மொகாலி: மொகாலியில் இந்தியாவுக்கும் ஆஸ்திரேலியாவுக்கும் இடையே நடைபெறும் 3வது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியின் 4ம் நாள் ஆட்ட நேர முடிவில், இரண்டாவது இன்னிங்சில் ஆஸ்திரேலியா அணி 3 விக்கெட் இழப்பிற்கு 75 ரன்கள் எடுத்துள்ளது. வார்னர் 2 ரன்னிலும், கோவன் 8 ரன்னிலும், ஸ்மீத் 5 ரன்னிலம் ஆட்டமிழந்தனர். ஹியுக்ஸ் 53 ரன்னிகளுடனும்,, லியோன் 4 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். புவனேஸ்குமார் 3 விக்கெட்களை வீழ்த்தினார்.முன்னதாக இந்தியா முதல் இன்னிங்சில் 499 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. இந்திய அணி சார்பில் தவான் 187 ரன்களும், முரளி விஜய் 153 ரன்களும், கோஹலி 67 ரன்களும், டெண்டுல்கர் 37, புவனேஸ்குமார் 18 ரன்களும் எடுத்தனர். ஆஸி., அணி சார்பில் சிடில் 5 விக்கெட்களை வீழ்த்தினார். இதன் மூலம் இந்திய அணி 91 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. க ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 408 ரன் எடுத்துள்ளது.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.