புதுடில்லி: இத்தாலி தூதர் டானியேல் மான்சினி கைது செய்ய வாய்ப்பு உள்ளதாக வழக்கறிஞர் ஹாரிஸ் சால்வே கூறியுள்ளார். இந்திய கடல் பகுதியில் மீன்பிடித்து கொண்டிருந்த கேரள மீனவர்களை இத்தாலிய கடற்படை வீரர்கள் சுட்டுக்கொன்றனர். இது தொடர்பான வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நடைபெற்று வருகிறது. அவர்கள் ஓட்டுப்போட சொந்த ஊருக்கு ல்ல அனுமதி கேட்டனர். இதனையடுத்து சுப்ரீம் கோர்ட் சில நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கியது. இந்நிலையில் கடற்படை வீரர்கள் நாடு திரும்ப மாட்டார்கள் என அந்நாட்டு அரசு அறிவித்தது. இதனையடுத்து பரபரப்பு ஏற்பட்டது. கடற்படை வீரர்கள் உடனடியாக இந்திய திரும்ப வேண்டும் என எச்சரிக்கை பிரதமர் விடுத்தார். இதனையடுத்து அந்நாடு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ஹரீஸ் சால்வே வழக்கு விசாரணையில் விலகிக்கொண்டிடார். இந்நிலையில் இது தொடர்பாக பேட்டியளித்த ஹரீஸ் சால்வவே தனியார் டிவிக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது: கோர்ட்டிற்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற தவறினால் அது கோர்ட் அவமதிப்பு வழக்காகிறது. இத்தாலி தூதரை கைது செய்ய சுப்ரீம் கோர்ட் உத்தரவிடும் என கூறினார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.