அவிநாசி: கோவை மாவட்டம் அவிநாசி அருகே மனைவியை பெட்ரோல் ஊற்றி எரித்த கணவனை போலீசார் தேடி வருகின்றனர். பெரியநாக்கன்பாளையம் பகுதியை சேர்ந்தவர் வீரலட்சுமி ( 27 ) . இவரது கணவர் செந்தில்குமார் வேறோரு பெண்ணுடன் தொடர்பு வைத்துள்ளார். இது தொடர்பாக இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு இருந்து வந்தது. இந்நிலையில் பைக்கில் மனைவியை ஏற்றிக்கொண்டு திருப்பூர் அழைத்து வந்தார். வரும் வழியில் நம்பிகாம்பாளையம் அருகே பைக்கை நிறுத்தி மனைவியை பெட்ரோல் ஊற்றி தீ வைத்து கொளுத்தினார். இதில் உயிருக்கு போராடிய நிலையில் அக்கம், பகத்தில் உள்ளவர்கள் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். சிகிச்சை பலன் அளிக்காமல் வீரலட்சுமி இறந்து போனார். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து செந்தில்குமாரை தேடி வருகின்றனர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.