Karunanidhi warn central government | கூட்டணியிலிருந்து விலகுவதில் தி.மு.க,. உறுதி: மீண்டும், மீண்டும் சொல்கிறார் கருணாநிதி | Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

கூட்டணியிலிருந்து விலகுவதில் தி.மு.க,. உறுதி: மீண்டும், மீண்டும் சொல்கிறார் கருணாநிதி

Updated : மார் 17, 2013 | Added : மார் 17, 2013 | கருத்துகள் (95)
Advertisement
கூட்டணியிலிருந்து  விலகுவதில் தி.மு.க,. உறுதி: கருணாநிதி பேட்டி

சென்னை: இலங்கைக்கு எதிரான தீர்மானத்தில் திருத்தம் கொண்டு வராவிட்டால் அமைச்சரவையிலிருந்து விலகுவதில் தி.மு.க,. உறுதியாக உள்ளது என அக்கட்சி தலைவர் கருணாநிதி இன்று மீண்டும் வலியுறுத்தி கூறியுள்ளார்.

இலங்கையில், விடுதலை புலிகளுடன் நடந்த கடைசி கட்ட போரின் போது, பெருமளவில் போர்க் குற்றங்கள் நிகழ்ந்ததாக குற்றம் சாட்டப்படுகிறது. இந்த போர்க் குற்றங்கள் தொடர்பாக, ஐக்கிய நாடுகள் சபையின், மனித உரிமை கமிஷனில், இலங்கைக்கு எதிராக, அமெரிக்கா தீர்மானம் கொண்டுவர உள்ளது. சில நாட்களுக்கு முன்னர், இலங்கைக்கு எதிரான அமெரிக்க தீர்மானத்தை, மத்திய அரசு ஆதரிக்கா விட்டால், ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில்இருந்து, தி.மு.க., விலகும் சூழ்நிலை உருவாகலாம்' என, அந்தக் கட்சியின் தலைவர் கருணாநிதி மிரட்டல் விடுத்தார். இந்த மிரட்டலை காங்கிரஸ் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை என டில்லி தகவல்கள் தெரிவிக்கின்றன. நேற்று கூட மத்திய அரசிடம் இருந்து எவ்வித பதிலும் வரவில்லை என்றார். இதனை தொடர்ந்து இன்று கருணாநிதி நிருபர்களிடம் பேசுகையில் விலகுவது குறி்‌த்து மீண்டும் வலியுறுத்தி ‌கூறினார்.


இலங்கைக்கு எதிராக ஓட்டு- சிதம்பரம்:

இது தொடர்பாக காரைக்குடியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய மத்திய நிதியமைச்சர் சிதம்பரம். இலங்கையில் சுதந்திரமான சர்வதேச விசாரணை நடைபெற வேண்டும் என தீர்மானம் கொண்டு வரப்பட்டால், அதனை இந்தியா ஆதரிக்கும் என்ற நம்பிக்கை உள்ளது என கூறினார். மேலும் அவர், தமிழ் மக்களுடன் இந்தியா இருக்கும் என்றும் மாணவர்களுக்கு உறுதியளித்தார்.


கருணாநிதி மீண்டும் எச்சரிக்கை:

