புதுடில்லி : வரவிருக்கும் செப்டம்பர் மாதம் நடக்கவுள்ள சர்வதேச சீட்டாட்ட போட்டியில் இந்தியா சார்பில் போட்டியிடும் 6 பேர் தகுதிதேர்வில் செய்யப்பட்டுள்ளனர். இதில் முன்னாள் பெட்ரோலிய துறை அமைச்சர் முரளிதியோராவின் மனைவியும் ஒருவராக தேர்வாகியுள்ளார்.
வரும் செப்- மாதம் இந்தோனேஷியா பாலியில் மகளிர் உலக சீட்aடாட்ட சாம்பியன்ஷிப் போட்டி நடக்கிறது.16 முதல் 29 வரை நடக்கும் இந்த போட்டியில் ஆடுவதற்கு இந்திய வீராங்கனைகள் 6 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் பெயர் விவரம் வருமாறு : ஹேமா ( மாஜி பெட்ரோலிய துறை அமைச்சர் முரளி தியோராவின் மனைவி ) , டூட்டு நருல்லா, ஆஷா சுரானா, ரீட்டா ஷோக்ஸி, பாரதிடெய், மரியமான கர்மார்கர், ஆகியோர் அடங்குவர். இந்த வீராங்கனைகள் 3 நாள் நடந்த தேசிய அளவிலான பயிற்சி மையத்தில் இவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். பெட்ரோலிய துறை அமைச்சராக இருந்த முரளி தியோரா கடந்த ஆண்டில் பதவியை ராஜினாமா செய்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.