இந்திய பல்கலை., தரம் கவலைப்படுகிறார் ஜனாதிபதி
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
எழுத்தின் அளவு:
Advertisement

காசிப்பூர் ( உத்தரகண்ட் ) ; இந்திய பல்கலை.,கழகங்கள் தரம் மிக பின்தங்கி இருப்பதாகவும், உலக அளவில் நாம் முன்னேற இன்னும் கடும் பாடுபட வேண்டும் என ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி கவலை தெரிவித்துள்ளார்.

உத்தரகண்டில் இந்தியன் இன்ஸ்டியூட் ஆப் மேனேஜ்மென்ட் தொழிற்கல்லூரியில் முதல் பட்டமளிப்பு விழாவில் பங்கேற்று பட்டங்கள் வழங்கி ஜனாதிபதி பேசுகையில இவ்வாறு குறிப்பிட்டார். இவர் மேலும் பேசியதாவது : இந்திய பல்கலை., களின் செயல்திறன் போதாது. உலக அளவில் செயல்தரம் மிக்க பல்கலை., பட்டியலில் 200 க்குள் கூட நாம்வர முடியவில்லை . இதற்கென நாம் இன்னும் கடுமையாக உழைக்க வேண்டும். இதற்கான வழிமுறைகளை கையாள வேண்டும். வளமான வர்த்தக துறை முன்னேற்றம் நோக்கி நாம் பயணிக்க வேண்டும்.


வர்த்தகம் மற்றும் மேனேஜ்மென்ட் பதிவுகள் 2006 - 2007 விவரப்படி 23 லட்சத்தில் இருந்து 2011 - 2012 ல் 34 லட்சமாக உயர்ந்துள்ளது. புதுமைகள் புகுத்துவதன் மூலம் நாம் மேலும் வளர்ச்சியை அடைய முடியும். இந்த விஷயத்தில் நாம் பின்தங்கியிருக்கிறோம். இது கவலை அளிக்கிறது. முன்னேற்ற வழிகளுக்கு பெரும் சவால்கள் உண்டு என்பதையும் நான் மறுப்பதற்கில்லை. ஆய்வுகளும், கண்டுபிடிப்புகளும் இன்னும் நாம் அதிகம் சமர்ப்பிக்க வேண்டும். இதன் மூலம் நமது தரம் உயர்த்தப்பட வேண்டும் . இவ்வாறு அவர் பேசினார்.Advertisement
Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (2)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
R.Esthov Antony Ashok - Madurai,இந்தியா
17-மார்-201318:33:15 IST Report Abuse
R.Esthov Antony Ashok Dear readers The standard of our Universities is drastically declined , because of irresponsible students and lethargic Academacians(Teachers),Most of the University Professors Abdicated to discharge their duties in the name of Research.Neither research nor teaching is the pitiable state of University education.By awarding marks ineptly,the staffs evades enquiry from the UGC,NAAC etc...
Rate this:
Share this comment
Cancel
Sivramkrishnan Gk - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
17-மார்-201317:39:44 IST Report Abuse
Sivramkrishnan Gk இது என்ன நியாயம்? அமைச்சரா இருந்தபோது கவலை படல, இப்போ கண்கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம். முதல்ல திறமைக்கு மதிப்பு கொடுக்க சொல்லுங்க. எத்தனை நல்ல மதிப்பெண்கள் பெறும் விரும்பிய துறையில் மேல்படிப்பு படிக்க முடியாமல் தவிக்கிறார்கள்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.
மேலும் செய்திகள்