இந்நிலையில் கருணாநிதி இன்று பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது, அமெரிக்க தீர்மானத்தில் திருத்தம் கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், இலங்கையில் நடந்தது இனப்படுகொலை என தீர்மானத்தில் மாற்றம் செய்ய வேண்டும் எனக்கூறி பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் காங்கிரஸ் தலைவர் சோனியாவுக்கு கடிதம் எழுதியுள்ளேன் . மேலும் அவர், இலங்கையில் நடந்த போர்க்குற்றம் குறித்து சர்வதேச விசாரணைக்குழு அமைக்க வேண்டும்.
குறுகிய காலத்திற்குள் விசாரணையை முடித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். மத்திய அரசு நடவடிக்கை எடுக்க தவறினால் மத்திய அமைச்சரவையில் தி.மு.க., நீடிக்காது. கூட்டணியிலிருந்து விலகும் முடிவில் தி.மு.க., உறுதியாக உள்ளது. தீர்மானத்தில் திருத்தம் கொண்டுவராவிட்டால் இலங்கை தமிழர்களுக்கு அநீதி ஏற்படும். இவ்வாறு அவர் கூறினார். மேலும் தமிழகத்தில் சிங்களர்கள் தாக்கப்படுவது சரியல்ல என்றும் கூறினார்.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (95)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ilakkuvanar Thiruvalluvan - chennai,இந்தியா
18-மார்-201305:28:40 IST Report Abuse
Ilakkuvanar Thiruvalluvan புலி வருது புலி வருது என்று அடிக்கடி சொல்பவன் பேச்சை யாரும் நம்ப மாட்டார்கள் என்பதுபோல் ஆகிவிட்டது. 99 விழுக்காடு இந்தியா ஏதும் சப்பைத் தீர்மானம் கொண்டுவர முடிவெடுத்து அதனால் இவ்வாறு உறுதியாக முதுபெரும் தலைவர் அறிவிக்கிறார்என்ற எண்ணம்தான் ஏற்படுகிறது. இதன் காரணம் அவரது இனப்படுகொலைக்கால நடவடிக்கைகளே நாட்டு மக்களையும் இன மக்களையும் மறந்து வீட்டு மக்களை எண்ணியதால் அவரது தலை சாயலாயிற்று. எனவே, நாளை என்ன நடக்கப் போகிறது என்பதை அறிந்தபின்பே எதையும் சொல்வது பொருத்தமாக இருக்கும். அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் /தமிழே விழி தமிழா விழி எழுத்தைக் காப்போம் மொழியைக் காப்போம் இனத்தைக் காப்போம்/
Rate this:
Share this comment
Cancel
என்னுயிர்தமிழகமே - hyderabad,இந்தியா
18-மார்-201303:41:09 IST Report Abuse
என்னுயிர்தமிழகமே "அரை எண் 4 ல் " இந்திய தொலை காட்சிகளில் முதல் முறையாக, 'ஏன் குவாற்றோசி, புர்லியா, இட்டலிய மன்னர்களுக்கு மாத்திரம் பாவ மன்னிப்பு, எனது பெண்ணும் இத்தாலிய கையெடுப்பு மாதிரிதானே, எதற்கு இல்லை மன்னிப்பு,? என்ற வசனங்களோடு திரைக்கு வந்து சில மாதங்களே ஆனா புத்தம் புதிய திரைப்படம் , காண தவறாதீர்,
Rate this:
Share this comment
Cancel
tamizhan - chennai  ( Posted via: Dinamalar Android App )
18-மார்-201302:52:56 IST Report Abuse
tamizhan விலகுங்கள் சரியான முடிவு... அதேபோல் இனி தேர்தலில் நிற்கவே மாட்டோம் என்றும் முடிவு எடுங்கள்...
Rate this:
Share this comment
Cancel
Kdr - ramnad  ( Posted via: Dinamalar Android App )
18-மார்-201300:21:21 IST Report Abuse
Kdr கருணஅநிதி்யின் பல தி்ருவிளையஅடல்களில் இதுவும் ஒன்று
Rate this:
Share this comment
Cancel
ram - Alappuzha,பெலிசி
17-மார்-201319:53:23 IST Report Abuse
ram அடுத்தமுறை மத்தியில் காங்கிரெஸ் வராது என்பது அனைவருக்கும் தெரியும் , கூட்டணி மாறவேண்டும் என்று முடிவு எடுத்து விட்டு அதற்காக இலங்கை தமிழர் பிரச்சனைகாக மறவாது போல நாடகம் நடத்துவது கேவலமாக இருக்கிறது , நாயர் கடையில் இருந்து நல்ல சூட .... ஒரு சொம்பு ..... டீ வாங்கி குடிங்க அப்பவாவது சூடு சுரன வருமான்னு பார்க்கலாம் .
Rate this:
Share this comment
Cancel
albert B alert - thiruvarur,இந்தியா
17-மார்-201319:53:07 IST Report Abuse
