கன்னியாகுமரியில் காணாமல் போன இளம்பெண் உடல் அழுகிய நிலையில் தோண்டி எடுப்பு| Dinamalar

தமிழ்நாடு

கன்னியாகுமரியில் காணாமல் போன இளம்பெண் உடல் அழுகிய நிலையில் தோண்டி எடுப்பு

Added : மார் 17, 2013 | கருத்துகள் (1)
Advertisement

கன்னியாகுமரி:கன்னியாகுமரியில் காணமல் போன இளம்பெண் கடத்தி கொலை செய்யப்பட்டார். அவரது பிணம் நேற்று அழுகிய நிலையில் தோண்டி எடுக்கப்பட்டது.
இந்த சம்பவம் குறித்த விபரம் வருமாறு;-கன்னியாகுமரி அந்தோணியார் தெருவை சேர்ந்தவர் ராபின் (33) மீன்பித்தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி கலையரசி (29). இவர்களுக்கு ஆன்ட்ரூ (3) என்ற குழந்தை உள்ளது. கலையரசி வீட்டில் வைத்து சேலை வியாபாரம் செய்துவந்தார். கடந்த பிப்ரவரி மாதம் 12-ம் தேதி மாலை 6 மணியளவில் கலையரசி சேலை வியாபாரம் தொடர்பாக பணம் வசூல் செய்வதற்காக சென்றுள்ளார். ஆனால் நீண்ட நேரமாகியும் அவர் வீடுதிரும்பவில்லை. இதனால் பதட்டமடைந்த கணவர் ராபின் மற்றும் உறவினர்கள் பல இடங்களிலும் தேடியுள்ளனர். ஆனால் கலையரசியை பற்றி எந்த தகவலும் கிடைக்கவில்லை. இதனால் 13-ம் தேதி மனைவி காணாமல் போனதாக ராபின் கன்னியாகுமரி போலீசில் புகார் செய்தார். இது குறித்து விசாரணை நடத்திய போலீசார் 17-ம் தேதி வழக்குபதிவு செய்தனர்.
அதன் பிறகு கலையரசியை கண்டுபிடிக்க போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இந்நிலையில் ஒரு மாதமாகியும் எந்த தகவலும் இல்லாததால் கவலையடைந்த கணவர் ராபின் மற்றும் உறவினர்கள் மாவட்ட எஸ்.பி மணிவண்ணணிடம் புகார் அளித்தனர். இதனையடுத்து இப்புகாரை விசாரித்து நடவடிக்கை எடுக்குமாறு கன்னியாகுமரி டி.எஸ்.பி.,பாலகிருஷ்ணனுக்கு உத்தரவிட்டார். இந்நிலையில் காணாமல் போன கலையரசியை கண்டுபிடிக்க நடவடிக்கை எடுக்குமாறு கன்னியாகுமரியை சேர்ந்த 500 -க்கும் மேற்பட்ட மீனவ பெண்கள் கன்னியாகுமரி போலீஸ்ஸ்டேஷனை முற்றுகையிட்டு இரண்டு மணிநேரம் ஆர்ப்பாட்டம் நடத்தினர். கன்னியாகுமரி பங்குதந்தை நசரேன், பங்குபேரவை துணைதலைவர் ஜோசப் ஆகியோரிடம் கன்னியாகுமரி டி.எஸ்.பி.,பாலகிருஷ்னன் காணாமல் போன கலையரசியை விரைவில் கண்டுபிடிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்ததையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.
இந்நிலையில் கலையரசி காணாமல் போனது குறித்து போலீசார் சேகரித்த தகவலின் படி சந்தேகத்தின் பேரில் கன்னியாகுமரி அந்தோணியார் தெருவைசேர்ந்த சிம்போனியன் (52) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தினர் . அவர் அளித்த தகவலின் பேரில் மேலும் இரண்டு பேரை கைது செய்து விசாரணை நடத்தி னர். விசாரணையில் கலையரசியை கொலை செய்து நான்கு வழிசாலையில் முருகன்குன்றம் அருகே உள்ள ஒரு காலி இடத்தில் புதைத்ததாக கூறியுள்ளனர். நேற்று முன்தினம் இரவோடுஇரவாக போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர். ஆனால் இரவு நேரம் என்பதால் சம்பவஇடத்தை பார்வையிட்டு திரும்பியுள்ளனர். ஆனால் இந்த கொலை சம்பவத்தில் 5 முதல் 10 பேர் வரை தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகம் நிலவியது.

உடல் தோண்டி எடுப்பு
காணாமல் போன கலையரசி கொலை செய்யப்பட்டு முருகன் குன்றம் அருகே புதைக்கப்பட்ட சம்பவம் கன்னியாகுமரி பகுதியில் காட்டுதீ போன்று பரவியது. மேலும் கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டதாக கூறப்படும் இடம் தனியார் ஒருவர் சரி செய்து பிளாட் போட்டுள்ளார். இதனால் 14-ம் தேதி இரவு ஒரு இடத்தை காட்டி இங்குதான் புதைத்தேன் என்று கூறிய சிம்போராயனால் காலையில் எந்த இடம் என்று சரியாக கூறமுடியவில்லை. இதனால் காலையில் இருந்தே முருகன்குன்றம் பகுதியில் முகாமிட்டிருந்த போலீசார் எந்த இடத்தை தோண்டுவது என்று குழப்பமடைந்தனர்.
ஆனால் இச்சம்பவத்தில் தொடர்புடைய சிம்போனியன் இங்கு தான் புதைத்தேன் என்று கூறியதால் போலீசார் வேறு வழியின்றி இரண்டு ஜே.சி.பி., மூலம் அந்த இடம் முழுவதும் தோண்டும் பணியில் ஈடுபட்டனர். இரவு முழுவதும் நடந்த பணி நேற்று காலை 11 மணிவரை நீடித்தது. இந்நிலையில் அந்த நிலத்தின் மேற்கு பகுதியில் 3 அடி ஆழத்தில் சாக்கு ஒன்று தென்பட்டது. துர்நாற்றம் வீசிய நிலையில் சாக்கு மூடைகாணப்பட்டதால் உடனடியாக தோண்டும் பணி நிறுத்தப்பட்டு போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதையடுத்து கன்னியாகுமரி டி.எஸ்.பி., பாலகிருஷ்னன், இன்ஸ்பெக்டர் தங்கராஜ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டனர்.
இதனையடுத்து மாலை 3 மணியளவில் பிணம் வெளியே எடுத்து பிரேதபரிசோதனை செய்ய முடிவு செய்யப்பட்டது. அகஸ்தீஸ்வரம் தாசில்தார் கவிதா, ஆசாரிபள்ளம் அரசு மருத்துவ கல்லுரி ஆஸ்பத்தரி டாக்டர் ராஜேஷ் மற்றும் மருத்துவ குழுவினர் வந்தனர். பின்னர் பிணம் தோண்டும் பணி தொடங்கியது. அப்போது கலையரசியை கொலை செய்த வழக்கில் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ள முக்கிய குற்றவாளியான கன்னியாகுமரி அந்தோணியார் தெருவை சேர்ந்த சிம்போரியன் (52)
என்பவரை தென்தாமரைகுளம் போலீஸ்ஸ்டேசனில் இருந்து டெம்போடிராவலர் வேனில் பலத்த போலீஸ்பாதுகாப்புடன் சம்பவ இடத்திற்கு அழைத்து வந்தனர். அப்போது நான்கு வழிசாலையில் திரண்டு இருந்த ஏராளமான ஆண்களும், பெண்களும் அவரை திட்டி தீர்த்தனர். பின்னர் பிணம் தோண்டி எடுக்கப்பட்டு வெளியே வைக்கப்பட்டது. பிணத்தை சிம்போரியன் குனிந்து அடையாளம் காட்டினார். பிணம் புதைக்கப்பட்டு ஒரு மாதத்திற்கும் மேலாகிவிட்டதால் மஞ்சள்நிற சுடிதாரில் அழுகிய நிலையில் தோல் உரிந்து, வயிறு உப்பிய நிலையில் காணப்பட்டது. பிணத்தின் தலைமுடி ஒரளவு இருந்தது.பிணத்தை வெளியே எடுத்து வைத்தபோது இறந்த கலையரசியின் அண்ணன் மற்றும் கணவர் ராபின் ஆகியோர் தரையில் அழுது புரண்டனர். அவர்களை கன்னியாகுமரி பங்குதந்தை நசரேன் ஆறுதல் படுத்தினார். சுமார் அரை மணிநேர பிரேதபரிசோதனைக்கு பின்னர் கலையரசியில் உடல் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ஆம்புலன்சில் ஏற்றப்பட்டு உறவினர்களிடம் ஓப்படைக்கப்பட்டது.

போலீசுடன் வாக்குவாதம்

பிரேதபரிசோதனைக்கு பின்னர் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும் போது அங்கு கூடியிருந்த கலையரசியின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் இந்த கொலையை சிம்போரியன் மட்டும் தனியாக செய்திருக்கமுடியாது. இந்த கொலையில் பின்ணணியில் இன்னும் பல முக்கிய நபர்கள் இருக்கின்றனர். அவர்களையும் போலீசார் கைது செய்து எப்.ஐ.ஆரில் சேர்க்க வேண்டும் என்று கன்னியாகுமரி டி.எஸ்.பி பாலகிருஷ்னன்,இன்ஸ்பெக்டர் தங்கராஜ் ஆகியோரிடம் கடும் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். உண்மையான குற்றவாளிகள் யாராக இருந்தாலும் அவர்கள் கைது செய்யப்படுவார்கள். என்று வாக்குவாதத்தில் ஈடுபட்டவர்களிடம் போலீசார் கூறினர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Aravind Kumar - Chennai,இந்தியா
17-மார்-201317:15:46 IST Report Abuse
Aravind Kumar வேட்டையாடு விளையாடு பாக்கலையோ வேட்டையாடு விளையாடு.............
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை