தம்மம்பட்டி: தம்மம்பட்டி போஸ்ட் ஆஃபீஸில், பீட் 1 போஸ்ட்மேனாக பணிபுரியும் காதர்மொய்தீன், 59 , என்பவர், தினமும் வருகை பதிவேட்டில் கையெழுத்து மட்டும் போட்டு விட்டு, தன் மகன் அனீஸ், 25, என்பவரிடம் கடிதங்களை கொடுத்து டெலிவரி செய்ய அனுப்பி வருகிறார். இதனால், பலருக்கு கடிதங்கள் கிடைப்பதில் என்றும், ஏராளமான குளறுபடி நடப்பதாக புகார் எழுந்துள்ளது. "முதியோர் உதவி பெறும், 500க்கும் மேற்பட்ட பயனாளிகளை, மாதந்தோறும், தன் வீட்டுக்கு வரவழைத்து உதவித் தொகை வழங்குகிறார். போஸ்ட் மாஸ்டரிடம் புகார் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை' என்றும் புகார் தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்து, தம்மம்பட்டி போஸ்ட் மாஸ்டர் தனசேகரனிடம் கேட்ட போது, ""போஸ்ட்மேன், தினமும் ஆஃபீஸில் கையெழுத்து போட்டுவிட்டு லெட்டர்களை எடுத்து போகிறார். யார் டெலிவரி செய்கிறார்கள் என்று, நான் பின்னால் சென்று பார்க்க முடியாது,'' என அலட்சியமாக பதில் கூறினார்.
புகார் குறித்து, விசாரிப்பதை அறிந்த போஸ்ட்மேன் காதர்மொய்தீன், காலைக்கதிர் நிருபரிடம் தொடர்பு கொண்டு கூறியதாவது:
""எனக்கு ஆப்ரேஷன் செய்யப்பட்டுள்ளது. கடிதங்களை டெலிவரி செய்யும் அளவுக்கு உடல் நலமாக இல்லை. துறை ஆய்வாளரிடம் கூறிவிட்டுத்தான், என் மகனை அனுப்புகிறேன்,'' என்றார்
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.