albert  B  alert எப்படித்தான் இவரால இப்படி வாய் கூச முடியாம பேச முடியுதுன்னு தெரியலடா சாமி 9 வருஷம் எல்லாத்தையும் அனுபவசிட்டு இப்ப விலக போரராம் ஏன் மிஸ்டர் திருக்குவளை உங்க பொண்ணுமேல 2 ஜி ஊழல் வந்தப காங்கிரஸ் வேணும்னே இப்படி பண்றங்கனு சொல்லிடு விலக வேண்டியது தானே இல்ல அப்பாவி மக்களை கொத்து கொத்த கொன்றார்களே அப்ப வர வேண்டியதுதானே மத்திய அரசு போர் முடிசிடுன்னு என்கிட்ட பொய் சொன்னிச்சு அத நம்பித்தான் நானும் சொன்னேன் அதனால பல ஆயிரம் மக்கள் செத்தாங்கனு சொல்லிட்டு வரலாம்ல என்ன எங்கள எல்லாம் பார்த்த கேனபயலுக மாதிரி இருக்கா நல்ல சம்பாதிச்சிட்டு இப்ப நடிப்பா போதும் சார் எங்கள கோப படுத்தாதிங்க
Rate this:
Share this comment
Cancel
Mani - CHENNAI  ( Posted via: Dinamalar Android App )
17-மார்-201319:52:48 IST Report Abuse
Mani Thalaivare 2g case innum mudiyala. Marandhutela?
Rate this:
Share this comment
Cancel
K.vijayaragavan - chennai,இந்தியா
17-மார்-201319:39:42 IST Report Abuse
K.vijayaragavan கலைஞரின் இந்த அறிக்கையை படிக்க முடியாமல் என் கண்கள் பனிக்கின்றன. ஈழ தமிழர் மீது என்ன அக்கறை?என்ன அக்கறை? ஆஹா. இது அல்லவா தமிழ் உணர்வு? என் நெஞ்சம் இனிக்கிறது. காரியம் முடியும் வரை காலை பிடி காரியம் முடிந்ததும் கழுத்தை பிடி என்று சொல்வழக்கு ஒன்று உண்டு. அது கலைஞருக்கு மிகவும் பொருந்தும். ஏற்கனவே ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் காங்கிரஸ் காலை வாரிய கடுப்பு உள்பட பல வகையிலும் காங்கிரசின் ஊதாசீனத்தால் காங்கிரசை கழட்டி விட காலம் பார்த்துக்கொண்டிருந்த கருணாநிதிக்கு ஈழ தமிழர் பிரச்சினையில் காங்கிரஸ் மீது தமிழ் நாட்டு மக்கள் மீது வெறுப்பு அதிகமாகி வருவது தெரிந்ததும், காங்கிரஸ் கூட்டணியில் இருந்து கொண்டு அடிக்க வேண்டிய கொள்ளைகளை எல்லாம் அடித்து விட்டு, இப்போது நாடாளுமன்றத்துக்கு தேர்தலும் வரப்போகும் நிலையில், காங்கிரசின் மீது மக்களுக்கு வெறுப்பு நாளுக்கு நாள் அதிகமாகிக்கொண்டு வருகிறது என்றதும் ஈழ தமிழர் மீது பாசம் பொத்துக்கொண்டு வர, இந்த மிரட்டலை வெளியிட்டிருக்கிறார். சிந்திக்க தெரிந்த எவரும் இதை சீரியசாக எடுத்துக்கொள்ள மாட்டார்கள். காங்கிரசே இந்த மிரட்டலை சட்டை செய்யவில்லை. போனால் போதும் என்ற நிலையில் இருந்த காங்கிரசுக்கு இது மிகவும் தித்திப்பான முடிவு. வேண்டுமானால் கலைஞரே தயவு செய்து இந்த ஒரு விஷயத்தில் பல்டி அடித்து விடாதீர்கள் என்று காங்கிரஸ் தரப்பில் இருந்து வேண்டுகோள் வேண்டுமானால் வரலாம். கலைஞரின் பல காமெடிகளில் இதுவும் ஒன்று. என்ன தான் தலைகீழாய் நின்றாலும், அன்று தன் மக்களுக்காக டெல்லிக்கு பல முறை காவடி எடுத்ததில் காட்டிய வேகத்தை ஈழ தமிழர் பிரச்சினையில் காட்டாததை மறைக்க முடியாது. தமிழக மக்கள் உணர்ச்சி வசப்பட்டு முடிவு எடுப்பவர்கள். எந்த விஷயத்திலும் சிந்தித்து முடிவு எடுக்க தெரியாதவர்கள். அன்று ஈழ தமிழர்கள் இலங்கை ராணுவத்தால் அழிக்கப்பட்டுக்கொண்டிருந்தபோது நீங்கள் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்ததை கண்டு வேதனையில் புழுங்கியவர்கள். அந்த வடு இன்னும் அவர்கள் மனத்தில் நீங்காது இருக்கிறது. அதை உங்களின் வாய்ஜாலத்தால் ஒரு நாளும் மாற்ற முடியாது. பேசாமல் அடுத்த கூட்டணிக்கு அச்சாரம் போடும் வழியை பாருங்கள். காங்கிரசுக்கு எப்படி ஆப்பு வைக்கலாம் என்று பாருங்கள். இந்த தேர்தலிலாவது கேப்டனை வளைக்க பாருங்கள். காங்கிரசை அனாதையாக்கி பாராளுமன்ற தேர்தலில் தோற்கடிக்க உங்களாலானதை செய்யுங்கள். அதுவே நீங்கள் தமிழ்நாட்டுக்கும், ஈழ தமிழர்களுக்கும், பாரத நாட்டுக்கும் செய்த துரோகங்களுக்கு பிராயச்சித்தமாக இருக்கும்.
Rate this:
Share this comment
Cancel
MANI.G - abudhabi,ஐக்கிய அரபு நாடுகள்
17-மார்-201319:31:48 IST Report Abuse
MANI.G அடுத்த நாடகத்திற்கு தலைப்பு ரெடி -ஒரு கோடி பேரிடம் கையழுத்து
Rate this:
Share this comment
Cancel
SaS - Dubai  ( Posted via: Dinamalar Android App )
17-மார்-201319:23:49 IST Report Abuse
SaS இப்போ தமிழ்நாடு இருக்க இறுக்கமான சூழ்நிலைல... இந்த மாதி்ரி நகைச்சுவையா பேசுறது மனசுக்கு கொஞ்சம் இதமா இருக்கு... விடுங்கப்பா அவர... பேசட்டும்..!
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை