திருநெல்வேலி:தென்காசி பஞ்., யூனியன் பகுதிகளில் கட்டப்பட்டு வரும் 185 வீடுகளை இம்மாத இறுதிக்குள் முடிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டது.
தென்காசி யூனியன் சில்லரைபுரவில் ஒரு லட்சத்தில் முடிக்கப்பட்ட சிமென்ட் சாலை பணி, 1 லட்சத்தில் குடிநீர் திட்ட பணிகள், 7 லட்சத்தில் சுடுகாட்டு கொட்டகை அமைக்கும் பணி, 2.60 லட்சத்தில் பூமாரியம்மன் கோயில் தெருவில் அமைக்கப்பட்டு வரும் தார் சாலை பணி, 3.20 லட்சத்தில் அமைக்கப்பட்ட அங்கன்வாடி கட்டட பழுது நீக்க பணிகளை கலெக்டர் சமயமூர்த்தி பார்வையிட்டார்.
ஆயிரப்பேரி பஞ்.,ல் 2.60 லட்சத்தில் குலசேகரப்பேரி மயானத்திற்கு தார் சாலை அமைக்கும் பணி, தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் 7 லட்சத்தில் ஆயிரப்பேரி குளம் ஆழப்படுத்தும் பணிகளும் பார்வையிடப்பட்டது.
தார் சாலை அமைக்கும் போது பிரதான சாலையில் இணையும் இடம் விரிவாக அமைக்கவும், சாலையின் வளைவு மற்றும் மையப் பகுதிகளில் தண்ணீர் தேங்காத வண்ணம் சாலை அமைக்கவும், தென்காசி பஞ்., யூனியன் பகுதியில் கட்டப்பட்டு வரும் 185 வீடுகளை வரும் 31ம் தேதிக்குள் கட்டி முடிக்கவும், பணிகளின் தரத்தை உறுதி செய்யவும் பி.டி.ஓக்கள் மற்றும், ஒன்றிய இன்ஜினியர்களுக்கு உத்தரவிடப்பட்டது.
இதில் திட்ட அலுவலர் அமானுல்லா, செயற்பொறியாளர் அசன் இப்ராகிம், தென்காசி உதவி இன்ஜினியர் குமரேசன் மற்றும் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.