புதுச்சேரி: புதுச்சேரியில் பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்த மத்திய அமைச்சர் நாராயணசாமி கூறுகையில், மீனவர்களை காக்க முப்படைகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. ஹெலிகாப்டர், நவீன ரோந்து படகு மூலம் கண்காணிக்க கடலோர காவல்படைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. தமிழக மீனவர்களை கைது செய்யக்கூடாது என வெளியுறவுத்துறை அமைச்சகம் மூலம் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. எச்சரிக்கையை மீறினால் கடும் விளைவை இலங்கை சந்திக்க நேரிடும் என கூறினார்.