயர்த்தப்பட்டது.
நிலமதிப்பீடு உயர்த்தப்பட்ட பின் கடந்தாண்டில் இருந்து, 5,001 ரூபாயில் இருந்து, 25 ஆயிரம் ரூபாய் வரையிலான முத்திரைத்தாள் அறிமுகம் செய்யப்பட்டது. இதற்கு, 0.05 சதவீத கமிஷன் வழங்கப்படுகிறது.
கடந்த, பத்து ஆண்டுகளாக ரியல் எஸ்டேட் தொழில் கொடி கட்டி பறப்பதால் முத்திரை தாள் விற்பனை அதிகளவில் உள்ளது. சென்ற ஆண்டு நிலமதிப்பீடு, 300 சதவீதம் வரை, உயர்த்தப்பட்டதால் முத்திரைத்தாள் விற்பனை மேலும் அதிகரித்துள்ளது. முத்திரைத்தாள் விற்பனை அதிகரித்தபோதிலும், முத்திரைத்தாள் விற்பனைக்கான கமிஷன் தொகை மிகவும் குறைந்தளவே கிடைப்பதால், கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது.
முத்திரைத்தாள் விற்பனையாளர் ஒருவர் கூறியதாவது:
கடந்த, 1998ல் தி.மு.க., ஆட்சியில் முத்திரைத்தாள் விற்பனை கமிஷன் தொகை சிறிதளவு உயர்த்தப்பட்டது. அதன்பின், ஆட்சிகள் மாறியும் கமிஷன் தொகை உயரவில்லை. கடந்தாண்டில், நில மதிப்பீடு, 300 சதவீதம் வரை உயர்த்தப்பட்டதால், 250 ரூபாய்க்கு விற்கப்பட்ட ஒரு சதுரடி நிலம், 750 ரூபாய், 1,000 ரூபாய் என, உயர்ந்துள்ளது. நில மதிப்பீட்டில், ஏழு சதவீதத்துக்கு முத்திரைத்தாள் வாங்க வேண்டும்.
இதில், 50 ஆயிரம் ரூபாய்க்கு முத்திரைத்தாள் விற்பனை செய்தால், 25 ரூபாய் கமிஷன் கிடைக்கிறது. பல லட்சம் கொடுத்து முத்திரைத்தாளை வாங்கி, பல நாள் வைத்திருந்து விற்பனை செய்யும்போது வட்டிக்கு கூட தேராது.
முத்திரைத்தாள் கமிஷனை அரசு உயர்த்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.